HomeCinema‘எங்க வீட்ல பார்ட்டி' சினிமா விமர்சனம்

‘எங்க வீட்ல பார்ட்டி’ சினிமா விமர்சனம்

Published on

சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிற கதைக்களத்தில் ‘எங்க வீட்ல பார்ட்டி.’

பேஸ்புக் மூலம் நண்பர்களான ஐந்து இளைஞர்கள், இரண்டு இளைஞிகள் ஒரு பார்ட்டியில் கலந்துகொண்டு, குடித்து போதையேறி ஒரு வீட்டுக்குப் போய் தங்குகிறார்கள்.

தங்கியதில் ஒரு பெண் கொலை செய்யப்பட, உடன் தங்கிய ஆறு பேர் மீதும் போலீஸின் சந்தேகப் பார்வை திரும்புகிறது. அத்தனைப் பேருமே, ‘நடந்த கொலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை’ என மறுக்க, விசாரணை முடிவில் ஆறு பேரில் ஒருவர், ‘கொன்றது நான்தான்’ என ஒத்துக் கொள்கிறார்.

அவர் யார்? என்ன காரணம்? என்பது கிளைமாக்ஸ்.

குடிபோதையால் என்ன செய்கிறோம் ஏது செய்கிறோம் என்பது புரியாமல் எதை வேண்டுமானாலும் செய்கிறவர்களை, ‘கே’, ‘லெஸ்பியன்’ என்றெல்லாம் வகைப்படுத்தப்படுகிற ஓரினச் சேர்க்கையாளர்களை கதையின் முக்கிய பாத்திரங்களாக வைத்து ‘எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் யாருக்கும் கெடுதல் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்’ என வருடிக் கொடுக்கிற பாணியில் வலியுறுத்தியிருக்கிறார் இயக்குநர் கே. சுரேஷ் கண்ணா.

யாத்ரா, சாசனா, ஹன்சி வர்கீஸ், சக்தி, ஒமேரா மேத்வின், தயூப், சாய் சதீஷ், கார்த்திகேயன், சிபு சரவணன் முதன்மைப் பாத்திரங்களில் வருகிறவர்கள் கதை எதிர்பார்க்கிற நடிப்பையும், நகைச்சுவையையும் பொருத்தமாகத் தந்திருக்கிறார்கள்.

காவல்துறை அதிகாரியாக வருகிற சிவபிரகாஷின் (இந்த படத்தின் தயாரிப்பாளர்) நடிப்பு நிறைவு. மற்ற பாத்திரங்களில் வருகிறவர்கள் முடிந்தவரை நன்றாக நடிக்க முயற்சித்திருக்கிறார்கள்.

காதலோடு ஒரு பாடல், காமத்தோடு இன்னொரு பாடல் என இரண்டையும் இதமான இசையில் தந்திருக்கிறார் கோபிஸ்ரீ.

எளிய கதைக்களத்துக்கேற்ற எளிமையான ஒளிப்பதிவு, முன்னும் பின்னுமாய் போய்வருகிற காட்சிகளை குழப்பமில்லாமல் தொகுத்திருக்கும் எடிட்டிங் என தொழில்நுட்பப் பங்களிப்பு கச்சிதம்.

சீரியஸான கதையை நகைச்சுவையோடு நகர்த்தி ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர், சமுகத்துக்கு விழிப்புணர்வுப் பாடம் நடத்தி ஏற்கவும் வைத்திருக்கிறார்.

Latest articles

இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் அழகிய லைலா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! 

ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் 'அழகிய லைலா.' இளைய திலகம்...

’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு...

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது!

ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு...

விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட்...

More like this