HomeMovie Reviewஎமகாதகன் சினிமா விமர்சனம்

எமகாதகன் சினிமா விமர்சனம்

Published on

‘உலகநாயகன்’ கமல்ஹாசன் தசாவதாரத்தில், பெருமாளை நம்பி ரங்கராஜ நம்பி கைவிடப்பட்ட கதையைக் காட்டியிருப்பார். நம் மண்ணில், அப்படி கடவுளை நம்பி கைவிடப்பட்டு எமலோகம் போனவர்கள் ஏராளம். அப்படியொரு கதையைத் தொட்டிருக்கிறார் ‘எமகாதகன்’ இயக்குநர் கிஷன் ராஜ்.

அந்த கிராமத்தில் வசிக்கிற குடும்பங்களில் பிறந்த மூத்த மகன்கள் யாரும் திருமணம் செய்து கொள்வதில்லை. மீறி செய்து கொண்டால் அவர்கள் சில மாதங்களிலேயே மரணமடைந்து விடுகிறார்கள். அந்த மரணங்கள் ‘பாஞ்சாயி’ என்பவளின் சாபத்தினால் நடக்கிறது என்பது ஊர் மக்களின் நம்பிக்கை.

அந்த நம்பிக்கையை உடைக்க நினைக்கிற இளைஞன் சரவணன், தன் காதலியை கல்யாணம் செய்து கொண்டு உற்சாகமாக வாழ்க்கையைத் தொடங்குகிறான். அவனுக்கும் அதே முடிவு…

சம்பவம் நடந்தபின் அவனை இழந்து வேதனையில் துடிக்கும் மனைவியும், அவனது இழப்பை ஜீரணிக்க முடியாத சரவணனின் நண்பனும் ‘நடந்தது என்ன?’ என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்கள் என்ன கண்டுபிடித்தார்கள் என்பதும், பாஞ்சாயி யார் என்பதும் அடுத்தடுத்த காட்சிகளில்… இயக்கம் கிஷன் ராஜ்

கிராமத்து இளைஞன் பாத்திரத்துக்கு பொருந்துகிற தோற்றத்தில் சரவணனாக கார்த்திக் ஸ்ரீராம். இளமைத் துடிப்புமிக்க காதலன், அன்பான கணவன், துணிச்சலாக முடிவெடுப்பவன் என தன் பங்களிப்பை அலட்டலில்லாத நடிப்பால் கச்சிதமாக செய்திருக்கிறார்.

அவரது காதல் மனைவியாக வருகிற ராஸ்மிதா ஹிவாரியின் பளபளப்பான தோற்றமும் தராளமாய் காட்டுகிற வளைவு நெளிவுகளும் இளம் இதயங்களைச் சூடாக்காமல் விடாது. மேடம், தனக்கு நடிக்கவும் தெரியும் என்பதை இடைவேளைக்கு பிறகான காட்சிகளில் நிரூபித்திருக்கிறார்.

நல்லவரா கெட்டவரா என்ற குழப்பத்தை தந்து, கிளைமாக்ஸில் அதிர்ச்சி தருகிறார் தெருக்கூத்துக் கலைஞராக வருகிற சதீஷ். அவரது அப்பாவாக வருகிறவர், மண்ணாசை பிடித்த மனிதராக உருட்டலும் மிரட்டலுமாக தான் வரும் காட்சிகளை துக்கிப் பிடிக்க, மற்றவர்களின் பங்களிப்பு நிறைவு தருகிறது.

காட்சிகளை நேர்த்தியாக பதிவு செய்திருக்கிற ஒளிப்பதிவாளர் எல்.டி. ஹீரோயினையும், உடல்வாகில் ஹீரோயினை போலவே இருக்கிற இன்னொரு பெண்ணையும் கவர்ச்சியாக காட்டுவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

‘கையோடு கை கோர்த்தாய்’, ‘துணையாக நீ’ என்ற பாடல்கள் மனதுக்கு இதம் தருவதோடு கதைக்களத்துக்கும் பொருத்தமாக இருக்கின்றன.

அந்தக் காலத்திலிருந்து இன்று வரை, ஆன்மிகம் சார்ந்த மூட நம்பிக்கை பின்னணியில் அரங்கேறும் அக்கிரம் அநியாயங்களுக்குப் பஞ்சமில்லை. அதை மனதில் வைத்து கிரைம் திரில்லர் பாணியில் எமகாதகனை உருவாக்கிய இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் பரபரப்பை பற்ற வைத்திருக்கலாம்!

எமகாதகன் – கருவாக்கத்தில் கதாநாயகன்; உருவாக்கத்தில் எளிமையானவன்!

Rating 3 / 5

Latest articles

மகுடம் சினிமா விமர்சனம்

விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள்...

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை...

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=nHZxWWcUltk குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின்...

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது....

More like this