Sunday, July 20, 2025
spot_img
HomeCinemaவழக்கமான கதை சொல்லலில் இருந்து மாறுபட்ட கோணத்தில் ‘ஈரப்பதம் காற்று மழை.' வெற்றி, கிஷன்...

வழக்கமான கதை சொல்லலில் இருந்து மாறுபட்ட கோணத்தில் ‘ஈரப்பதம் காற்று மழை.’ வெற்றி, கிஷன் தாஸ் நடிப்பில் உருவாகிறது.

Published on

‘ஜீவி’ படத்தின் மூலம் புகழ்பெற்ற வெற்றி, ‘முதல் நீ முடிவும் நீ’ பட நாயகன் கிஷன் தாஸ், தீப்தி ஓரண்டேலு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் படம் ‘ஈரப்பதம் காற்று மழை.’

விதவிதமான கதைக்களங்களில் வித்தியாசமான வெற்றிப் படங்களைத் தயாரித்த ‘பிக் பிரிண்ட் பிக்சர்ஸ்’ ஐ.பி.கார்த்திகேயன் இந்த படத்தை தயாரிக்க, அறிமுக இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா இயக்கியுள்ளார்.

இயக்குநர் சலீம் ‘மயக்கம் அது மாயம்’ உள்ளிட்ட குறும்படங்களை இயக்கியுள்ளார். அந்த படைப்புகள் வலுவான கதைக்களத்தாலும் நேர்த்தியான மேக்கிங் ஸ்டைலும் வரவேற்பைப் பெற்றவை. அவரது திறமையை இந்த படத்தின் தயாரிப்பாளர் பாராட்டியுள்ளார்.

படம் குறித்து இயக்குநரிடம் கேட்டோம். ‘‘இந்த படம் மூன்று வெவ்வேறு உலகங்களைச் சேர்ந்த வெவ்வேறு நபர்களின் வாழ்க்கையைச் சித்தரிக்கிறது. வழக்கமான கதை சொல்லும் முறை இந்தப் படத்தில் இருக்காது.

வாழ்க்கை ஒருவர் மீது எந்த அளவுக்கு கொடூரமாகவும்,கனிவாகவும் இருக்கிறது என்பதை மையமாக வைத்து கதை நகரும்.

முற்றிலும் நல்லவர் என்றோ முற்றிலும் தீயவர் என்றோ மனிதர் யாரும் இல்லை. அது தனி நபரின் உணர்வைப் பற்றியது என்ற எண்ணத்தையும், அவர்கள் ஒருவரையொருவர் எப்படி எதிர்கொள்கிறார்கள் மற்றும் அதன் விளைவுகளை பெறுத்ததே வாழ்க்கை என்பதை உணர்த்தும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

சென்னையின் மூன்று வெவ்வேறு பகுதிகளில் இந்தக் கதை நடைபெறுவதால், முடிந்த அளவுக்கு லைவ் லொகேஷனில் அதன் உண்மைத்தன்மையுடன் படம் பிடித்திருக்கிறோம்.

நடிகர் வெற்றி தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைத்தேர்வின் மூலம் தனது அந்தஸ்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறார். திரையுலகில் நுழைவதற்கு முன்பே பிரபலமான நடிகர் கிஷன் தாஸ் ‘முதல் நீ முடிவும் நீ’ மற்றும் இன்னும் சில திரைப்படங்களில் தனது திறமையான நடிப்பின் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர்களுடன் திறமையான தியேட்டர் ஆர்டிஸ்ட்டான தீப்தியும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். அனைவரும் கதாபாத்திரங்களையும் அவற்றின் ஆழமான உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு திறமையாக நடித்துள்ளனர்.

தாங்கள் தயாரிக்கும் ஒவ்வொரு திரைப்படத்திலும் கதையின் தரமும் படைப்பின் உண்மை உணர்வும் மாறாது வரவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வரக்கூடிய பிக் பிரிண்ட் பிக்சர்ஸுடன் நாங்கள் இணைந்தது பெருமையாக இருக்கிறது” என்றார்.

படக்குழு:
இசை: ஸ்ரீராம் வெங்கடேஷ்
ஒளிப்பதிவு: அமல் டோமி
படத்தொகுப்பு: ஆஷிஷ் ஜோசப்
கலை இயக்குநர்: அந்தோணி மரியா கெர்லி எல்
சண்டைப் பயிற்சி: நூர் முகமது

Latest articles

இந்தப் படம் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும்; தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும்படி இருக்கும்! –‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் 

உதயா - அஜ்மல் - யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்...

இந்த படம் திரில்லராக மட்டுமல்லாது சென்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக  இருக்கும்! -‘பிளாக்மெயில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மு மாறன் 

ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில், மு மாறன் இயக்கியிருக்கும் ’பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட்...

ஆக்கிரமிப்பு சினிமா விமர்சனம்

சாமானிய மனிதன் ஒருவன் ஊரையே நடுங்க வைக்கும் ரவுடியை பழி தீர்க்கும் கதை. ஒரு வரியாக சொல்லும்போது இதெல்லாம் ஆயிரம்...

விஷால் நடிக்கும் 35-வது படம் பூஜையுடன் துவக்கம்! சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகிறது.

விஷால் நடிப்பில் மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மக்களிடம் மாபெறும் வரவேற்பு பெற்று மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அந்த...

More like this

இந்தப் படம் அனைவரையும் மெஸ்மரைஸ் செய்யும்; தொடக்கம் முதல் இறுதி வரை கண் இமைக்காமல் பார்க்கும்படி இருக்கும்! –‘அக்யூஸ்ட்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் 

உதயா - அஜ்மல் - யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் 'அக்யூஸ்ட்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்...

இந்த படம் திரில்லராக மட்டுமல்லாது சென்டிமெண்ட், காமெடி என ஜனரஞ்சகமாக  இருக்கும்! -‘பிளாக்மெயில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மு மாறன் 

ஜி.வி. பிரகாஷ், தேஜூ அஸ்வினி மற்றும் பிந்து மாதவி நடிப்பில், மு மாறன் இயக்கியிருக்கும் ’பிளாக்மெயில்’ திரைப்படம் ஆகஸ்ட்...

ஆக்கிரமிப்பு சினிமா விமர்சனம்

சாமானிய மனிதன் ஒருவன் ஊரையே நடுங்க வைக்கும் ரவுடியை பழி தீர்க்கும் கதை. ஒரு வரியாக சொல்லும்போது இதெல்லாம் ஆயிரம்...
error: Content is protected !!