HomeCinemaநடிகர் ரவி மோகன் எழுதிய முதல் பாடல் 'என் வானம் நீயே' வெளியானது!

நடிகர் ரவி மோகன் எழுதிய முதல் பாடல் ‘என் வானம் நீயே’ வெளியானது!

Published on

நடிகர் ரவி மோகன் ‘என் வானம் நீயே’ பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார்.

‘என் வானம் நீயே’ பாடல் ஒரு தாயின் அன்பின் ஆழத்தையும், சொலப்படாத உணர்ச்சிகளையும் கொண்டாடும் ஒரு பாடல்.
இது வெறும் ஒரு இசை அல்ல, ஒரு உணர்ச்சி.

ஒவ்வொரு தாயும் நம் வாழ்க்கையில் ஊற்றும் அந்த அமைதியான ஆசீர்வாதங்களின் பிரதிபலிப்பு “என் வானம் நீயே”.

பாடலின் கரு பற்றி,

“என் வானம் நீயே என்பது ஒரு தாய் நமக்குக் கொடுக்கும் பேராசீர்வாதங்களில் ஒரு சிறிய துளி.

தாய்மார்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல அழகான பாடல்கள் இதுவரை வந்துள்ளன,
அவற்றில் நாங்களும் ஒரு துளி சேர்க்க விரும்பினோம்.”

இந்தப் பாடல் ஒவ்வொரு தாய்க்கும் அர்ப்பணிப்பு,

“அம்மா, இது உனக்காக ♥️”

பாடலாசிரியர் ரவி மோகன், ”முதல் முறையாக எழுதுவது என்பது எனது மனத்தின் மிக ஆழமான பகுதியைத் திறந்தது போல இருந்தது. ‘என் வானம் நீயே’ என் தாயிடமிருந்து வந்த சிறிய அதிசயங்களின் பிரதிபலிப்பு. அன்றாட வாழ்வின் அன்பான, கவனிக்கப்படாத தருணங்கள் வாழ்க்கையை எவ்வளவு அழகாக்குகின்றன என்பதைக் குறித்த பாடல். அந்த நன்றி, அந்த பாசத்தை மிக நேர்மையான, எளிமையான சொற்களில் வெளிப்படுத்தவேண்டுமென்றே இதை எழுதினேன்.
இது எல்லா தாய்மார்களுக்கும், குறிப்பாக என் தாய்க்கும் எனது இதயபூர்வமான வணக்கமாக சமர்ப்பிக்கிறேன்.

“என் வானம் நீயே” பாடல் வீடியோ இன்று முதல் அனைத்து முக்கியமான இசை தளங்களிலும் வெளியாகியுள்ளது. அன்பு, நினைவுகள், மற்றும் மெலடிகளின் கலவையாகிய இந்த பாடல், கேட்பவர் ஒவ்வொருவரையும் உணர்ச்சியால் நிறைந்த ஒரு நெகிழ்ச்சியான பயணத்தில் அழைத்துச் செல்லும்” என்றார்.

பாடல் பற்றி பேசிய இசையமைப்பாளரும் பாடகியுமான கெனீஷா, “இந்தப் பாடல் என் இதயத்திலிருந்து வந்தது. ‘என் வானம் நீயே’ உருவாக்கும் போது என் தாயை நினைத்துக்கொண்டே இருந்தேன். தாய்மார்கள் எப்படியெல்லாம் நம்மை வானம் போல காத்துக் கொள்கிறார்கள் என்பதைக் குறித்தே இந்த பாடலை அமைத்துள்ளோம். இது வெறும் ஒரு இசை அல்ல, நம்மில் ஒவ்வொருவருக்கும் உள்ள ஒரு உணர்ச்சி. இந்த மெலடியை கேட்பவர் ஒவ்வொருவரும் தங்களது தாயின் அன்பையும் அர்ப்பணிப்பையும் உணருவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this