HomeCinemaகபாலி லிங்கேஷ், லண்டனை சேர்ந்த லியா நடிக்கும் 'என் காதலே' மே 9-ல் ரிலீஸ்!  

கபாலி லிங்கேஷ், லண்டனை சேர்ந்த லியா நடிக்கும் ‘என் காதலே’ மே 9-ல் ரிலீஸ்!  

Published on

மீனவ மக்கள் வாழ்க்கை பின்னணியில் மென்மையான முக்கோண காதல் கதையில் உருவாகியுள்ள என் காதலே திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரெய்லர் வெளியாகி  ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றுள்ளது. அதையடுத்து படம் வரும் மே 9-ம் தேதி வெளியாகவுள்ளது.

திரைத்துறை மீதான தீராக்காதலிலும், ஆர்வத்திலும் இந்த படத்தை எழுதி இயக்கியுள்ளார் ஜெயலட்சுமி. இது அவரது முதல் திரைப்படம் என்றாலும் திரைத்துறைக்கு பழமையானவர்.

லண்டனிலிருந்து தமிழக கலாச்சாரத்தை ஆய்வு செய்ய, இந்தியா வருகிறார் நாயகி லியா. மீனவ இளைஞனான லிங்கேஷ் மீது அவருக்கு காதல் வருகிறது. ஆனால் லிங்கேஷுக்கு அவரது மாமன் மகளுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தடைகளைத் தாண்டி  அவர்கள் காதல் நிறைவேறியதா?, காதலர்கள் சேர்ந்தார்களா? என்பதுதான் படத்தின் கதை.

கபாலி, பரியேறும் பெருமாள் படங்களில் நடித்த லிங்கேஷ்,  இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். லண்டனைச் சேர்ந்த பிரிடிஷ் நடிகை லியா நாயகியாக நடித்துள்ளார். இது தமிழில் இவருக்கு முதல் திரைப்படம்… இருந்தாலும் தனது ஆர்வத்தினால் அருமையான நடிப்பை வெளிப்படுத்தினார் லியா….நடிகை திவ்யா இரண்டாவது நாயகியாக நடித்துள்ளார். அறிமுக நடிகர்  காட்பாடி ராஜன் வில்லனாக நடித்துள்ளார்.இவருக்கும் இது முதல் திரைப்படம் இருந்தாலும் திரையில் நிஜ வில்லனாக மிரட்டியுள்ளார். மதுசூதனன், மாறன், கஞ்சா கருப்பு, சித்தா தர்ஷன், செந்தமிழ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Latest articles

Renacon Launches RENAFLEX Fibre Cement Boards, Advancing Sustainable Construction in India!

Rs 350 crore integrated green building materials facility at Naidupeta, Andra Pradesh built in...

கதைக்களம் மதுரை… முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார்… பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7 முதல் அசத்த வரும் ‘வதந்தி சீசன் 2.’

ஆகஸ்ட் 7 முதல், வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி பிரைம் வீடியோவில் தமிழுடன், தெலுங்கு மற்றும்...

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

More like this