HomeCinemaமோகன்லால் நடித்து ஹிட்டடித்த 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில்...

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

Published on

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

நடிகர், இயக்குநர் பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் மோகன்லாலுடன், முன்னணி நட்சத்திரங்கள் பிருத்விராஜ் சுகுமாரன், டொவினோ தாமஸ், ஜெரோம் ஃப்ளின், அம்பிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவாடர், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பைஜு சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடகர், நைலா உஷா, ஜிஜு ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிகுட்டன், அனீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபுவானே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்துள்ளனர்.

கேரளாவின் அரசியல் களத்திலிருந்து ஸ்டீபன் நெடும்பள்ளி திடீரென வெளியேறியதைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பம் மற்றும் அதிகாரப் போராட்டங்களுக்கு மத்தியில், அவர் உலகமே தேடும் குரேஷி ஆப்ரஹாமாக எப்படி மாறினார் என்பதை இந்தப் படம் ஆராய்கிறது. லூசிஃபர் சம்பவங்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுளின் சொந்த நாட்டில் ஒரு புதிய அரசியல் சக்தி உருவாகி வருகிறது, அதே நேரத்தில் மக்கள் நீண்ட காலமாக மறைந்துபோன தங்கள் தலைவரின் வருகைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்டீபன் இப்போது எங்கே? அவர் தனது தாயகத்தைக் காப்பாற்றத் திரும்புவாரா? உண்மையில் குரேஷி ஆப்ரஹாம் யார்? இந்தக்கேள்விகளுக்கான பதில் தான் இப்படம்.

பரபரக்கும் சம்வங்கள், அதிரடி ஆக்சன், கண்ணைப்பறிக்கும் விஷுவல்களுடன், ரசிகர்களை இருக்கை நுனியில் இருக்க வைக்கும், ஆக்சன் திரில்லராக இப்படம் புது அனுபவம் தருகிறது.

பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

Latest articles

இந்த படத்தில் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளேன்; நல்ல படத்தை உருவாக்கியிருக்கிறோம் என்ற நம்பிக்கை இருக்கிறது! -சென்னையில் நடந்த எங்கள் தங்கம் பட விழாவில் நடிகை சமந்தா பேச்சு

சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'எங்கள் தங்கம்' திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை சமந்தா...

மக்கள் தலைவா சினிமா விமர்சனம்

தமிழகத்தின் தேர்தல் அரசியல் எந்தளவுக்கு சீர் கெட்டுப் போயிருக்ககிறது என்பதையும், ஓட்டு போடும் மக்களிடமிருக்கும் முட்டாள்தனத்தையும் பொலிடிக்கல் சட்டயர்...

ஜூலை 17ல் வெளியாகிறது ‘அன்பே டயானா.’ அசத்தலான போஸ்டரில் அறிவித்த படக்குழு.

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், நியோ கேசில் கிரியேஷன்ஸ் மற்றும் இரா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ திரைப்படம்,...

இந்தியாவில் ‘ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே’ (Spider-Man: Brand New Day) படத்திற்கான முன்பதிவு தொடக்கம்… ரசிகர்கள் பிரீமியம் பெரிய திரை வடிவங்களில் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு!

'ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே' படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது! டாம் ஹாலண்ட் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், ஜூலை 30...

More like this