HomeCinemaஇது ஒரு டிரையாலஜி படம்; முன்பு லூசிஃபர், இப்போது எம்புரான், அடுத்து இன்னொரு படம் வருகிறது!...

இது ஒரு டிரையாலஜி படம்; முன்பு லூசிஃபர், இப்போது எம்புரான், அடுத்து இன்னொரு படம் வருகிறது! -சென்னையில் நடந்த எம்புரான் பட விழாவில் நடிகர் மோகன்லால் 

Published on

இந்தியளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பான் இந்தியப் படமான ‘எம்புரான்’ படம் வரும் மார்ச் 27 ஆம் தேதி உலகமெங்கும், திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் புரமோசன் பணிகள் தற்போது படு தீவிரமாக நடந்து வருகிறது. படக்குழுவினர் இந்தியா முழுக்க பல இடங்களில் படத்தின் விளம்பர பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் இப்படத்தின் தமிழ்ப் பதிப்பிற்கான முன் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்வில் பேசிய இயக்குநர் பிரித்திவிராஜ், என்னைப் பொறுத்தவரை இது மிக முக்கியமான நிகழ்வு, முதல் பாகம் வந்த போது இப்படத்தை இந்திய அளவில், வெளியிடும் வசதி, படத்தைப் பற்றிப் பேச வைக்கும் வசதி இல்லை. இந்த 6 வருடத்தில் பல விசயங்கள் மாறியிருக்கிறது. ஒவ்வொரு மொழியிலும் அவரவர் மொழியில் ரசிக்கும் வண்ணம் கடுமையாக உழைத்திருக்கிறோம். இந்தப்படம் மலையாள சினிமாவின் பெருமை, இப்படி ஒரு படம் செய்யக் காரணமான மோகன்லால் சார், ஆண்டனி பெரும்பாவூர் சார் ஆகியோருக்கு நன்றி. அனைவரும் படம் பார்த்து ரசியுங்கள் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

நடிகர் மோகன்லால், இது ஒரு டிரையாலஜி படம், லூசிஃபர், இப்போது எம்புரான் அடுத்து இன்னொரு படம் வரவுள்ளது. இது மலையாள சினிமாவுக்கே மிக முக்கியமான படம். கொஞ்சம் புதுமையாகப் பல விசயங்கள் முயற்சி செய்துள்ளோம். அதற்காகத் தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளோம். இது தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த மாதிரி படம் ஓடினால் தான் பல பெரிய படங்கள் வரும். அதற்காகவும் இப்படம் ஓட வேண்டும். உங்களைப் போல நானும் மார்ச் 27 ஆம் தேதி, ரிலீஸுக்கு காத்திருக்கிறேன் நன்றி.

நடிகர் டோவினோ தாமஸ், இந்தப்படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமை, இப்படி ஒரு படத்தில் நான் இருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். லாலேட்டன், மஞ்சு வாரியர், பிரித்திவிராஜ் உடன் வேலை பார்க்கும் வாய்ப்பு எனக்கு ஆசீர்வாதம். லூசிஃபர் படத்தில் நான் சின்ன ரோலில் வந்தாலும், அது என் வாழ்வில் கொடுத்த இம்பேக்ட் மிகப்பெரிது. இந்தப்படம் இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும். மலையாள சினிமாவில் இது முக்கியமான படம், அனைவருக்கும் நன்றி.

நடிகை மஞ்சு வாரியர், என் வாழ்வில் மிக முக்கியமான திருப்புமுனையைத் தந்த படம் லூசிஃபர். எனக்கு இந்த வாய்ப்பை தந்த பிரித்திவிராஜுக்கு நன்றி. பிரியதர்ஷினி எனும் கதாபாத்திரத்தை எனக்குத் தந்ததற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. இவ்வளவு பெரிய படமாக இப்படத்தை உருவாக்கும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. லாலேட்டனுடன் ஒரு சில படங்கள் மட்டும் தான் செய்துள்ளேன், இந்தப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை, எல்லாமே மறக்க முடியாத அனுபவம். இப்படம் கண்டிப்பாக உங்களைத் திருப்திப்படுத்தும்.

படம் பற்றி… இசையமைப்பாளர் தீபக் தேவ், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, சவுண்ட் இன்ஜினியர் M R ராஜாகிருஷ்ணன், நடிகர் அபிமன்யூ சிங், நடிகர் கார்த்திகேயா தேவ், மொழி மாற்று இயக்குநர் ஆர் பி பாலா உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

நடிகர், இயக்குநர் பிரித்திவிராஜ் சுகுமாரன் இயக்கத்தில், முரளி கோபி திரைக்கதை எழுத, பிரம்மாண்ட ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தினை, லைகா புரொடக்ஷன்ஸ், ஆசீர்வாத் சினிமாஸ், ஸ்ரீ கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில், சுபாஸ்கரன், ஆண்டனி பெரும்பாவூர் மற்றும் கோகுலம் கோபாலன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

2019-ல் வெளிவந்து பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற லூசிஃபர் படத்தின் தொடர்ச்சியாக, அதிரடி ஆக்சன் கதைக்களத்தில், இந்த வருடத்தின் மிகப்பெரிய திரைப்படங்களுள் ஒன்றாக, பான் இந்தியப் பிரம்மாண்ட படமாக “எம்புரான்” திரைப்படம் உருவாகியுள்ளது.

மலையாள திரையுலகின் சூப்பர்ஸ்டார் மோகன்லால், குரேஷி-ஆப்ரஹாம் என்ற ஸ்டீபன் நெடும்பள்ளி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன், முன்னணி நட்சத்திரங்கள் பிரித்திவிராஜ் சுகுமாரன், டோவினோ தாமஸ் இணைந்து நடிக்க, மேலும் “Game of Thrones” புகழ் ஜெரோம் ஃப்ளின் இந்திய சினிமாவில் “எம்புரான்” மூலம் அறிமுகமாகிறார். அபிமன்யு சிங், ஆண்ட்ரியா டிவாடர், சூரஜ் வெஞ்சரமூடு, இந்திரஜித் சுகுமாரன், மஞ்சு வாரியர், சானியா ஐயப்பன், சாய்குமார், பைஜு சாந்தோஷ், ஃபாசில், சச்சின் கேடகர், நைலா உஷா, கிஜு ஜான், நந்து, சிவாஜி குருவாயூர், மணிக்குட்டன், அநீஷ் ஜி. மேனன், ஷிவதா, அலெக்ஸ் ஓ’நெல், எரிக் எபுவானே, மிகைல் நொவிகோவ், கார்த்திகேயா தேவ் என பெரும் நட்சத்திரப் பட்டாளம் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர். மலையாள சினிமாவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்து நடிக்கும் படம் இதுவென்பது குறிப்பிடதக்கது.

இப்படம் உலகம் முழுக்க பல இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அதில் ஷிம்லா, லே, ஐக்கிய அரசுகள், ஐக்கிய அமெரிக்க நாடுகள், சென்னை, குஜராத், ஐக்கிய அரபு அமீரகம், மும்பை மற்றும் கேரளா ஆகிய இடங்கள் அடங்கும். அனாமார்பிக் வடிவத்தில் 1:2.8 ரேஷியோவில் எடுக்கப்பட்டுள்ள “எம்புரான்” திரைப்படம், மிகப் புதுமையான திரை அனுபவமாக இருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதை உலகம் முழுக்க விரிகிறது.

 

Latest articles

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...

கவிஞர் வைரமுத்து பங்கேற்பில் ‘பிரேக்ஃபாஸ்ட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!

காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் ராணவ், ரோஸ்மின், சம்பத்குமார், கஸ்தூரி, கிருத்திக் மோகன் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் திரைப்படம் ‘பிரேக்ஃபாஸ்ட்.'...

More like this

கயல் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீசர் வெளியானது!

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையே இருக்கும் உடைக்க முடியாத பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சிங்கா படத்தின் டீசர், பெரும்...

உலக நாடுகளின் அதிபர்கள், பிரதமர்கள் பங்கேற்கிற ஜி 20 மாநாடு தமிழ்நாட்டின் மகாபலிபுரத்தில் நடக்கிறது.  

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் & வார்’ 2027 ஜனவரி 21 வெளியீடு!

இந்த ஆண்டின் மிகப்பெரிய அறிவிப்பு இறுதியாக வெளியாகியுள்ளது. சஞ்சய் லீலா பன்சாலியின் “லவ் & வார்” படம் 2027...