HomeUncategorizedகருணாஸ், நிமிஷா சஜயன் நடிக்கும் ‘என்ன விலை' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

கருணாஸ், நிமிஷா சஜயன் நடிக்கும் ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

Published on

கருணாஸ், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘என்ன விலை.’

சோஷியல் பொலிட்டிகல் திரில்லராக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி, கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் நடந்து நிறைவடைந்துள்ளது.

சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, ஒய்.ஜி. மகேந்திரன், பூர்ணிமா பாக்யராஜ், மோகன்ராம், லொள்ளு சபா சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணா, தீபா சங்கர், மொட்டை ராஜேந்திரன், நக்கலைட்ஸ் கவி மற்றும் பலரும் நடித்திருக்கின்றனர்.

படம் பற்றி பேசிய தயாரித்துள்ள கலாமயா பிலிம்ஸ் ஜிதேஷ் வி, ”திறமையான இந்த அணியுடன் இணைந்து பணிபுரிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தான் எடுத்து நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நடிகர் கருணாஸ். அவரது அர்ப்பணிப்பு பரவலான பாராட்டுகளையும், ஏராளமான விருதுகளையும் பெற்றுத் தரும் என்பதில் உறுதியாக உள்ளேன். நடிகை நிமிஷா சஜயனும் இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் சஜீவ் பழூருக்கு தமிழ் திரைப்படங்கள் மீது பெரும் காதல் உள்ளது. இந்தப் படத்தில் நிச்சயம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வார்.

ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி சிறப்பான ஒளிப்பதிவைக் கொடுத்துள்ளார். ஒட்டுமொத்த தொழில்நுட்பக்குழுவினரும் நடிகர்களும் முழுப்படப்பிடிப்பும் சீக்கிரம் முடிவடைய ஒத்துழைப்புக் கொடுத்துள்ளனர். சாம் சிஎஸ் இசை கதைக்கு புது உத்வேகம் கொடுத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயம் உருவாகும். விரைவில் படத்தில் அறிவுப்பு தேதி வெளியாகும்” என்றார்.

படக்குழு:-
தயாரிப்பு: கலாமயா பிலிம்ஸ் ஜிதேஷ் வி
எழுத்து மற்றும் இயக்கம்: சஜீவ் பழூர்
ஒளிப்பதிவாளர்: ஆல்பி ஆண்டனி
இசையமைப்பாளர்: சாம் சி எஸ்
படத்தொகுப்பு: ஸ்ரீஜித் சாரங்
தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: எம். சிவகுமார்
கலை இயக்குநர்: கே. சிவகிருஷ்ணா
ஆக்‌ஷன்: பி சி ஸ்டண்ட்
இணை இயக்குநர்: ரதீஷ்
ஆடை வடிவமைப்பாளர்: ஆர். முருகானந்தம்
ஒப்பனை: வி. தினேஷ்குமார்
நிர்வாக தயாரிப்பாளர்கள்: முகேஷ், சல்மான் கே.எம்
ஸ்டில்ஸ்: கார்த்திக் ஏ.கே
தயாரிப்பு மேலாளர்கள்: ஆர். ராஜீவ் காந்தி, பி கார்த்தி
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, அப்துல் நாசர்

Latest articles

உலகம் முழுக்க மக்கள் என்னை பாகுபலியாக அடையாளம் கண்டுகொள்கிறார்கள்! -நடிகர் பிரபாஸ் உற்சாகம்

“பாகுபலி: தி பிகினிங்” திரைப்படம் இந்திய சினிமாவின் போக்கையே மாற்றியமைத்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரபாஸ் இன்னும்...

‘இம்மார்டல்’ திரைப்படத்திலிருந்து வெளியான ‘லவ் யூ லவ் யூ காட்டேரி’ பாடலுக்கு இசை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு!

https://www.youtube.com/watch?v=-vlnhbtkyhw இசையமைப்பாளர் சாம் சி எஸ் தொடர்ந்து வித்தியாசமான இசை அனுபவங்களை வழங்கி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில்,...

ஹார்ட்டீன் சினிமா விமர்சனம்

இன்றைய தலைமுறையினரின் உணர்வுகளையும், காதலையும் மையமாகக் கொண்ட படம். ஜெய்ப்பூரில் உணவகம் நடத்தி வரும் சிவாவும் சாதனாவும் காதலர்கள். ஒரு...

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ வெப் சீரிஸ் விமர்சனம்

இன்ஸ்டா பிரபலங்களின் நடிப்புப் பங்களிப்பில் கிரிக்கெட் விளையாட்டையும் தீவிர ரசிகர்களின் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் டிராமா. ஒரு கிராமத்தைச்...

More like this