HomeCinemaஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராகும் கதாநாயகன் போலீஸிடம் சிக்கித் திணறும் 'எனை சுடும் பனி' விரைவில் திரையரங்குகளில்!

ஐபிஎஸ் தேர்வுக்குத் தயாராகும் கதாநாயகன் போலீஸிடம் சிக்கித் திணறும் ‘எனை சுடும் பனி’ விரைவில் திரையரங்குகளில்!

Published on

விழித்திரு, என் காதலி சீன் போடுறா, வாகை ஆகிய படங்களில் நடித்த நட்ராஜ் சுந்தர்ராஜ், ‘எனை சுடும் பனி’ படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக உபாசனா ஆர்.சி நடிக்க, பாக்யராஜ், சித்ரா லட்சுமணன், மனோபாலா, தலைவாசல் விஜய், முத்துக்காளை, சிங்கம் புலி, தானீஷ், சுந்தர்ராஜ், பில்லி முரளி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

கதாநாயகன் ஜாலியாக இருக்கும் இளைஞன். கதாநாயகி வேலைக்குச் செல்லும் பொறுப்பான பெண். இருவரும் பக்கத்து பக்கத்து வீடு. நட்பாக காதலாக பழகுகிறார்கள்.  ஐபிஎஸ் அதிகாரி தேர்வுக்கு தயாராகி வருகிறார் கதாநாயகன். இந்த நிலையில் பொள்ளாச்சியில் பெண்கள் தொடர்ந்து காணாமல் போகிறார்கள். துப்பு கிடைக்காமல் போலீஸ் திணறுகிறது. ஒரு பெண்ணின் சடலம் சாலையோரத்தில் கண்டெடுக்கப் படுகிறது. அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் நீதி கேட்டு போராடுகிறார்கள்.

போலீஸ் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்கிறது. எதிர்பாராத விதமாக விசாரணை வளையத்துக்குள் கதாநாயகன், கதாநாயகி இருவரும் சிக்குகிறார்கள். விசாரணை தொடங்குகிறது. சைக்கோ, கிரைம், திரில்லர், சஸ்பென்ஸ், லவ் என கதை விறுவிறுப்பாக செல்கிறது.

படம் விரைவில் திரைக்கு வருகிறது.

படக்குழு:-
தயாரிப்பு – எஸ்.என்.எஸ் பிக்சர்ஸ் ஹேமலதா சுந்தர்ராஜ்
ஒளிப்பதிவு – வெங்கடேஷ்
இசை – அருள்தேவ்
சண்டைப் பயிற்சி – டேஞ்சர் மணி படத்தொகுப்பு – சி.எம்.இளங்கோவன் கலை – சோலை அன்பு
நடனம் – சாண்டி, ராதிகா
பாடல்கள் – ராம் ஷேவா, சரவெடி சரண், வசந்த்
நிர்வாகத் தயாரிப்பு – ஜீவா
மக்கள் தொடர்பு – கோவிந்தராஜ்

Latest articles

அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்று வரும் சந்தானம் நடிக்கும் ‘லவ் பைட்’ படத்தின் ப்ரோமோ.

https://www.youtube.com/watch?v=tMzHwOWtLuE முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய டிரெண்டை தொடர்ந்து...

உத்சவ் 2026 விழாவில் ‘தேவி ரத்னா’ விருதால் கௌரவிக்கப்பட்ட ரவி மோகன்; ரசிகர்களைக் கவர்ந்த கெனீஷாவின் அதிரடி இசை நிகழ்ச்சி!

பாலக்காடு நகரம், பக்தி, கலாச்சாரம், சினிமா மற்றும் இசை ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்ட கொண்டாட்டத்தை கண்டது....

இயக்குநர் பாபு விஜய் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்! – ‘சட்டென்று மாறுது வானிலை’ பட விழாவில் நடிகர் ஜெய் பேச்சு

ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லர் திரைப்படம் 'சட்டென்று மாறுது வானிலை.' இயக்குநர்...

நடிகர் விஷால் செய்ய முயற்சித்ததை முதலமைச்சர் ஜோசப் விஜய் செய்து முடித்தார்!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் விஷால், நடிகர் சங்கத்தை வழி நடத்தும் பெரும் பணியை...

More like this