HomeCinemaதேஜ் இயக்கி நடிக்கும் ட்யூட் புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக உருவாகிறது!

தேஜ் இயக்கி நடிக்கும் ட்யூட் புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக உருவாகிறது!

Published on

தேஜ் இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘ட்யூட்.’ பனோரமிக் ஸ்டுடியோஸ் தமிழ், கன்னடம், தெலுங்கு மொழிகளில் இந்த படத்தை தயாரித்துள்ளது.

படத்தில் ராகவேந்திரா ராஜ்குமார், சான்யா காவேரம்மா, மேகா, மோகினி, திரீத்தி, அனர்க்யா, தீபாலி பாண்டே, ஸ்ரீ, இவாஞ்சலின், சோனு தீர்த் கவுடா, யஷாஸ்வினி, மெர்ஸி, மோனிஷா, ராஜேஸ்வரி, சுந்தர்ராஜ், ஸ்பர்ஷா ரேகா மற்றும் விஜய் செந்தூர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழில் ‘கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை’, ‘காதலுக்கு மரணமில்லை’, கன்னடத்தில் ‘ரீவைண்ட்’, மற்றும் ‘ராமாச்சாரி 2.O’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் தேஜ். அவரது அடுத்த படம் இது.

கால்பந்து விளையாட்டு பின்னணியில் ஸ்போர்ட்ஸ் டிராமாவாக, குறிப்பாக கால்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு அர்ப்பணிக்கும் விதமாக இந்த படம் தயாராகி வருகிறது.

தற்போது படத்திலிருந்து ‘எமிட்டோ மாயா மந்த்ரமாயே.. மதி ஜிங்கலா பரிகெத்தேனே’ என்கிற ஃபர்ஸ்ட் சிங்கிள் கன்னடம், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி, சோசியல் மீடியாவில் வைரலாகி, ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்தப் பாடலின் தெலுங்கு வெர்ஷனை எஸ் பி மனோகர் எழுத, அபிஷேக் பாடியுள்ளார்.

படத்தின் 50 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இன்னொரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்று வருகின்றன. வரும் ஜூன் அல்லது ஜூலையில் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

படத்திற்கு பிரேம் ஒளிப்பதிவு செய்துள்ளார். எமில் முகமது இசையமைத்துள்ளார்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this