HomeCinemaபடத்தில் நடித்த ஷெரீன், சம்யுக்தாவை இந்த விழாவுக்கு அழைத்தபோது சாமர்த்தியமாக மறுத்தார்கள்! -தில்ராஜா பட விழாவில்...

படத்தில் நடித்த ஷெரீன், சம்யுக்தாவை இந்த விழாவுக்கு அழைத்தபோது சாமர்த்தியமாக மறுத்தார்கள்! -தில்ராஜா பட விழாவில் இயக்குநர் ஏ வெங்கடேஷ் ஆதங்கம்

Published on

விஜய் சத்யா, ஷெரீன் நடிப்பில் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் அசத்தலான கமர்ஷியல் கலாட்டாவாக உருவாகியுள்ள ‘தில் ராஜா’ திரைப்படம் வரும் 27-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. முன்னதாக படத்தின் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் இயக்குநர் ஏ வெங்கடேஷ் பேசியபோது, ”இந்த படத்தில் ஷெரீன், சம்யுக்தா இருவரும் நடித்தார்கள், ஆனால் பட விழாவிற்கு அழைத்தோம், வரவில்லை, சாமர்த்தியமாக மறுத்தார்கள். என்னைக்கூட உங்கள் பட ஹீரோக்களை கூப்பிடுங்கள் என்றார்கள், நானும் ஒரு ஹீரோவை கூப்பிட்டேன் வரவில்லை. இதுதான் சினிமா.

விஜய் சத்யா ஒரு நாள் கூப்பிட்டு, கதை சொன்னார் என் கருத்தைக்களை சொன்னேன். சார் நீங்க தான் டைரக்ட் பண்ணனும் என்றார். என் ஸ்டைலில் இல்லையே எனத் தயங்கினேன் ஆனால் நீங்கள் தான் பரபரவென டைரக்ட் செய்வீர்கள் என்றார். மகிழ்ச்சியுடன் ஒகே சொன்னேன்.

எந்தப் பிரச்சனை வந்தாலும், அதை எதிர் கொள்ளும் ஹீரோ தான் ஒன்லைன். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும். விஜய் சத்யா அத்தனை கஷ்டங்களையும் பொறுத்துக்கொண்டு நடித்திருக்கிறார். சத்யாவின் திறமைக்கு மிகப்பெரிய பெயர் கிடைக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

ஷெரீனுக்கு முக்கியமான ரோல், சம்யுக்தாவிற்கும் முக்கியமான ரோல். வனிதா இந்தப்படத்தில் இருப்பது ஆடியன்ஸுக்கு தெரியக்கூடாதென நினைத்தேன். இன்று வேறு வழியில்லாமல் வரவைத்து விட்டேன். அவர் கதாபாத்திரம் எல்லோருக்கும் பிடிக்கும். அம்ரீஷ் மிக அழகான பாடல்கள் தந்துள்ளார். எல்லோரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

நடிகர் விஜய் சத்யா பேசியபோது, ”இயக்குநர் வெங்கடேஷ் சார் சூப்பராக படத்தை இயக்கியுள்ளார். எல்லோரும் ரசித்து ரசித்து வேலை செய்து உருவாக்கியுள்ளோம். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவைத் தந்து வெற்றி பெறச்செய்யுமாறு, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசியபோது, ”10 வருடம் முன் எங்கப்பாவுடன் சண்டையெல்லாம் நடந்த போது, மீண்டும் சினிமாவில் நடிக்க நினைத்தபோது, வெங்கடேஷ் சார் தான் நடிக்க வைத்தார். இந்தப்படத்தில் நடிக்க என்னைத்தேடியபோது, நான் சம்பளம் அதிகம் கேட்பதாக சொல்லியிருக்கிறார்கள். வெங்கடேஷ் சார் கேட்ட போது, சார் என்னைப்பற்றி உங்களுக்குத் தெரியும். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டாம், என்றைக்கு என்று சொல்லுங்கள் நான் வருகிறேன் என போய் நடித்தேன். இப்போது நானும் இயக்குநராக மாறியிருக்கிறேன், ஒரு பெரிய படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றினேன். எனக்கு படம் செய்வதில் உள்ள கஷ்டம் தெரியும். விஜய் சத்யா இந்தப்படத்தை கஷ்டப்பட்டு எடுத்து, இங்கு கொண்டு வந்துள்ளார். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.

இசையமைப்பாளர் அம்ரீஷ் பேசியபோது, ”இந்த படத்தில் நான் நடித்த பாடல் நன்றாக இருப்பதாகச் சொன்னார்கள், ஆனால் இனி நடிப்பேனா எனத் தெரியவில்லை. படம் முடித்த பின்னர் புரமோசனுக்கு மாஸாக பாடல் கேட்டார்கள். ஹுயூமரா காமெடியாக இருக்க ஆள் வேண்டும் என்று சொன்னார்கள், ஆள் தேடித் தேடி கடைசியில் என்னையே நடிக்க வைத்து விட்டார்கள். ஏ வெங்கடேஷ் சார் படத்தில் இசையமைக்க எவ்வளவோ ஆசைப்பட்டிருக்கிறேன். விஜய் சார் ஃபேன் நான், அவரையும் அம்மாவையும் வைத்து படம் எடுத்திருக்கிறார் அவருடன் படம் கிடைத்தது மகிழ்ச்சி. விஜய் சத்யா ஒரு நடிகனாக மக்களை மகிழ்விக்கக் கடுமையாக உழைத்திருக்கிறார்” என்றார்.

Latest articles

‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ கிரிக்கெட் ரசிகர்களின் உணர்வை உயிர்ப்பிக்கும்; ஜூன் 26 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

சவிர் சுதாகர் இயக்கத்தில், எஸ்.எஸ். குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ள மம்மட்டியான் ஸ்டார்ஸ், நட்பு, கனவுகள் மற்றும் கிரிக்கெட்...

இந்த படம் நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் முயற்சி! -நாகபந்தம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் விராட் கர்ணா 

அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்க புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான...

‘டிமான்டி காலனி 3 – தி எண்ட் இஸ் டூ ஃபார்’ திரைப்படம் உலகம் முழுவதும் செப்டம்பர் 11, 2026 அன்று வெளியாகிறது!

சில திரைப்படங்களின் சீக்வல் மட்டும்தான் வெளியீடு என்பதைத் தாண்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு நிகழ்வாக மாறிவிடுகின்றன. குறிப்பாக...

இஸ்லாமியர்கள் குறித்த பார்வையை இந்த படம் மாற்றி இருக்கிறது என்பதை பெரும் வெற்றியாக நினைக்கிறேன்! -‘ஹபீபி’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் மீரா கதிரவன் பேச்சு

மீரா கதிரவன் இயக்கத்தில் கஸ்தூரி ராஜா, மாளவிகா மனோஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்தின் வெற்றிக்கு...

More like this