HomeCinemaராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் கூட்டணியின் 'டபுள் ஐஸ்மார்ட்' டீசர் மே 15-ல் வெளியீடு!

ராம் பொதினேனி, பூரி ஜெகன்நாத் கூட்டணியின் ‘டபுள் ஐஸ்மார்ட்’ டீசர் மே 15-ல் வெளியீடு!

Published on

டைனமிக் இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் உஸ்தாத் ராம் பொதினேனியின் அட்டகாசமான கூட்டணியில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்திய திரைப்படமான ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்தின் மாஸ் ஆக்‌ஷன் என்டர்டெய்ன்மெண்ட் டீசர் மே 15-ம் தேதி ராமின் பிறந்தநாளன்று தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

டீசர் அறிவிப்பு போஸ்டரில் ராம் ஒரு பவர் பேக் அவதாரத்தில் இருக்கிறார். டைகர் ஸ்ட்ரிப் சட்டை மற்றும் டோர்ன் ஜீன்ஸ் அணிந்துள்ள ராம் ஒரு கையில் சிகரெட்டையும், மற்றொரு கையில் பட்டாசுகளையும் பிடித்திருக்கிறார். இதில் இருந்து மாஸ் ஆக்‌ஷன் ட்ரீட் ரசிகர்களுக்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ படத்தின் இரண்டாம் பாகமான இந்த படம் அதிக பட்ஜெட்டில் உருவாகிறது. இதன் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதால், அடுத்தடுத்த அப்டேட்களுடன் வரவுள்ளனர்.

டபுள் ஆக்‌ஷன், டபுள் மாஸ் மற்றும் டபுள் எண்டர்டெயின்மெண்ட் என இதன் இரண்டாம் பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மீறியதாக இருக்கும். இதுவரை இல்லாத அளவுக்கு ராம் ஸ்டைலிஷாகவும், நடிகர் சஞ்சய் தத் பவர்ஃபுல்லான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்.

‘ஐஸ்மார்ட் ஷங்கர்’ உட்பட பல படங்களில் பூரி ஜெகன்நாத்திற்கு சிறந்த இசையை வழங்கிய மெல்லிசை பிரம்மா மணி ஷர்மா ‘டபுள் ஐஸ்மார்ட்’ படத்திற்கும் இசையமைக்கிறார். ஒளிப்பதிவை சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் கையாள்கின்றனர்.

ராம் மற்றும் பூரியின் காம்பினேஷனில் உருவாகும் ‘டபுள் ஐஸ்மார்ட்’ திரைப்படம் பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்படுகிறது.

படக் குழு:
எழுத்தாளர், இயக்குநர்: பூரி ஜெகன்நாத்,
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கவுர்,
பேனர்: பூரி கனெக்ட்ஸ்,
சிஇஓ: விசு ரெட்டி,
இசை: மணி ஷர்மா,
ஒளிப்பதிவு: சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி,
ஸ்டண்ட் டைரக்டர்: கெச்சா, ரியல் சதீஷ்,
மக்கள் தொடர்பு: வம்சி-சேகர்

Latest articles

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

ஜெயராம் –அஷ்வின் நடிக்கும் குட் நியூஸ் திரைப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!

https://www.youtube.com/watch?v=jKEjOHlUAdo சாய் வினோத் ஜெயக்குமார் வழங்கும் Movietron Production தயாரிப்பில், ஜெயராம் மற்றும் அஷ்வின் இணைந்து நடிக்கும் “குட் நியூஸ்”...

விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் லைட் வெயிட் பேபி படத்தின் படப்பிடிப்பு நிறைவு… ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! 

ஸ்டாண்ட் -அப் காமெடியன் 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும்...

More like this