HomeCinemaயோகிபாபு நடிக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தை இயக்கும் சுரேஷ் சங்கையா!

யோகிபாபு நடிக்கும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் திரைப்படத்தை இயக்கும் சுரேஷ் சங்கையா!

Published on

யோகிபாபு கதைநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம், சுரேஷ் சங்கையா இயக்க டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் படைப்பாக உருவாகிறது. லவ்லின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். ஜார்ஜ் மரியான், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சுரேஷ் சங்கையா இயக்கி வெளியான ஒரு கிடாவின் கருணை மனு’, சத்திய சோதனை’ படங்கள் எல்லா தரப்பிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது அவர் இயக்கும் புதிய பட அறிவிப்பு ரசிகர்களுக்கு உற்சாகம் தந்துள்ளது.

படத்தை ஆர் பி டாக்கீஸ் எஸ் ஆர் ரமேஷ் பாபு, பாக்ஸ் ஆஃபீஸ் ஸ்டுடியோஸ் ஜெகன் பாஸ்கரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.

இன்னும் தலைப்பிடப்படாத இந்த படத்தின் காட்சிகள், மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் படமாக்கப்பட்டு வருகிறது.

படம் குறித்து நடிகர் யோகி பாபுவிடம் கேட்டபோது, “சுரேஷ் சங்கையாவின் ஒரு கிடாவின் கருணை மனு, சத்திய சோதனை படங்களை பார்த்திருக்கிறேன். இரண்டும் எனக்கு மிகவும் பிடித்த படங்கள். அவருடைய படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருந்தேன், அந்த அதிர்ஷ்ட வாய்ப்பு இப்போது கிடைத்துள்ளது. இது டிஸ்னி+ ஹாட்ஸ்டாருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படைப்பு. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான அனுபவமாக இருக்கும். வரும் காலங்களில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் வழங்கும் தரமான கதையம்சமுள்ள படைப்புகளில் நான் தொடர்ந்து நடிப்பேன்” என்றார்.

இயக்குநர் சுரேஷ் சங்கையாவிடம் கேட்டபோது, “இந்த படத்தின் திரைக்கதை அனைத்து பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில், அசத்தலான பொழுதுபோக்குடன்,  பரபரப்பான ரோலர் கோஸ்டர் அனுபவமாக இருக்கும். சமூகத்திற்குத் தேவையான அவசியமான செய்தியும் இருக்கும்” என்றார்.

படக்குழு:
இசை: நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு: வி தியாகராஜன்
கலை இயக்கம்: பி எல் சுபேந்தர்
படத்தொகுப்பு: ஆர். ராமர்

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this