HomeCinema‘மார்க் ஆண்டனி'யில் 'தங்கராஜ் த கோல்டு' கதாபாத்திரத்தில் நடித்த மலேசிய தொழிலதிபர் டிஎஸ்ஜி ராஜாவுக்கு கிடைத்த...

‘மார்க் ஆண்டனி’யில் ‘தங்கராஜ் த கோல்டு’ கதாபாத்திரத்தில் நடித்த மலேசிய தொழிலதிபர் டிஎஸ்ஜி ராஜாவுக்கு கிடைத்த பன்னாட்டு அங்கீகாரம்!

Published on

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரைச் சேர்ந்தவரும் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருமான டத்தோஸ்ரீ ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜா தனது சொந்த முயற்சியாலும் கடின உழைப்பாலும்  முன்னேறியவர். அங்கு முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக உள்ளார். பல்வேறு துறைகளில் தடம் பதித்து சாதித்து வருகிறார். தற்போது மலேசிய வேளாண்மை மற்றும் உணவுத்துறையின் (AGRO MALAYSIA) தலைவராகவும் உள்ளார்.

அதனைத் தொடர்ந்து தற்போது சினிமா துறையிலும் தடம் பதித்து சாதித்து வருகிறார். ‘DSG CREATIONS’ என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நிறுவி அதன் மூலம் கோலிவுட்டில் படத் தயாரிப்பு, பட வெளியீடு, சந்தைப் படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக 2023-ஆம் ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும்  S.J.சூர்யா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘மார்க் ஆண்டனி’ திரைப்படத்தில் ‘தங்கராஜ் The Gold’ என்ற கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே தமிழ்த் திரையுலகில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின.

இந்நிலையில் அவருக்கு பன்னாட்டு அங்கீகாரம் கிடைத்துள்ளது. உலக வங்கியின் பன்னாட்டு நிதிக்கான கூட்டு நிதியம் மற்றும் தனியார் திட்ட நிதிக் குழு தலைமை அதிகாரிகள் காணொளி காட்சி மூலம் டத்தோஸ்ரீ ஜி என்கிற டிஎஸ்ஜி ராஜாவை மலேசியாவில் தொடர்பு கொண்டு உரையாடி, பின்னர் கேபிடல் ஒன்(Capital One) ஆலோசனைக் குழுமத்தின் தலைவராக நியமித்தார்கள். இது அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் இயங்கி வரும் உலக வங்கி – பன்னாட்டு நிதிக்கான கூட்டு நிதியத்தின் அதிகாரிகள் அளித்த கௌரவ பொறுப்பாகும். இது அவரது பொது வாழ்க்கையில் முக்கியமான அங்கீகாரம் ஆகும். இது அவரது வாழ்க்கை எனும் மணிமகுடத்தில் வைரமாக இருக்கும்.

இவரது புதுவிதமான கூட்டணியுடன் கூடிய தமிழ்ப் படங்கள் பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு 

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா...

தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர்...

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல...

More like this