HomeGeneralஇசையமைப்பாளர் தேவா மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல்

இசையமைப்பாளர் தேவா மறைவு: டி.ராஜேந்தர் இரங்கல்

Published on

தமிழ் திரையுலகத்தில் 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இசையமைத்து, தன் தித்திக்கும் இசையால் திரை உலகத்தையே கட்டி ஆண்ட அந்த தேனிசை தென்றல் தேவா அவர்கள் மறைந்து விட்டார் என்ற செய்தி நெஞ்சத்தை வாட்டுகின்றது. அந்த தேனிசை தென்றல் ஓய்ந்தது ஏன். அந்த திரையுலகத்தின் இசை தூண் சாய்ந்தது ஏன். தெரியவில்லை. நெஞ்சம் தாங்கவில்லை.
தமிழ் திரை உலகத்தின் சூப்பர் ஸ்டார் நம்முடைய ரஜினிகாந்த்தில் தொடங்கி, உலகநாயகன் கமல்ஹாசன் என்று அத்தனை முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கும் மட்டுமல்லாமல், எண்ணற்ற நட்சத்திரங்களின் படங்களுக்கு இசையமைத்து, அந்த படங்களை எல்லாம் ஜொலிக்க வைத்தவர். வெற்றி முத்திரையை பதித்து காட்டியவர். எந்த இயக்குனர் என்றாலும் அவர்களிடத்திலே எளிமையாக பழகக்கூடிய ஒரு இசையமைப்பாளராய், தயாரிப்பாளருக்கு கைகொடுக்கும் இசையமைப்பாளராய், வாழ்ந்து காட்டியவர் தான் தேவா.
என் மகன் சிலம்பரசன் நடித்த ‘தம்’ திரைப்படத்தில் ‘கலக்குவேன் கலக்குவேன்… கட்டம் கட்டி கலக்குவேன்’… என்று அத்தனை பாடல்கள் மூலம் கலக்கியவர், இன்றைக்கு கலங்க வைத்துவிட்டு சென்றுவிட்டாரே என்பதை நினைக்கும் போது நெஞ்சம் தாங்கவில்லை. அவரை இழந்து வாடக்கூடிய தமிழ் திரை உலகத்தினருக்கும், அவருடைய இல்லத்தாருக்கும், என்னுடைய ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றேன்…
இப்படிக்கு,
தமிழ் திரைப்பட இயக்குனர்,
நடிகர்,
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்,
திரைப்பட விநியோகஸ்தர்,
தமிழ்நாடு திரைப்பட
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்
டி.ராஜேந்தர்

Latest articles

சந்தீப் கிஷன், உகந்தர் முனி, ஷைனிங் பிக்சர்ஸ் இணையும் ‘கரிகாலா’ திரைப்படம் பூஜையுடன் பிரம்மாண்டமாகத் தொடங்கியது!

நம்பிக்கைக்குரிய இளம் கதாநாயகர்களில் ஒருவரான சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான பான்-இந்தியா சமூகக் கற்பனைத் திரைப்படமான ‘கரிகாலா’, ...

சரவணன் – வரலட்சுமி சரத்குமார் நடிக்கும் ‘சட்டமும் நீதியும் 2’ தொடரின் டிரெய்லரை வெளியிட்டது தமிழ் ZEE5!

https://www.youtube.com/watch?v=P3J4Dq3rcpw முதல் சீசனுக்குக் கிடைத்த பாராட்டுகளையும் ரசிகர்களின் வரவேற்பையும் தொடர்ந்து, சரவணன் மீண்டும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தியாக நடிக்க, வரலட்சுமி சரத்குமார்...

தேனிசைத் தென்றல் அண்ணன் தேவா அவர்களின் மரணம் பேரிழப்பு! -இயக்குநர் வ.கௌதமன்

இணை இயக்குநராக உனக்காகப் பிறந்தேன், சிந்துபாத், காதலே நிம்மதி, கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய நான்கு படங்களும் இயக்குநராக கனவே...

நடிகை கீர்த்தி சுரேஷ் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான ‘அக்கா’ டீசர்!

நெட்ஃபிளிக்ஸ் மற்றும் யஷ் ராஜ் ஃபிலிம்ஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ‘அக்கா’ இணையத்தொடர் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது....

More like this