2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன.
தனுஷ் நடித்து இயக்கிய ராயன் திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படமாக தேர்வாகியுள்ளது. கேப்டன் மில்லர் படத்தில் நடித்த தனுஷ் சிறந்த நடிகராக (Special Mention) தேர்வாகியிருக்கிறார். கார்த்தி நடித்த மெய்யழகன் படமும் விருது பெற்றுள்ளது.
இந்திய அளவில் முக்கிய ஆளுமைகள் ஜூரியாக செயல்பட்டு தேசிய விருதுக்கான படைப்புகளை தேர்வு செய்திருக்கிறார்கள். அவர்களில் தமிழ்நாட்டிலிருந்து முழு நீள திரைப்படங்களுக்கான (Feature film) பிரிவில் நடன இயக்குநர் கலா மாஸ்டர் பங்கேற்றுள்ளார். குறும்படங்கள், ஆவணப் படங்கள், அனிமேஷன் ஆகிய (Non feature film) பிரிவில் இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு பங்கேற்றுள்ளனர்.
பல மாநிலங்களிலிருந்து பல மொழிகளில் உருவான படைப்புகளுக்கான தேசிய விருதை பிரமாண்டமான விழாவில் ஆண்டுதோறும் இந்திய குடியரசுத் தலைவர் வழங்கி வருகிறார். இந்தியளவில் திரைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது என்பதால் விருது அறிவிப்பும், விருது வழங்கும் விழாவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது!


