HomeGeneralவெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

Published on

விஜயகாந்த் நடித்த ‘பெரியண்ணா’, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த ‘நாகா’ படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின் இணை இயக்குநராகப் பணியாற்றியவர்.

அவர் அமைச்சர் வெங்கட்ரமணனை சந்தித்தார். அது பற்றி அவர் கூறுகையில் “இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் முதலமைச்சர் விஜய்யை வைத்து இயக்கிய ‘ரசிகன்’, ‘மாண்புமிகு மாணவன்’ மற்றும் ‘ஹரிதாஸ்’, ‘வட்டக்கானல்’ போன்ற பல படங்களில் வில்லத்தனமான கதாபாத்திரங்களில் நடித்தவர் ஆர்.கே, வரதராஜ். நாங்கள் இருவரும் எஸ்.ஏ.சி., சார் பயிற்சிப் பட்டறையில் பயின்றவர்கள். சமீபத்தில் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொருளாளரும் தமிழக அமைச்சருமான வெங்கட்ரமணனைச் சந்தித்தோம்.

ஆரம்ப காலத்தில் இருந்து எங்களது இயக்குநர் எஸ்.ஏ., சந்திரசேகர் மற்றும்  தமிழக முதல்வர் விஜய்யுடன் பயணித்து வருபவர் என்பதால் அவருடன் எங்களுக்குள் நல்ல நட்பு இருந்தது. அதுமட்டுமல்ல எங்களுக்குள் நல்ல புரிதலும் இருந்தது. தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகும் கூட, எங்களைப் பார்த்தவுடன் அதே நட்புடனும் பாசத்துடனும் பேசினார். அவரது அமைதியும் எளிமையும் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளும் அவரை இன்னும் பெரிய உயரத்திற்குக் கொண்டு செல்லும்” என அமைச்சர் வெங்கட்ரமணனைப் புகழ்ந்து நெகிழ்ச்சியுடன் கூறினார்.

Latest articles

மகுடம் சினிமா விமர்சனம்

விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள்...

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை...

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=nHZxWWcUltk குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின்...

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது....

More like this