Friday, December 26, 2025
spot_img
HomeUncategorized'திரௌபதி 2' படத்திலில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை போஸ்டர்...

‘திரௌபதி 2’ படத்திலில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை போஸ்டர் வெளியானது!

Published on

வரலாற்று காவியமாக உருவாகி வரும் ‘திரௌபதி 2’ படத்தில் திரௌபதி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது!

இயக்குநர் மோகன்.ஜியின் கதையில் மிகத்தீவிரமான, ஆழமான மற்றும் உணர்வுப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கும் இந்த கதாபாத்திரம் ‘திரெளபதி’ ஃபிரான்சைஸில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும்.

நேதாஜி புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜி.எம். பிலிம் கார்ப்பரேஷன் இணைந்து சோழ சக்கரவர்த்தி தயாரித்திருக்கும் ‘திரௌபதி 2’ திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘திரௌபதி’ திரைப்படத்தின் நீட்சியாக அதன் வரலாற்று உலகத்தை காட்ட இருக்கிறது. 14 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இந்த திரைப்படம், ஹோய்சால பேரரசர் வீர வள்ளலார் III இன் இரத்தக்கறை படிந்த ஆட்சி, சேந்தமங்கலம் காடவராயர்களின் வீரம், எதிர்ப்பு மற்றும் தமிழ்நாட்டின் முகலாய படையெடுப்பால் உண்டான கொந்தளிப்பு ஆகியவற்றின் பின்னணியில் கதை விரிவடைகிறது. கடந்த காலத்தின் இந்த பிரமாண்டமான மறுகட்டமைப்பில், திரௌபதி தேவியின் முதல் பார்வை போஸ்டர் அறிமுகம், படத்தின் உணர்ச்சிகரமான தருணத்தை இரண்டாம் பாகத்துடன் வலுவாக இணைக்கும் புள்ளியாக மாறுகிறது.

முதல் பார்வை போஸ்டரில் நடிகை ரக்ஷனா இந்துசூடன் கலாச்சார ஆழத்தை வெளிப்படுத்தும் விதமாக கண்ணியத்துடனும் கம்பீரத்துடனும் காட்சியளிக்கிறார். அவரது கதாபாத்திரம் கதைக்களத்தின் வரலாற்று மற்றும் உணர்ச்சி தருணங்களை ஆழமாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, படத்தின் கருவான பெண் சக்தியை பிரதிபலிக்கிறது.

ரிச்சர்ட் ரிஷி மற்றும் ரக்ஷனா இந்துசூடன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க இவர்களுடன் நடிகர் நட்டி நட்ராஜ் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், நாடோடிகள் பரணி, சரவண சுப்பையா, வேல ராமமூர்த்தி, சிராஜ் ஜானி, தினேஷ் லம்பா, கணேஷ் கௌரங், திவி, தேவயாணி ஷர்மா மற்றும் அருணோதயன் ஆகியோரும் இந்த வரலாற்றுக் கதையில் நடித்துள்ளனர்.

போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், படத்தின் வெளியீட்டை ஒட்டி அதன் புரோமோஷனல் பணிகள் நடைபெறும்.

Latest articles

இளைஞன் காளி தன் காதலியின் பணத்தாசையை நிறைவேற்ற, தனது ஜெராக்ஸ் போலிருக்கிற உபேந்திரா என்ற பணக்காரனைக் கொலை செய்கிறான்....

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் – லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் கூட்டணியில் உருவாகும் ‘சிக்மா’ திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது!

  லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் 'சிக்மா' திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக...

ராதிகா நடித்துள்ள ‘தாய் கிழவி’ படத்தின் டீசர் வெளியானது! .

ராதிகா நடித்துள்ள 'தாய் கிழவி' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தரமான கதைகளை தேர்ந்தெடுத்து, திறமையாளர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி வரும் சிவகார்த்திகேயன்...

More like this

இளைஞன் காளி தன் காதலியின் பணத்தாசையை நிறைவேற்ற, தனது ஜெராக்ஸ் போலிருக்கிற உபேந்திரா என்ற பணக்காரனைக் கொலை செய்கிறான்....

ஜேசன் சஞ்சய் – சந்தீப் கிஷன் – லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் கூட்டணியில் உருவாகும் ‘சிக்மா’ திரைப்பட டீசர் 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்தது!

  லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் வழங்கும் 'சிக்மா' திரைப்படத்தில் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாக, நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக...
error: Content is protected !!