HomeCinemaஅனைத்துவிதமான வன்மங்களுக்கும் எதிரான படம் இது! -'டியூட்' படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

அனைத்துவிதமான வன்மங்களுக்கும் எதிரான படம் இது! -‘டியூட்’ படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் கீர்த்தீஸ்வரன்

Published on

பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ நடித்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த அக்டோபர் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘டியூட்’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. வெற்றியை கொண்டாடும் வகையில் ரசிகர்களுக்கும் ஊடகத்தினருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை ஒருங்கிணைத்தனர்.

அப்போது பேசிய படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், “எனக்கு முதல் வெற்றி மேடை என்பதால் இது ரொம்பவே ஸ்பெஷலான மேடை. இந்தப் படத்தை ஏற்றுக்கொண்ட ரசிகர்களுக்கு நன்றி.

மூன்று படம் ஹாட்ரிக் வெற்றி கொடுத்திருக்கிறார் பிரதீப். அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார். சில விஷயங்கள் தைரியமாக வசனமாக வைப்பதற்கு பிரதீப் உறுதுணையாக இருந்தார். கிளைமாக்ஸில் வரும் ஆணவக்கொலை தொடர்பான வசனம், கவின் ஆணவக்கொலை சமயத்தில் ஏற்படுத்திய பாதிப்பால்தான் வைத்தோம்.

மமிதாவிடம் ஒரு சீன் பாதி சொல்லும்போதே உடனடியாக பிடித்துக் கொள்வார். சின்ன வயதில் இருந்தே சரத் சாரைப் பிடிக்கும். அவருடைய நகைச்சுவை காட்சிகளையும் விரும்பி பார்த்திருக்கிறேன்.

ரோகிணி மேம் இந்த அம்மா கதாபாத்திரத்தில் ஒத்துக் கொண்டு நடித்ததற்கு நன்றி. படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. ஒரு பெண் தனக்கான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவளுக்கு மட்டும்தான் உள்ளது. வேறு யாருக்கும் இல்லை என்பதைத்தான் ‘டியூட்’ பேசுகிறது. அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் இது. எனக்கான நல்ல அறிமுகத்தை இந்தப் படம் மூலம் கொடுத்திருக்கும் ரசிகர்களுக்கு நன்றி” என்றார்.

நடிகர் பிரதீப் ரங்கநாதன், “நவீன் சார், ரவி சாருக்கு நன்றி. உலகம் முழுவதும் இந்தப் படம் வெற்றியடைந்துள்ளது. அங்கெல்லாம் கொண்டு சேர்த்த என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நிகேத், எடிட்டர் பரத், காஸ்ட்யூமர் பூர்ணிமா என அனைவருக்கும் நன்றி. ஐஸ்வர்யா, ரிது, ரோகிணி மேம், சரத் சாருக்கு நன்றி. நிறைய சீன்களில் மமிதாவின் நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். இப்படி ஒரு அழகான படத்தைக் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. நிறைய விவாதங்களை இந்தப் படம் ஏற்படுத்தியிருக்கிறது. கேரளா, ஆந்திரா, துயாய், நார்த் அமெரிக்கா, நம் தமிழ் மக்கள் என அனைவரது ஆதரவுக்கும் நன்றி” என்றார்.

நடிகர் சரத்குமார், ” படத்திற்கு ஆதரவு கொடுத்த மீடியா, ரசிகர்களுக்கு நன்றி. படத்தில் வாய்ப்பு கொடுத்த மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு நன்றி. அப்பா, தாத்தா கதாபாத்திரங்கள் வெறுமனே நடிக்காமல் அந்தக் கதையின் நாயகனாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அப்படித்தான் ‘காஞ்சனா’, ‘போர் தொழில்’ போன்ற படங்களில் நடித்தேன். ‘டியூட்’ படத்திலும் நல்ல கதாபாத்திரம் கொடுத்த கீர்த்திக்கு நன்றி. அழகான சோஷியல் மெசேஜை சரியாக கீர்த்தி கொண்டு சேர்த்திருக்கிறார். மூன்று முறை இந்தப் படம் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் புதிதாக தெரிகிறது. கீர்த்தி செதுக்கிய சரத்குமாரைதான் நீங்கள் திரையில் பார்த்தீர்கள். பிரேக்கப் சீனில் மமிதா மிகச்சிறப்பாக நடித்திருந்தார். எல்லோருமே சிறப்பாக ‘டியூட்’ படத்தில் பணிபுரிந்திருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை மமிதா பைஜூ, “இது என்னுடைய முதல் தமிழ் வெற்றி மேடை! சந்தோஷமாக இருக்கிறது. என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள், கீர்த்தி அண்ணாவுக்கு நன்றி. பிரதீப், சரத் சார், ரோகிணி மேம், ஐஸ்வர்யா, ரிது, சாய் எல்லோரும் எனக்கு பயங்கர எனர்ஜி கொடுத்தார்கள். பார்வையாளர்கள் அனைவரின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” என்றார்.

Latest articles

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...

கருப்பு சினிமா விமர்சனம்

காவல்துறையும் நீதித்துறையும் நேர்மையாக செயல்படுவதில்லை என்கிற மோசமான சூழ்நிலையை மாற்ற கருப்பு சாமி, கருப்பு கோட் அணிகிற கதை. ஒரு...

More like this

மத்திய அரசு ஓடிடி நடத்தும்போது தமிழ்நாடு அரசால் செய்ய முடியாதா? -’சிலம்பம்’ பட விழாவில் இயக்குநர் மோகன்.ஜி

ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர்.ஏ.கே.எஸ்.ஜோதி எழுதி இயக்கிய திரைப்படம் ‘சிலம்பம்.' அறிமுக நடிகர் அஜித் நாயகனாக நடிக்க, வில்லனாக ஹரிஷ்...

மே மாத வெளியீடாக திரைக்கு வருகிறது ரோபோ சங்கர் நடித்துள்ள ‘ஈகோ ராமன்.’

அஸ்ருதா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரோபோ சங்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள படம் 'ஈகோ ராமன்.' கதாநாயகனாக சிபி புவனச்சந்திரனும், நாயகியாக...

96, மெய்யழகன் படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சி பிரேம்குமார் இயக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. மலையாள திரையுலகின்...