HomeCinemaநிவின் பாலி & நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ பட டீசர் இணையத்தில்...

நிவின் பாலி & நயன்தாரா ஜோடி மீண்டும் இணையும், ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ பட டீசர் இணையத்தில் வைரல்!

Published on

நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த டீசர், இப்போது வைரலாகி வருகிறது. மேலும் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து, படம் மெகா ஹிட்டாகும் என்கிற எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது.

ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நிவின் பாலி – நயன்தாரா எனும் நட்சத்திர ஜோடி மீண்டும் இணையும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர்.

இன்று வெளியான அசத்தலான டீசர், பள்ளி வாழ்க்கையின் வண்ணமயமான வாழ்க்கையையும், பரபரப்பான உலகையும் சித்தரிக்கிறது. மேலும் மாணவர்களை மையமாகக் கொண்டு கதை நகரும் என்பதை டீசர் வெளிப்படுத்தியுள்ளது. காமெடி, வேடிக்கை, அதிரடி, சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் கலந்த கமெர்ஷியல் எண்டர்டெய்னர் என டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நிவின் பாலி தனது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் துறுதுறுப்புடன் குறும்பு மிக்க ஹரி என்ற கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். அதேசமயம், நயன்தாரா ஒரு வலிமையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது கதைக்கு பெரும் சுவாரஸ்யத்தை சேர்க்கும் அம்சமாக அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளியாகிய ப்ளாக்பஸ்டர் “லவ் ஆக்சன் டிராமா” திரைப்படத்திற்குப் பின், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நிவின் பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணைந்துள்ள இந்தப்படம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜனகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, கீரண் கொண்டா, காமருதீன் கே உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.

மேலும், மலையாளத் திரையுலகில் இருந்து அஜு வர்கீஸ், ஷரஃபுதீன், சுரேஷ் கிருஷ்ணா, மல்லிகா சுகுமாரன், லால், ஜகதீஷ், ஜானி ஆன்டனி ஆகியோர் இணைந்துள்ளதால், இந்த ஆண்டு வெளிவரும் மிக அதிக நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.

படத்தை Maverik Movies Pvt. Ltd தயாரிப்பில், நிவின் பாலியின் ஹோம் பேனரான Pauly Jr. Pictures மற்றும் Rowdy Pictures Pvt. Ltd. இணைந்து தயாரிக்கின்றன.

Latest articles

கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

அதிகாரம், பாரம்பரியம், பழிவாங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட பிரம்மாண்டமான கேங்ஸ்டர் கதையில் கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா ஆப்தே...

அர்ஜுன் தாஸ் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள ஜான் டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

அர்கா மீடியாஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஷோபு யார்லகட்ட - பிரசாத் தேவினேனி ஆகியோரின் தயாரிப்பில் இயக்குநர் மதுமிதா...

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் பிரமாண்டமான OTT சீரிஸ்கள்… திரைப்படத் தயாரிப்பிலும் தீவிரமாகக் களமிறங்கும் ஹன்சா என்டர்டெயின்மென்ட்!

விஜயதசமி நன்னாளான அக்டோபர் 20, 2026 அன்று, ஹன்சா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது புதிய படைப்புத் திட்டங்களை அறிவித்துள்ளது....

ஹைக்கூ சினிமா விமர்சனம்

ஃபீல்குட் உணர்வில் மிதக்க விரும்புகிறவர்களுக்கான அழகிய படைப்பு. ஹீரோ கல்லூரிக் காலத்தில் சக மாணவியைக் காதலிக்க, நாட்கள் உற்சாகமாக நகர்கிறது....

More like this