HomeCinemaதனுஷ் நடிக்கும் D54 பூஜையுடன் தொடங்கியது!

தனுஷ் நடிக்கும் D54 பூஜையுடன் தொடங்கியது!

Published on

தனுஷ் நடிக்கும் D54 படம், வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தலைமையில் பூஜையுடன் இனிதே தொடங்கியுள்ளது.

‘போர் தொழில்’ ப்ளாக்பஸ்டர் ஹிட் திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த புதிய திரைப்படத்தினை இயக்குகிறார். போர் தொழில் திரைப்படத்தின் திரைக்கதையில் பணியாற்றிய ஆல்ஃபிரட் பிரகாஷுடன் இணைந்து விக்னேஷ் ராஜா இப்படத்தின் திரைக்கதையை உருவாக்கியுள்ளார். இந்தப் படம், பரபரப்பான கதைக்களத்தில், எமோஷனல் திரில்லராக உருவாகிறது.

பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தில் தேசிய விருது நாயகன் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல் முறையாக மமிதா பைஜு ஜோடியாக இணைந்துள்ளார். கே எஸ் ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிரித்வி பாண்டியராஜன், உள்ளிட்ட பல்வேறு திறமையான நட்சத்திரங்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

இந்தப் படம் பெரும் பொருட்செலவில் இந்தியாவின் பல இடங்களில், தீவிரமான கதைக்களத்தில், ஸ்டைலான ஆக்சன் திரில்லராக பிரம்மாண்டமாக படமாக்கப்படுகிறது. ஒரு மிகச்சிறந்த படைப்பாக வேல்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பில், D54 ஒரு பிரம்மாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது.

D54 திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்ப குழு பணிபுரிகிறார்கள். தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைக்கிறார், தனித்துவமான ஒளிப்பதிவுக்கு பெயர் பெற்ற தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். கதைசொல்லலில் புதுமையை பின்பற்றும் ஸ்ரீஜித் சாரங்க் எடிட்டிங் செய்கிறார். தயாரிப்பு வடிவமைப்பு மாய பாண்டி மற்றும் காஸ்டியூம் தினேஷ் மனோகர் & காவியா ஸ்ரீராம் ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.

Latest articles

ராவ் பகதூர் (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

மனித மனதின் உளவியல் சிக்கல்களைப் பேசும் விசித்திரமான பரிசோதனைப் படம். ராவ் பகதூர் மாபெரும் ஜமீன் பரம்பரை வாரிசு; தனது...

நிறைய உதவி இயக்குநர்களுக்கு உதவி செய்யத் தயாராக இருக்கிறேன்; நல்ல கதையோடு வாருங்கள்! -‘அர்ஜுனன் பேர் பத்து’ பட விழாவில் நடிகர் யோகிபாபு பேச்சு

யோகிபாபு நடித்துள்ள 300 வது படம் அர்ஜுனன் பேர் பத்து. இந்த படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில்...

நச்சு பூச்சிக்கொல்லி விவசாயத்தின் பின்னணியை மையமாகக் கொண்ட ‘தி இந்தியா ஸ்டோரி’ புதிய போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறது!

Zee Studios  மற்றும், MIG Production இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ திரைப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு...

தமிழ்வாணன் தயாரித்து நடிக்க ‘போங்கு’ பட இயக்குநர் தாஜ் இயக்கும் புதிய படம் தொடங்கியது!

மலைகளின் இளவரசியான ஏலகிரி மலையில் வாழும் மக்களின் வாழ்வியல் முறையையும் தற்போதைய அவர்களின் நிலையையும் எடுத்துரைத்து, அந்த மக்களுக்கு...

More like this