HomeCinema’Dude' படத்தில் குறளாக நடிக்கும் மமிதா பைஜூ!

’Dude’ படத்தில் குறளாக நடிக்கும் மமிதா பைஜூ!

Published on

பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் பான் இந்தியன் படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘Dude’. இந்த வருடம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. நடிகை மமிதா பைஜூவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தில் அவரது கதாபாத்திரப் பெயர் ‘குறள்’ என்பதை படக்குழு வெளியிட்டுள்ளது.

யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிறகு ’புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பல பிரம்மாண்டமான வெற்றிப் படங்களைக் கொடுத்த பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் உடன் பான் இந்தியன் படமான ‘Dude’ல் இணைந்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். ‘பிரேமலு’ படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தில் நடித்திருப்பது பற்றி நடிகை மமிதா பைஜூ பகிர்ந்து கொண்டதாவது, “மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனத்துடன் ‘Dude’ படத்தில் பணிபுரிந்திருப்பது மகிழ்ச்சி. பிரதீப் மிகவும் எனர்ஜிடிக்கான நடிகர். எங்கள் காம்பினேஷனும் கதையும் நிச்சயம் ரசிகர்களுக்குப் பிடிக்கும். இந்தப் படத்தில் எனது கதாபாத்திரப் பெயர் குரல். ‘Dude’ படத்துடன் இந்த வருட தீபாவளியைக் கொண்டாட ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர்.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this