HomeCinemaவிமல் _ எஸ் எழில் கூட்டணியின் காமெடி விருந்தான 'தேசிங்குராஜா 2' ஜூலை 11ம் தேதி...

விமல் _ எஸ் எழில் கூட்டணியின் காமெடி விருந்தான ‘தேசிங்குராஜா 2’ ஜூலை 11ம் தேதி வெளியாகிறது!

Published on

எஸ் எழில் இயக்கும் படங்களில் மனதை தொடும் இதமான காதல், அதிரும் காமெடி, ஆக்‌ஷன், சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களும் நிறைந்திருக்கும். படம் பெரியளவில் வெற்றி பெறும். அப்படி ஹிட்டடித்த படங்களில் ஒன்று ‘தேசிங்குராஜா.’

அந்த படத்தின் 2ம் பாகம் 10 வருடம் கழித்து, ‘தேசிங்குராஜா 2’ என உருவாகி வரும் ஜூலை 11ம் தேதி கோடை கொண்டாட்டமாக உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

‘தேசிங்குராஜா’ பட நாயகன் விமல் இந்த பாகத்திலும் நடிக்கிறார். முக்கிய கேரக்டரில் ஜனா நடிக்கிறார். தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான ‘ரங்கஸ்தலம்’ படத்தில் நடித்த பூஜிதா பொனாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.

வெவ்வேறு நோக்கங்களுடன் கல்லூரியில் படிக்கும் நான்கு நண்பர்கள் வேறு வேறு பாதையில் பயணிக்கிறார்கள். இவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது.. இவர்கள் எந்த சூழ் நிலையில் மீண்டும் சந்திக்கிறார்கள் என்கிற கதை முழுக்க முழுக்க காமெடியாக உருவாகியுள்ளது.

விஜய் நடித்த ‘துள்ளாத மனமும் துள்ளும்’, அஜித் நடித்த ‘பூவெல்லாம் உன் வாசம்’, ‘ராஜா’ , சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம் கொத்திப் பறவை’, பிரபுதேவா, சரத்குமார் நடித்த ‘பெண்ணின் மனதை தொட்டு’, ஜெயம்ரவி நடித்த ‘தீபாவளி’, விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் எஸ் எழில்.

Latest articles

இசைஞானி இளையராஜாவின் உறவினர் ஜெயனுடன் களமிறங்கும் ‘ராஜாஸ் பிளேலிஸ்ட்’ படப்பிடிப்பு நிறைவு: திரைப்படம் தீவிரமாகத் தொடங்கியது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள்.

எலிஃபன்டைன் எக்ஸ் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ராஜாஸ் பிளேலிஸ்ட்" திரைப்படத்தின் முழு படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்து, தற்போது...

தமிழக அரசுக்கு ‘ஹரா’ படக்குழுவின் நன்றி!

'சில்வர் ஜூப்ளி ஸ்டார்' மோகன் அவர்கள் நடித்தும், இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்திலும் கடந்த ஆண்டு வெளியான...

வெள்ளித்திரை – சின்னத்திரை – தமிழ்த் திரை விருதுகள் இனி ஆண்டுதோறும் வழங்கப்படும்! -தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழாவில் அமைச்சர் ராஜ்மோகன்

தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் சங்கத்தின் 2026-28 ஆம் ஆண்டிற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளின் பதவி ஏற்பு விழா...

More like this