HomeMovie Reviewகப்புள் ஃபிரண்ட்லி சினிமா விமர்சனம்

கப்புள் ஃபிரண்ட்லி சினிமா விமர்சனம்

Published on

ஒரு ஈகோ மோதலில் பிரிகிற காதலர்கள் மீண்டும் சேர்கிறார்கள். சேர்ந்தபின் பழைய மகிழ்ச்சி விலகிப் போய்விடுகிறது. ஆனாலும், முன்பை விட காதல் அதிகரிக்கிறது. அது படம் பார்க்கும் நம்மை இனம்புரியாத உணர்வுக்குள் தள்ளிவிடுகிறது.

பிரிவதற்கு முன் அவர்களிடம் எப்படியான மகிழ்ச்சி சூழ்ந்திருந்தது, பிரிவு எதனால் நிகழ்ந்தது, பிரிந்தவர்கள் எப்படி சேர்ந்தார்கள், சேர்ந்தபின் என்னவானது என்ற கேள்விகளுக்கு பதில்களாய் விரிகிறது ‘கப்புள் ஃபிரண்ட்லி’யின் ஸ்க்ரீன்பிளே.

நாயகன் சந்தோஷ் சோபனுக்கு எந்த உணர்வுக்கு எந்தளவில் நடிக்க வேண்டும் என தெரிந்திருக்கிறது. அதனாலேயே நடிப்பு பிடித்துப்போய் விடுகிறது.

நாயகி மானசா வாரணாசியும் நடிப்பில் சளைத்தவரில்லை. உற்சாகமூட்டவும் செய்கிறார்; மனம் உருகவும் வைக்கிறார்.

காமெடிக்கு ஒட்டிக் கொண்டிருப்பவர் போல நினைக்கவைத்து கதையின் முக்கியமான கட்டங்களிலும் எட்டிப் பார்க்கிறார் யோகிபாபு.

சுனில், லிவிங்ஸ்டன் உள்ளிட்ட மற்றவர்கள் முக்கியத்துவமிக்க கேரக்டர்களில் வந்து போகிறார்கள்.

தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவு சென்னையை நான்கைந்து முறை முழுமையாக சுற்றிப் பார்த்த ஃபீலிங் தருகிறது. கதையின் உணர்வுகள் புரிந்து பின்னணி இசை தந்திருக்கிறார் ஆதித்யா ரவீந்திரன்.

பெரும்பாலான காதலர்கள் காதலுக்கு மரியாதை தருவதை விட்டுவிலகி, தாறுமாறான பாதைகளில் பயணிக்கும் காலகட்டத்தில் இந்த படத்தில் காதலர்கள் காதலுக்கு தருகிற மதிப்பு அத்தனை சிலிர்ப்பாக இருக்கிறது. காட்சிகள் அத்தனையிலும் உயிரோட்டம் ததும்புகிறது.

கப்புள் ஃபிரண்ட்லி – காதலுக்கு மரணமில்லை!

Rating 3.5 / 5

Latest articles

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

சென்னை – மலேசியா கூட்டு முயற்சியில் நட்டி – விதார்த் இணைந்து நடிக்கும் சொடக்கு படத்தின் டிரெய்லர் ஜூலை 26-ம் தேதி மலேசியாவில் வெளியிடப்படுகிறது! 

நட்டி, விதார்த், கயல் ஆனந்தி, ரக்‌ஷிதா உள்ளிட்டோர் நடிக்க தேவா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் மலேசியா தயாரிப்பு நிறுவனமான ஜூபிலி...

சூர்யா பாடும் பாடல், சூர்யாவும் மமிதாவும் போடும் ஆட்டம்… உற்சாகம் தெறிக்க வெளியானது ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் இரண்டாவது சிங்கிள்!

https://www.youtube.com/watch?v=rfza9kCybEs சூர்யா – மமிதா பைஜு கலக்கும் 'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தின் இரண்டாவது சிங்கிள் 'தி வெட்டிங் சாங்'...

More like this