HomeCinemaதென்னிந்தியாவின் இசைத் தலைவராக அசோக் பர்வானியை வார்னர் மியூசிக் இந்தியா நியமித்துள்ளது!

தென்னிந்தியாவின் இசைத் தலைவராக அசோக் பர்வானியை வார்னர் மியூசிக் இந்தியா நியமித்துள்ளது!

Published on

தென்னிந்தியாவின் இசைத் தலைவராக அசோக் பர்வானியை நியமித்ததாக வார்னர் மியூசிக் இந்தியா இன்று அறிவித்துள்ளது. தென்னிந்தியாவின் முன்னணி டிஜிட்டல் மீடியா மற்றும் இசை நிறுவனங்களில் ஒன்றான டிவோவை வார்னர் மியூசிக் இந்தியா பெரும்பான்மையாக கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, இந்த நியமனம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

பிராந்திய பட்டியல் விரிவாக்கத்தை விரைவுபடுத்துதல், படைப்பாளர் மற்றும் பார்ட்னர் உறவுகளை வலுப்படுத்துதல், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் அதன் ஒட்டுமொத்த வளர்ச்சியை விரைவுபடுத்துதல் போன்றவற்றில் வார்னர் மியூசிக் இந்தியாவும் டிவோவும் இணைந்து கவனம் செலுத்துகின்றன.

இந்தியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நாற்பது வருடங்களுக்கும் மேலான தொழில்துறை அனுபவத்தை கொண்டுள்ளார் பர்வானி. குறிப்பாக, சோனி மியூசிக் இந்தியாவில் தனது இருபது வருடகால பதவிக்காலத்தில், பிராந்தியத்தில் சோனி மியூசிக் சவுத் வணிகத்தை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார். இதுமட்டுமல்லாது, முன்னணி தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் நல்லுறவையும் தக்க வைத்தார்.

விநியோகம், வெளியீடு, டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் இன்ஃபுளூயன்சர் மார்க்கெட்டிங் ஆகியவற்றை வழங்கும் டிவோ தென்னிந்திய இசையமைப்பில் ஒரு முக்கிய சக்தியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. வார்னர் மியூசிக் இந்தியா 2023 ஆம் ஆண்டில் டிவோவை பெரும்பான்மையாக கையகப்படுத்தியது.

இந்த நிறுவனம் தற்போது பெரிய அளவிலான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் இசை பட்டியலை நிர்வகிக்கிறது. இதுமட்டுமல்லாது, வார்னர் இசை குழுமத்தின் வலுவான உலகளாவிய நெட்வொர்க்கை பிரதிபலிக்கும் வகையிலும் சமீபத்தில் சுயாதீன திறமைகளை மையமாகக் கொண்ட ஆர்டிஸ்ட்-ஃப்ர்ஸ்ட் லேபிளான லூப்டை அறிமுகப்படுத்தியது. பிராந்திய கலைஞர்களுக்கு புதிய சர்வதேச வாய்ப்புகளை உருவாக்க வடிவமைக்கப்பட்ட இலங்கையின் எம்-என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் டிவோவுடன் கூட்டு முயற்சியுடன் வார்னர் மியூசிக்கின் தடம் மேலும் விரிவடைந்தது.

வார்னர் மியூசிக் இந்தியா & சார்க் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெய் மேத்தா கூறுகையில், “தென்னிந்தியாவில் எங்கள் எதிர்கால திட்டத்துடன் ஒத்துப்போகும் நிபுணத்துவம் மற்றும் தொழில் உறவுகளை நிச்சயம் அசோக் வலுப்படுத்துவார். உள்ளூர் கலைஞர்களுக்கான உலகத் தரம் வாய்ந்த பாதைகளை உருவாக்குவதற்கும் இந்தியாவின் அற்புதமான இசையை உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்வதற்கும் அவரது அனுபவம் வாய்ந்த தலைமை மிக முக்கியமானதாக இருக்கும்” என்றார்.

டிவோவின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ஷாஹிர் முனீர் பகிர்ந்து கொண்டதாவது, “அசோக்கின் அனுபவமும் தொழில்துறை உறவுகளும் வார்னர் மியூசிக் இந்தியாவின் தெற்கு பிராந்தியத்திற்கு மிகப்பெரும் பலம். எங்கள் கேட்டலாக், பார்ட்னர்ஷிப்பை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பிராந்தியம் முழுவதும் உள்ள கலைஞர்களுக்கு வலுவான வணிக வாய்ப்புகளை உருவாக்குவது என அவரது தலைமை வார்னர் மியூசிக் நெட்வொர்க்கிற்குள் டிவோவின் பணியை வலுப்படுத்தும்” என்றார்.

ஹெட் ஆஃப் மியூசிக், அசோக் பர்வானி பகிர்ந்து கொண்டதாவது, “இத்தகைய துடிப்பான தருணத்தில் வார்னர் மியூசிக் இந்தியாவில் இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். டிவோவின் வலுவான கூட்டணியுடன் படைப்பாற்றலில் சிறந்து விளங்கும் தென்னிந்திய இசையை இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் வாய்ப்பாக இதை கருதுகிறேன். தென்னிந்திய இசை உலகளவில் செழிக்கவும் திறமையாளர்களுக்கு புதிய வாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கிறோம்” என்றார்.

வார்னர் மியூசிக் இந்தியாவின் தெற்கு உத்தியை வலுப்படுத்துவதிலும், டிவோவின் திறன்களை ஒருங்கிணைப்பதிலும், உலக அரங்கில் தென்னிந்திய இசையை விரிவுபடுத்துவதிலும் முக்கியமான படியாக பர்வானியின் நியமனம் பார்க்கப்படுகிறது.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this