Sunday, March 15, 2026
spot_img
HomeCinemaமிரட்டல் கேங்ஸ்டர்களாக கூல் சுரேஷ், செந்தில் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!

மிரட்டல் கேங்ஸ்டர்களாக கூல் சுரேஷ், செந்தில் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது!

Published on

கூல் சுரேஷ், செந்தில் நடிப்பில் மிரட்டலான கேங்ஸ்டர் படைப்பாக உருவாகவுள்ள புதிய படத்தின் பூஜை படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்துகொள்ள இன்று இனிதே நடந்தது.

இயக்குநர் மோகன் ஜி, ரவிமரியா, பிக் பாஸ் ராணவ், ஷனம் ஷெட்டி உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

ஒரு நாற்காலி அதில் அமரப்போகும் தலைவன் யார் எனும் போட்டி, நான்கு கேங்ஸ்டர் குழுக்களுக்கிடையே நடக்கிறது. அதில் வெல்லப்போவது யார் என்பதுதான் படத்தின் கதை.

திரை வாழ்க்கையில் மக்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்த நடிகர் செந்தில் முற்றிலும் மாறுபட்ட கேங்ஸ்டராக இப்படத்தில் கலக்கவுள்ளார். இவருடன் கூல் சுரேஷ் கேங்ஸ்டராக நடிக்க, எம் எஸ் ஆரோன் மிக முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். மகாநதி சங்கர், பொன்னம்பலம், கனல் கண்ணன், சென்ராயன், முரளி பிரபாகரன், ஸ்ரீவித்யா, வாரியர் சதீஷ், விஜய் யோகன் ஆகியோரும் நடிக்கின்றனர்.

முழுக்க முழுக்க அதிரடி திருப்பங்களுடன் ஆக்சன் கமர்ஷியலாக உருவாகப் போகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் துவங்கவுள்ளது; ஆந்திரா மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும்.

படக்குழு:-
எழுத்து, இயக்கம் : சாய் பிரபா மீனா
தயாரிப்பு : PMS CINE ENTERTAINMENT முரளி பிரபாகரன்
இசை : நரேஷ்
ஒளிப்பதிவு : ஜி.முத்து
படத்தொகுப்பு : நவீன் குமார்
கலை இயக்கம்: சுப்பிரமணி
நடன இயக்கம் : செந்தாமரை ரமேஷ் கமல்
பப்ளிக் சிட்டி டிசைன் : எஸ் கே ஜீவா
தயாரிப்பு மேற்பார்வை : கார்த்திக் & முரளி
இணை இயக்குனர் : ஷரவன்
சண்டை பயிற்சி : சூப்பர் குட் ஜீவா
மக்கள் தொடர்பு : வேலு

 

 

 

Latest articles

அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்த அழகான லவ் டிரமா ‘நீ Forever’ மார்ச் 27-ம் தேதி ரிலீஸ்!

இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர்  உருவாகியுள்ள 'தருணம்' என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ்...

வெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

அதிகாரத்தில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழ் இருக்க வேண்டும், எந்த நேரமும் புகழ் போதையில் மிதக்க...

கெணத்த காணோம் சினிமா விமர்சனம்

வறட்சிக்குப் பேர்போன ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் தண்ணீர்ப் பஞ்சத்திற்கு தீர்வுகாண கிணறு தோண்டுகிறார்கள். அதிகபட்சம் 20 அடி...

More like this

அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி, காமெடி, ரொமான்ஸ் கலந்த அழகான லவ் டிரமா ‘நீ Forever’ மார்ச் 27-ம் தேதி ரிலீஸ்!

இன்றைய நவீன கால காதலை மையமாக வைத்து இயக்குநர்  உருவாகியுள்ள 'தருணம்' என்ற வெற்றிப் படத்தைத் தொடர்ந்து, தயாரிப்பாளர்கள் புகழ்...

வெஞ்சென்ஸ் சினிமா விமர்சனம்

அதிகாரத்தில் இருக்க வேண்டும், அதிகாரத்தில் இருப்பவர்கள் தனக்கு கீழ் இருக்க வேண்டும், எந்த நேரமும் புகழ் போதையில் மிதக்க...
error: Content is protected !!