HomeCinemaகட்டீஸ் கேங் படக்குழுவினரால் கெளரவிக்கப்பட்ட ரஜினி ரசிகர்கள்! ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கி அசத்தல்.

கட்டீஸ் கேங் படக்குழுவினரால் கெளரவிக்கப்பட்ட ரஜினி ரசிகர்கள்! ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கி அசத்தல்.

Published on

மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு உள்ளிட்ட மலையாளப் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை பெருமளவில் கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது. அதையடுத்து ‘கட்டீஸ் கேங்’ என்ற மலையாளப் படம் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

அனில் தேவ் இயக்கியுள்ள இந்த படத்தில் உன்னிலாலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வரும் சவுந்தரராஜா இந்த படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார்.

இந்த படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்களும், எழுத்தாளருமான ராஜ் கார்த்திக், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். ரஜினிகாந்த் படங்களை பார்த்து வளர்ந்தவர். இவர் ரஜினிகாந்த் அவர்களை வைத்து படம் இயக்க ஆசை. ஆனால், அது நிறைவேறாமல் இருக்கிறது. இருப்பினும், ரஜினிகாந்தை முன்னோடியாக வைத்து கட்டீஸ் கேங் என்ற படத்திற்கு கதை எழுதி இருக்கிறார்.

கதாநாயகன் ரஜினியின் தீவிர ரசிகராக நடித்து இருக்கிறார். இந்த படம் கேரளா மட்டுமில்லாமல் தமிழ் நாட்டிலும் வெளியாக இருக்கிறது. இதை கொண்டாடும் விதமாக சென்னை ரோகிணி தியேட்டரில் கட்டீஸ் கேங் படத்தின் டிரைலரை வெளியிட்டு இருக்கிறார்கள்.

ரஜினிகாந்த் ரசிகர்களை கெளரவிக்கும் விதமாக ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. நிகழ்வில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற தலைவர் சினோரா அசோகன் மற்றும் ரோகிணி திரையரங்க உரிமையாளர் ரேவந்த்தும் தலைமை தாங்கினார்கள். கட்டீஸ் கேங் திரைப்படம் மே மாதம் 16-ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

Latest articles

சென்னை, கோயம்பேடு விஜய் பார்க் ஓட்டலில் காவலர் மக்கள் செய்தி மாத இதழின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா...

அரசியல் தலைவர்களையோ, அரசியல் கட்சியையோ விமர்சிக்காமல் மக்களைப் பற்றி பேசும் அரசியல் படம் இது! -வாழ்க்கையே போராட்டம் படத் துவக்க விழாவில் இயக்குநர் ஏ.வி.ராமச்சந்திரன்

நடிகர் விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம்...

சரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!

'2018', 'ரேக்காசித்திரம்' மற்றும் 'மாளிகப்புரம்' போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான...

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!

ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது;...

More like this