HomeCinemaபாலன் சினிமா விமர்சனம்

பாலன் சினிமா விமர்சனம்

Published on

சிறையில் தண்டனைக் கைதியாக இருந்து, விடுதலையாகும் அந்த பெண் தன் சிறு வயது மகன் பாலனுடன் ஊர் ஊராக செல்கிறார். நிலச்சரிவில் தனது வீடு இடிந்து, கணவர் இறந்து விட்டதாக சொல்லி, ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் தங்குகிறார்; கிடைத்த வேலையைச் செய்து அம்மாவும் மகனும் பசியாற்றிக் கொள்கிறார்கள். அப்படியான பயணத்தில் ஒரு வீட்டில் வயதான பெண்மணியை கவனித்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்கிறார். அந்த பெண் இறந்துவிட, அங்கிருந்தும் வெளியேறுகிறார். ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். மகனை பிரிகிறார்.

பிரிந்த மகன் தன் தாயை வளர்ந்து வாலிபப் பருவத்தை எட்டும் வரை தேடுகிறான். தேடலுக்கு பலன் கிடைத்ததா இல்லையா என்பது மீதிக் கதை…

பாலனின் அம்மா சிறையிலிருந்தது ஏன்? மகனைப் பிரிந்தது ஏன்? மகனைப் பிரிந்த அவளுக்கு என்ன நேர்ந்தது? பாலன் யாரிடம் எப்படி வளர்ந்து ஆளானான்?

இத்தனை கேள்விகளுக்கும் பதில் தருகிறது பக்காவான ஸ்க்ரீன்பிளே.

கதைநாயகி பார்சானா. யார் இவர், எதற்காக தில்லுமுல்லு வேலைகளில் இறங்குகிறார் என்ற குழப்பத்தை ஆடியன்ஸ் மனதில் உருவாக்கும் விதமான அவரது உடல்மொழி கவர்கிறது.

சிறுவயது பாலனாக ஆதிசேஷன். அம்மாவிடம், இந்த இடத்துல எனக்கு என்ன பெயர் என கேட்டு, அதற்கேற்ப யார் கேட்டாலும் அப்போதைய பெயரை சொதப்பாமல் சொல்வது, அம்மா சொல்கிற பொய்களை மனதில் ஏற்றிக் கொண்டு அதையே தானும் தங்குதடையில்லாமல் சொல்வது என ரசிக்க வைக்கிறது அந்த வாண்டு.

டொவினோ தாமஸுக்கு, பாலனை சிறுவயதிலிருந்து வளர்த்து தன்னைப் போலவே முரட்டுத் தனமாக ரவுடியாக வளர்த்து ஆளாக்குகிற கடமை. அதை சரியாக செயுதிருப்பவர் ரவுடியிஸத்தில் கெத்து காட்டுகிறார்.

இளைஞன் பாலனாக ஜினன், குற்றச் செயல்களை துணிச்சலாக செய்வதாகட்டும், அம்மாவை பல வருடங்களாக தேடுகிற முயற்சியாகட்டும் துடிப்பான நடிப்பு. காவல்துறை அதிகாரிகளாக ஜீன் பால், இயக்குநர் கிரிஷ் ஏ டி என மற்ற கேரக்டர்களில் வருகிற அத்தனை பேரிடமிருந்தும் கதைக்கேற்ற நடிப்பு கிடைத்திருக்கிறது.

பரபரப்பான காட்சிகள் சுஷின் ஷ்யானின் பின்னணி இசையில் கூடுதல் பரபரப்பாகிறது. கேரளாவின் பசுமையை ஒளிப்பதிவாளர் ஹைஜியின் கேமரா வழியாக பார்ப்பது கண்களுக்கு அத்தனை இதம்.

‘அவேசம்’ பட இயக்குநர் ஜித்து மாதவனின் கதைக்கு விறுவிறுப்பு குறையாத திரைக்கதையமைத்து இயக்கியிருக்கிறார் ‘மஞ்சுமல் பாய்ஸ்’ இயக்குநர் சிதம்பரம். அழுத்தமான கதையொன்றை சஸ்பென்ஸ் திரில்லராக பார்க்கப் பிடிக்கும் என்றால் பாலன் உங்களுக்கானவன்.

Rating 3.5 / 5

Latest articles

வெங்கட்ரமணன் பாசக்கார அமைச்சர்! -இயக்குநர் சுரேஷ் நெகிழ்ச்சி

விஜயகாந்த் நடித்த 'பெரியண்ணா', தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்த 'நாகா' படங்களை இயக்கியவர் சுரேஷ். இவர் எஸ்.ஏ. சந்திரசேகரின்...

ஃபஹத் பாசில் நடிப்பில் கற்பனை கலந்த பொழுதுபோக்கு திரைப்படமான ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் டீசர் வெளியீடு!

  https://www.youtube.com/watch?v=zF5Ug3GpJZ4 பன்முக தன்மை கொண்ட நடிகர் ஃபஹத் பாசில் - 'பாகுபலி' போன்ற பிரம்மாண்டமான படங்களை உருவாக்கியவர்கள் - தனித்துவமான...

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர்....

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

More like this