HomeCinema'பேட்டில்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குநர் பா. ரஞ்சித்!

‘பேட்டில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டார் இயக்குநர் பா. ரஞ்சித்!

Published on

நாராயணன் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் ‘பேட்டில்’ (Battle). சமீபத்தில் வெளியான ‘தண்டகாரண்யம்’ படத்தின் உதவி எழுத்தாளராகவும் இயக்குநர் சக்திவேலிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் நாராயணன்.

ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் ‘பேட்டில்’ திரைப்படத்தில் ‘தங்கலான்’ புகழ் அன்புடன் அர்ஜுன், ‘காந்தி கண்ணாடி’ படத்தில் சிறு வயது அர்ச்சனா பாத்திரத்தில் நடித்த ஆராத்யா முதன்மை வேடங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா, சரவண சுப்பையா, காயத்ரி, முனீஷ்காந்த், சுருளி, ‘இட்லி கடை’ படத்தில் சிறு வயது தனுஷ் பாத்திரத்தில் நடித்த திஹான் மற்றும் திவ்ய ஸ்ரீ உள்ளிட்டோர் ‘பேட்டில்’ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

ஒரு ராப் பாடகரின் வாழ்க்கையைப் பின்னி பிணைந்து முழுக்க சென்னை பின்னணியில் நடைபெறும் இக்கதை, அந்த பாடகர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை திரையில் காட்டுவதோடு ஒரு முக்கிய விஷயத்தையும் வெளிச்சம் போடுகிறது.

திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் நாராயணன், “ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை முழுக்க காட்டும் முதல் தமிழ் படம் இதுவென்று நினைக்கிறேன். ராப் பாடகர்கள் ஒன்று கூடும் இடத்தில் பேட்டில் என்ற நிகழ்வு நடைபெறும். அதை குறிக்கும் வகையிலும், நாயகன் எதிர்கொள்ளும் போராட்டங்களை விள‌க்கும் வகையிலும் இப்படத்திற்கு ‘பேட்டில்’ என்று பெயர் வைத்துள்ளோம்,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சரியாக இரண்டு மணி நேரம் ஓடும் இப்படத்தில் ஆறு பாடல்கள் இடம்பெறுகின்றன. அர்ஜுன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், ஆராத்யா மிக முக்கிய வேடத்தில் கலக்கியுள்ளார். வலுவான வேடங்களில் இயக்குநர்கள் சுப்பிரமணியம் சிவா மற்றும் சரவண சுப்பையாவும், அமைச்சராக முனீஷ்காந்தும் நடிக்கின்றனர்,” என்று தெரிவித்தார்.

‘பேட்டில்’ படத்திற்கு ஜீவா இசையமைக்க, முன்னணி ஒளிப்பதிவாளர் செழியனின் உதவியாளரான யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய, பிரபல எடிட்டர் லெனின் உதவியாளரான காமேஷ் படத்தொகுப்பை கையாள்கிறார். ராவண ராம், கெபின், நிஷாந்த், கானா அப்பிலோ, சத்யபிரகாஷ் மற்றும் வைஷ்ணவி உள்ளிட்டோர் பாடல்களை பாடியுள்ளனர்.

எலைட் டாக்கீஸ் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்கத்தில் அன்புடன் அர்ஜுன், ஆராத்யா நடிக்கும் ‘பேட்டில்’ படத்தின் முதல் பார்வையை இயக்குநர் பா. ரஞ்சித் இன்று வெளியிட்டார்.

Latest articles

நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு இயற்கை விவசாயிகளுக்கு விருது வழங்கிய நடிகர் சௌந்தரராஜா!

நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது "மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை" சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை...

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறதா? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறதா? -புதிய கோணத்தில் நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட ‘பியார் பிரேமா கல்யாணம்’ புரமோ

“ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது?” சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும்...

ஜிவி பிரகாஷ் நடிப்பில், சீனு ராமசாமி இயக்கியுள்ள ’இடிமுழக்கம்’ திரைப்படத்தின் இரண்டு அதிரடி குத்துப்பாடல்களின்  லிரிக்கல் வீடியோ வெளியானது! 

சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில், ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் ’இடிமுழக்கம்’...

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் ‘கருப்பட்டி’ படத்தில் காதலி மனைவியாகி மனைவி கொலையாகி கணவன் அதிர்ச்சி!

ஆக்சன் திரில்லராக உருவாகி வரும் 'கருப்பட்டி' படத்தை தனது மோனிதா மூவிஸ் நிறுவனம் மூலம் தயாரித்து, கதையின் நாயகன்...

More like this