HomeCinemaஜெய் இந்த படத்திற்காக மூன்று வேளை சாப்பிடாமல் நடித்தார்! -'பேபி & பேபி' டிரெய்லர் வெளியீட்டு...

ஜெய் இந்த படத்திற்காக மூன்று வேளை சாப்பிடாமல் நடித்தார்! -‘பேபி & பேபி’ டிரெய்லர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஜெய்

Published on

ஒரு மிகப்பெரிய குடும்பத்திற்குள் எதிர்பாராதவிதமாக நுழையும் ஒரு குழந்தையால் ஏற்படும் காமெடி கலாட்டாக்களின் சுவாரஸ்ய தொகுப்பாக உருவாகியுள்ள ‘பேபி & பேபி’ படத்தில் சத்யராஜ், ஜெய், பிரக்யா நக்ரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் பிரதாப், ”இந்தக்கதையை எழுதியவுடன் யோகிபாபு சாரிடம் தான் முதலில் போனேன். அவருக்குக் கதை பிடித்திருந்தது. பின் பல தயாரிப்பாளர்களிடம் போனேன், இறுதியாக யுவாராஜ் சாரை சந்தித்தேன். அவர் கதை கேட்டு, மிகவும் ஆர்வமாகி இந்த கதாபாத்திரத்துக்கு இவரை போடலாம், அல்லது இவரைப் போடலாம் என அவர் தான் எல்லா நடிகர்களையும் ஒருங்கிணைத்தார். நான் தான் பட்ஜெட் பற்றிக் கவலைப்பட்டேன்.

இந்தக்கதையை சத்யராஜ் சாரிடம் சொன்னதும் அவர் ஒத்துக்கொண்டார், அவர் படத்திற்குள் வந்ததும் படமே மாறிவிட்டது. ஜெய் சார் இப்படத்திற்காக அவ்வளவு உழைத்தார். ரம்ஜான் நோன்பில் மூன்று வேளை சாப்பிடாமல் நடித்தார். யோகிபாபு சார், அவர் தான் இந்தப்படம் நடக்கக் காரணம். கீர்த்தனா மேடம் முதலில் அம்மாவாக நடிக்க மாட்டேன் என்றார் ஆனால் சத்யராஜ் சார் ஜோடி என்றதும் உடனே ஓகே சொல்லிவிட்டார்.

பிரக்யா நல்ல ஒத்துழைப்பைத் தந்தார். ஒளிப்பதிவாளர் மிக அருமையாகச் செய்து தந்துள்ளார். நான் இமான் சார் இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டேன், தயாரிப்பாளரும் அவரையே சொன்னார். அவர் கதை கேட்டு உடனே ஒத்துக்கொண்டார். அவர் இசையில் எல்லாப்பாடல்களும் அனைவருக்கும் பிடிக்கும். . படம் நன்றாக எடுத்துள்ளோம். கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

நடிகர் ஜெய், ”இயக்குநர் கதை சொல்ல வந்த போது, சத்யராஜ் சார், யோகிபாபு டார்லிங் எல்லாம் ஓகே சொல்லிவிட்டார்கள் என்றவுடனே நானும் ஒகே சொல்லிவிட்டேன். ஷூட்டிங்கில் பட்டினியாக நடித்தது கஷ்டமாகத் தெரியவில்லை. பட ஷூட்டிங்கில் சத்யராஜ் சார், யோகிபாபு என எல்லோரும் வயிறு வலிக்க வலிக்கச் சிரிக்க வைத்து விடுவார்கள் அது தான் கஷ்டமாக இருக்கும். இயக்குநர் பக்காவாக திட்டமிட்டு எடுத்தார், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பெரிய ஆர்டிஸ்ட் இருப்பார்கள், ஆனால் அதை மிக அழகாக எடுத்துள்ளார். இரத்தம் வெட்டுக் குத்து இல்லாமல், மனம் விட்டுச் சிரித்து மகிழும் படமாக இப்படம் இருக்கும்” என்றார்.

நடிகர் யோகிபாபு, ”இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த பிரதாப் சாருக்கு நன்றி. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. பிரதாப் 17 வருட நண்பர். 17 வருடம் முன்பு ஒரு படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்டாக நடித்துள்ளோம். இன்னக்கி அவர் இயக்குநர், நான் காமெடி நடிகன். நாம் உண்மையாக உழைத்தால் நமக்கானது தானாக வந்து சேரும். இந்தப்படம் மிக நல்ல அனுபவம். சத்யராஜ் சாருடன் எப்போதும் கவுண்டமணி சார் பற்றி பேசி சிரிப்போம். ஜெய் இன்னும் எப்படி இளைமையாகவே இருக்கிறீர்கள் எனக்கேட்டேன், அவர் சிங்கிளா இருப்பதால் யங்கா இருக்கேன் என்றார். சீக்கிரம் அங்கிளா ஆகிவிடப்போகிறீர்கள், கல்யாணம் செய்து கொள்ளுங்கள். இப்படம் மிக நன்றாக வந்துள்ளது அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

நடிகர் சத்யராஜ் ”இந்தப்படம் மிக மிக நல்ல அனுபவமாக இருந்தது. இப்படத்தில் நிறைய நடிகர்கள், ஆனால் இத்தனை பேரை ஒருங்கிணைத்து மிக அழகாக எடுத்துள்ளார்கள். தயாரிப்பாளர் எளிமையாக அவரது மொழியில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படித்தான் நமக்கு வரும் மொழியில் பேச வேண்டும். நானும் ஜெய்யும் இன்னொரு பெரிய வெற்றிக்காகக் காத்திருக்கிறோம். ராஜா ராணி வந்து 13 வருடங்கள் ஆகிவிட்டது. பார்டி படம் இன்னும் வரவில்லை, மதகதராஜா போல் அந்தப்படம் வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறும். இந்தப்படத்தில் அஜித் விஜய்யுடன் ஜோடியாக நடித்த கீர்த்தனா எனக்கு ஜோடி. நாமளும் இன்னும் இளைஞர் தான். தயாரிப்பாளர் அப்பாவி போல் இருந்தாலும், ரொம்பவும் விவரமானவர். பிரதாப் இத்தனை நடிகர்களை வைத்து, வெகு அழகாக வெகு சீக்கிரமாக திட்டமிட்டுப் படத்தை எடுத்துள்ளார் வாழ்த்துக்கள். நானும் இப்படத்திற்காக ஆவலோடு காத்திருக்கிறேன்” என்றார்.

Latest articles

தனுஷுக்கு இரண்டு தேசிய விருதுகள்… ஜூரியாக செயல்பட்ட டான்ஸ் மாஸ்டர் கலா & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

தனுஷ் இயக்கிய படத்துக்கும் தனுஷ் நடித்த படத்துக்கும் தேசிய விருது… தேர்வுக் குழுவில் இடம் பெற்ற நடன இயக்குநர் கலா மாஸ்டர் & இயக்குநரும் நடிகருமான இ.வி.கணேஷ்பாபு!

2024-ம் ஆண்டு தணிக்கைச் சான்று பெற்ற திரைப் படங்களுக்கான, 72வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று (18.7.2026) அறிவிக்கப்பட்டன. தனுஷ்...

மங்கேஷ் தகாடேவின் இசை, ரிச்சா ஷர்மாவின் ஆன்மாவைத் தொடும் குரல், ஷகீல் அசாமியின் அர்த்தமுள்ள வரிகள்… ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்திலிருந்து வெளியானது ‘நீ செல்’ பாடல்!

https://www.youtube.com/watch?v=8JofRnEai6s ZEE  Studios  வழங்க, MIG Production இணைந்து தயாரித்துள்ள “தி இந்தியா ஸ்டோரி” திரைப்படத்தின் முதல் பாடலான ‘நீ...

ஜூலை 17; 2026 முதல் குழந்தைகளுக்கான Shivlok Ke Kundakka Mandakka புதிய புராண அனிமேஷன் தொடரை ஒளிபரப்பும் ZEE 5… 

https://www.youtube.com/watch?v=0KSXQAy2GgY குழந்தைகளுக்கான பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும் குற்றவுணர்வில்லாத (Guilt-Free) திரை நேர அனுபவத்தை வழங்கும் பிரபல தளமான KidZ on...

More like this