HomeCinemaபுற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்ட சென்னையில் முதன்முறையாக இசை கச்சேரி நடத்தும் இசையமைப்பாளர் பரத்வாஜ்!

புற்றுநோய் மருத்துவமனைக்கு நிதி திரட்ட சென்னையில் முதன்முறையாக இசை கச்சேரி நடத்தும் இசையமைப்பாளர் பரத்வாஜ்!

Published on

இசையமைப்பாளர் பரத்வாஜ் காதல் மன்னன், அமர்க்களம், பார்த்தேன் ரசித்தேன், பாண்டவர் பூமி, ரோஜாக்கூட்டம், ஜெமினி, ஆட்டோகிராப், வசூல்ராஜா எம் பி பி எஸ், அட்டகாசம், ஐயா, திருட்டுப் பயலே, முனி, அசல், அரண்மனை போன்ற படங்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து, மறக்க முடியாத ஹிட் பாடல்களை கொடுத்து திரைத் துறையிலும் சரி, மக்கள் மனதிலும் சரி தமக்கென தனி இடம் பிடித்தவர்.

தற்போது சென்னையில் முதல் முறையாக அவரது இசைக்கச்சேரி பிரமாண்டமாக நடக்கவிருக்கிறது,

யோகா அறக்கட்டளை மற்றும் Zest Entertainment இணைந்து சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகில் உள்ள ‘விங்ஸ் வர்த்தக மையம்’ செயிண்ட் ஜார்ஜ் விளையாட்டு மைதானத்தில் வருகிற அக்டோபர் மாதம் 19-ம் தேதி இந்த கச்சேரி நடக்கவிருக்கிறது.

இந்தநிகழ்ச்சி திருப்பூர் ரோட்டரி கிளப், திருப்பூர் சிட்டி முனிசிப்பல் கார்ப்பரேசன் மற்றும் தமிழ்நாடு அரசுடன் இணைந்து திருப்பூரில் சுமார் பல கோடி செலவில் புற்று நோயாளிகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஒன்றை கட்டி வருகிறது அந்த மருத்துவமனையை முழுவதுமாக கட்டி முடிக்க பெரிய அளவில் பணத்தேவை இருப்பதால். மக்களிடயே அதற்கான நிதி திரட்டும் நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருத்துவமனையில் முற்றிலும் மக்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

17 சிறப்பம்சங்கள் கொண்டு 24 மணிநேரமும் செயல்படும் அதிநவீன தொழில்நுட்பகள் கொண்ட மருத்துவமனையாக இதை கட்டிவருகிறார்கள்.

பொதுமக்கள் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டை பேடிஎம் இன்சைடர் என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

இந்த இசை கச்சேரியின் டிக்கெட் லாஞ்ச் நிகழ்வு நேற்று சென்னையில் நடந்தது. இயக்குநர் சரண், நடிகை மானு ஆகியோர் கலந்துகொண்டு டிக்கெட்டை வெளியிட்டார்கள்.

‘நீங்கள் வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டும் ஒரு புற்று நோயாளியின் வாழ்க்கையைக் காப்பாற்றும். வாருங்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து புற்றுநோய்க்கு எதிராக போராடுவோம்’ என்று தெரிவித்தனர்.

Latest articles

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்கியுள்ளார். அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார்....

துல்கர் சல்மானின் ஐ ‘ம் கேம் டிரெய்லர் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=MDtbNcgqAXc மலையாள திரையுலகில் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்றான துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ம் கேம்”...

உற்சாகமாக நடந்த கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்ட நடு நாடு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா!

கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் நடு நாடு படத்தை சந்தோஷ் சேகரன் இயக்குகிறார்.   சாகித்யா கிரியேஷன் மற்றும் தி...

‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது!

பிரைம் வீடியோ மற்றும் டி-சீரிஸ் இணைந்து, விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸான ‘வதந்தி...

More like this