HomeCinemaசிவராஜ் குமார் நடிக்கும் 'பைரவனா கோனே பாதா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

சிவராஜ் குமார் நடிக்கும் ‘பைரவனா கோனே பாதா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Published on

டாக்டர் சிவ ராஜ்குமார் இதுவரை  நடித்த திரைப்படங்களிலேயே மிக பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகும் படம் ‘பைரவனா கோனி பாதா.’ டாக்டர் சிவராஜ்குமாரின் சொந்த பட நிறுவனமான வைஷாக் ஜெ. ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் வைஷாக் ஜெ. கௌடா இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அது ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் அமைந்திருப்பதால் நல்ல விமர்சனங்களை பெற்றிருக்கிறது. சமீபத்தில் படக்குழுவினர் இப்படத்தின் தலைப்பை வெளியிட்ட போது தலைப்பில் உள்ள தனித்துவத்திற்காகவும், தலைப்பு முழுவதும் கன்னடத்தில் வைத்திருக்க குழு ஒன்றினை தேர்வு செய்ததற்காகவும் ஒருமனதாக பாராட்டப்பட்டது.

படத்தைப் பற்றி டாக்டர் சிவ ராஜ்குமார் பேசும்போது, ” நீண்ட நாட்களாக பேசப்படும் படம் இது. அப்பா ஜி கடந்த காலங்களில் இது போன்ற கதாபாத்திரங்களில் நடிப்பதாக அறியப்பட்டவர். மேலும் அதன் மீது மிகுந்த அன்பையும் பெற்றார். ‘பைரவா’வாக நடிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு கதையும் எனக்குப் பிடித்திருந்தது. இயக்குநர் ஹேமந்த் எம். ராவ் மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

இயக்குநர் ஹேமந்த் எம். ராவ், ” பைரவனா கோனே பாதா’ ஒரு வகையில் என்னுடைய இலட்சிய படைப்பாகும்.‌ இந்த அளவில் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதும், நான் ரசிக்கும் படி வளர்ந்த.. ஒரு சூப்பர் ஸ்டாரை இயக்குவதும் பத்து மடங்கு சவாலானதாக இருக்கிறது. சிவா அண்ணாவுடன் பணிபுரிய வேண்டும் என ஒவ்வொரு இயக்குநரும் விரும்புவார்கள். வேலையின் மீதான அவரது வைராக்கியம் தீவிரமானது. ஒரு நாள் முழுவதும் மலை உச்சியில் போட்டோ சூட் நடந்தது. வானிலை நமக்கு சாதமாக இல்லாவிட்டாலும்… சிவராஜ் குமார் சார் படப்பிடிப்பில் ஒத்துழைப்பு வழங்கிய விதம் ஒட்டுமொத்த குழுவும் வியப்பில் ஆழ்ந்தது.

இது சில நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலக் கட்டத்தை மையமாகக் கொண்ட.. ஒரு நவீன போர் பற்றிய படமாக இருக்கும். ‘பைரவனா கோனே பாதா’வில் நான் உருவாக்குவது ஒரு புதிய அனுபவம்” என்றார்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு கிடைத்த வரவேற்பால் மகிழ்ச்சி அடைந்துள்ள தயாரிப்பாளர் வைஷாக் ஜெ. கௌடா பேசியபோது, ” பைரவனா கோனே பாதா’வின் கதையைக் கேட்டவுடன் இது மிகவும் சிறப்பான படமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும். இந்தப் படம் மிகப் பிரமாண்டமாக உருவாகவுள்ளது. அரங்கங்கள், படபிடிப்பு தளங்கள்… என அனைத்தும் விரிவாக திட்டமிடப்பட்டு நேர்த்தியாக செயல்படுத்தப்படும். நாங்கள் அமைக்கும் உலகத்தின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. மேலும் அது அந்த காலத்தில் உலகெங்கிலும் உள்ள சிறந்த படங்களுக்கு இணையாக இருக்கும்” என்றார்.

படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் குழுவினர் பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...