HomeCinemaஇயக்குநர் அட்லீ வழங்கும் 'பேபி ஜான்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

இயக்குநர் அட்லீ வழங்கும் ‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

Published on

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘பேபி ஜான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

வருண் தவான் நடிக்க, இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் வழங்கும் திரைப்படத்திற்கு ‘பேபி ஜான்’ என பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக்கும் டைட்டிலுக்கான சிறப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது.

ஏ. காளீஸ்வரன் இயக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் வருண் தவான் கதையின் நாயகனாக நடிக்கிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்ற நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் நடிகை வாமிகா கபி, ஜாக்கி ஷெராப், ராஜ்பால் யாதவ், மணிகண்டன், பி. எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இப்படத்திற்கு ‘பேபி ஜான்’ என பெயரிடப்பட்டு, அதற்குரிய ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் கதையின் நாயகனான வருண் தவானின் ஆக்சன் அவதாரம் பார்வையாளர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அத்துடன் இந்த திரைப்படம் எதிர் வரும் மே மாதம் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ‘பேபி ஜான்’ படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது.

இயக்குநர் அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் பட நிறுவனத்தின் சர்வதேச தரத்திலான படைப்பு என்பதாலும், தமிழில் ‘சங்கிலி புங்கிலி கதவை திற’ மற்றும் ‘அந்தகாரம்’ என இரண்டு திரைப்படங்களை தயாரித்து, விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்றிருப்பதாலும், ‘ஜவான்’ படத்தின் மூலம் இந்தி திரையுலக வணிகர்கள் மற்றும் சர்வதேச திரையுலக வணிகர்களின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதாலும், ‘பேபி ஜான்’ படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

கிரண் கௌஷிக் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்தத் திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், சினி 1‌ ஸ்டுடியோஸ் மற்றும் ஏ ஃபார் ஆப்பிள் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் முராத் கெடானி, ஜோதி தேஷ்பாண்டே மற்றும் பிரியா அட்லீ ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this