HomeCinemaஎனக்கு நடக்காதது இந்த படத்தின் இயக்குநருக்கு நடந்திருக்கிறது! -'ப்ளு ஸ்டார்' சக்ஸஸ் மீட்டில் உற்சாகத் தகவல்...

எனக்கு நடக்காதது இந்த படத்தின் இயக்குநருக்கு நடந்திருக்கிறது! -‘ப்ளு ஸ்டார்’ சக்ஸஸ் மீட்டில் உற்சாகத் தகவல் சொன்ன இயக்குநர் பா.இரஞ்சித்

Published on

அசோக்செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, பிரித்வி பாண்டியராஜ், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி நடிக்க, எஸ்.ஜெயக்குமார் இயக்க, இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடெக்ஷன்ஸ்’, ‘லெமன் லீஃப் புரொடெக்ஷன்ஸ்’ இணைந்து தாயாரித்த ‘ப்ளு ஸ்டார்‘ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதையடுத்து படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் தயாரிப்பாளர்கள் கணேஷமூர்த்தி, சவுந்தர்யா, இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர்கள் அசோக்செல்வன், கீர்த்தி பாண்டியன், சாந்தனு, ப்ருதிவி பாண்டியராஜ், லிசி ஆண்டனி, திவ்யா துரைசாமி, அருண் பாலாஜி, இயக்குநர் எஸ்.ஜெயக்குமார், ஒளிப்பதிவாளர் தமிழ் அ. அழகன், கலை இயக்குநர் ஜெயரகு, படத்தொகுப்பாளர் ஆர்.கே.செல்வா வசனகர்த்தா தமிழ்பிரபா, பாடலாசிரியர் அறிவு, சண்டைப்பயிற்சி இயக்குநர் ஸ்டன்னர் சாம், நடன இயக்குநர் ஸ்ரீக்ரிஷ் ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம், சவுண்ட் டிசைனர் சுரேன்.ஜி, விளம்பர வடிவமைப்பாளர் கபிலன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இயக்குநர் பா.ரஞ்சித் பேசியபோது, ரொம்ப சந்தோஷம். ப்ளூ ஸ்டார் படத்தை வெற்றிப்படமாக அங்கீகரித்த மக்களுக்கு நான் முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன். வசூல் வர்த்தக ரீதியை தாண்டி, மக்கள் மனதில் ஒரு படம் எந்த அளவிற்கு தங்குகிறது, அவர்கள் அதை எப்படி வரவேற்கிறார்கள், ஏற்றுக் கொள்கிறார்கள் என்பது மிக முக்கியம் என்று நான் நினைக்கிறேன். படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களை மக்கள் அணுகும் விதம், அதில் இருக்கும் அரசியலை அவர்கள் புரிந்து கொள்ளும்விதம், இப்படத்தை கொண்டாடும் விதம் சந்தோஷம் அளிக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் ஒரு படத்தில் இருக்கும் பல கதாபாத்திரங்களை கொண்டாடி ஏற்றுக் கொள்வது ப்ளூ ஸ்டார் படத்திற்கு நடந்திருக்கிறது. ஒரு படத்தை வெற்றிப்படம் என்று அதைத் தயாரித்த தயாரிப்பாளர்கள், அப்படத்தோடு தொடர்புடையவர்கள் கூறலாம். ஆனால் மக்கள் அதைக் கூறுவது ரொம்ப ரொம்ப கடினம். அது ப்ளூ ஸ்டார் படத்திற்கு நடந்திருப்பது மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. ஜெயக்குமாருக்கும் என் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

படம் ரீலிசாகி நான்கு நாட்களில் ஒரு பெரிய ஹீரோ அப்படத்தை இரண்டு முறைப் பார்த்துவிட்டு, போன் செய்து நாம் ஒரு படம் பண்ணலாம் என்று ஜெயக்குமாரிடம் பேசியிருக்கிறார். இது எனக்குக் கூட நடந்தது இல்லை. ஜெயக்குமாருக்கு நடந்திருப்பது எனக்கு சந்தோசம்.

இப்படத்தினைத் தயாரிக்க முன்வந்த லெமன் லீஃப் புரொடெக்ஷன்ஸ் கணேஷ மூர்த்தி மற்றும் செளந்தரியாவிற்கு ரொம்ப ரொம்ப நன்றி. ஏனென்றால் நான் அடிக்கடி சொல்வேன். நம்மை நம்புபவர்கள் தான் நம்மிடம் வருவார்கள். ஏனென்றால் நாம் பேசும் அரசியல் அப்படி. என்னைப் பார்ப்பவர்கள் என்னை வெறும் ரஞ்சித் ஆகப் பார்க்கமாட்டார்கள். நான் பேசும் அரசியலோடு தான் என்னைப் பார்ப்பார்கள். என்னை Extremist ஆகப் பார்ப்பார்கள். அடையாள அரசியல் செய்வதாகக் கூறுவார்கள். அவரது சாதியைச் சேர்ந்த ஆட்களுடன் தான் ரஞ்சித் வேலை செய்வார் என்றெல்லாம் என்னைக் குறித்துப் பல கதைகள் பேசப்பட்டு வருகிறது. இதையெல்லாம் நான் நம்புவது இல்லை. ஆனால் நான் எனக்கு என்னப் பிடித்திருக்கிறதோ, எனக்கு என்ன தேவையோ அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன். என்னுடைய உழைப்பையும், நான் பேசும் அரசியலையும் மற்ற எல்லோரையும் விட நான் முழுமையாக நம்புகிறேன். நான் பேசும் அரசியல் தான் நான்..

இந்த அரசியலும் நான் நம்புகிறத் தத்துவமும் என்னை சரியாக வழிநடத்தும் என்று நம்புகிறேன்.. யாரைத் தேடியும் நான் சென்றதே இல்லை. நான் பேசுகின்ற அரசியல் நிறைய பேரை என்னிடம் அழைத்து வந்திருக்கிறது. என்னையும் நான் பேசும் அரசியலையும் நம்புகிற ஒருவர் மட்டும் தான் என்னுடன் சேர்ந்து பணியாற்ற முடியும்… பிற ஆட்கள் என்னுடன் வேலை செய்ய முடியாது. ஏனென்றால் நான் வெளிப்படையாக இருக்கிறேன். அதே வெளிப்படைத்தன்மையுடன் என் அரசியலைப் புரிந்து கொண்டு என்னுடன் பயணிப்பவர்கள் தான் இந்த மேடையில் இருப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

தயாரிப்பாளர்கள் கணேஷ மூர்த்தி சவுந்தர்யா இருவரும் வேறொரு நிலப்பரப்பில் இருந்து வேறொரு கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களுடன் வந்தவர்கள். ஆனால் நாம் பேசும் அரசியலை அவர்கள் புரிந்து கொள்கிறார்கள். அது சரியாக இருக்கும் என்று நம்புகிறார்கள். அதுதான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் தயாரித்து வரும் பிற படங்களும் வெற்றிபெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சாந்தனு, ப்ருத்வி இருவரும் பேசியது மிகவும் உணர்வுபூர்வமாக இருந்தது. இந்த மேடை அவ்வளவு எளிதாக கிடைத்துவிடாது. நாம் பேசும் அரசியலுக்காக நான் எங்கிருந்து வருகிறோம் என்பதற்காக மக்கள் வெற்றியைக் கொடுத்துவிட மாட்டார்கள். நான் செய்யும் வேலையின் மதிப்பை அங்கீகரித்துதான் மக்கள் அந்த வெற்றியைக் கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். மக்கள், பத்திரிக்கை, ஊடகம் அனைவரும் இந்த வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள்.

சென்சாரில் இப்படத்திற்கு பிரச்சனை இருக்காது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் இப்படம் வெளியாகக்கூடாது என்பது போன்ற கருத்து வெளியானது எனக்கு ஆச்சரியம் அளித்தது. ஒருவர் மிகக் கடுமையாக படத்தை எதிர்த்தார் என்றார்கள். மூர்த்தி அண்ணனின் படம் இருப்பதை காரணமாக சொன்னார்கள். அவரை ரவுடி என்றார்கள். அவர் எங்களைப் படிக்க வைத்தவர், நிறைய பேர் எங்கள் ஊரில் படித்துக் கொண்டிருப்பதற்கு அவர்தான் காரணம். அவர் பெரிய தலைவர், அவரை எப்படி நீங்கள் ரவுடி என்று சொல்லலாம் என்று கேட்டேன்.. பின்னர் ரிவைசிங் கமிட்டிக்கு திரும்பவும் அனுப்பினோம்… சில கதாபாத்திரங்களின் பெயரையும், எதிர் கிரிக்கெட் அணியின் பெயரையும் மாற்றச் சொன்னார்கள். அதற்குப் பிறகுதான் சென்சார் கொடுத்தார்கள்.

ஒரு படம் ஒற்றுமையைப் பேசுகிறது. ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது. வேற்றுமைகளுக்கு எதிராக எல்லோரும் ஒன்று கூட வேண்டும் என்று சொல்லுகிறது.. இதை தடை செய்ய வேண்டும் என்று சொல்லும் நபர்கள் சென்சாரில் இருக்கிறார்கள். இவர்களை மீறித்தான் இப்படம் இப்போது வெளியாகி இருக்கிறது..

படத்தில் எனக்கு எப்போதும் இரண்டு மூன்று காட்சிகள் தான் திருப்தி கொடுக்கும். ப்ளூ ஸ்டார் படத்தில் ரஞ்சித் தன் தாயை பேர் சொல்லி அழைத்த தருணத்தை சொல்லி கண்கலங்கும் இடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கண்கலங்கச் செய்தது.

அது போல் சுசீலா என்று பேர் சொல்லிக் கூப்பிட்ட ராஜேஷ், அடுத்து மனம் திருந்தி வரும் போது அம்மா என்று அழைப்பான். அவர்களும் ஒரு தாய் போல் வாஞ்சையுடன் அவனிடம் பேசுவார்கள். அது தான் எங்கள் அம்மா.. ஜெயக்குமாரின் அம்மா… அதுதான் ப்ளூ ஸ்டார்.

ப்ளூ ஸ்டார் பேசுவது பொதுவில் பங்கு கோருதல் தான்… வேறுபாடுகள் அற்ற இடத்தில் நாம் வாழணும்… உங்கள் கோவில் தான் எங்கள் கோவில். உங்கள் தெய்வம் தான் எங்கள் தெய்வம். வாங்க, நாமெல்லாம் ஒன்றாக இருக்க வேண்டும், என்பது தான் இப்படம் பேசுவது. அம்மாற்றத்தை விரும்புகிற மனிதர்கள் நாங்கள். இப்பிரச்சனை இப்போதும் இருப்பதால் தான் நாங்கள் பேசுகிறோம்.

இதைப் பேசியதாலே இப்படம் வெற்றியடையவில்லை. அதை மீறி படத்தின் செய்நேர்த்தி, அந்த தத்துவத்தை சரியான மொழியில் மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதனால் தான் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது.

ஒரே சிந்தனை அரசியல் கொண்ட நபர்களைக் கூட ரஞ்சித் எதிர் திசையில் நிறுத்துவார். ஆனால் இயக்குநர் ஜெயக்குமார் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்று கூறுகிறார். அவருடைய அரசியல் சிறப்பானது என்று கூட ”ப்ளூ ஸ்டார்” படம் குறித்து சிலர் பேசியதையும் எழுதியதையும் கவனித்தேன்.. அதற்காகவும் ஜெயக்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் ஒரே விசயத்திற்காகப் போராடினாலும் என் மொழி வேறு; ஜெயக்குமாரின் மொழி வேறு.

இப்படத்தின் வெற்றி ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும் வெற்றி. அந்த வெற்றியைக் கொடுத்த மக்கள், பத்திரிக்கை நண்பர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஜெய்பீம்” என்றார்.

Latest articles

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...

சிறப்புப் பாடல் மூலம் உலகளாவிய பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் கெவி படக்குழு!

தமிழ் தயாளன் இயக்கத்தில் ஆர்ட்அப்டிரையாங்கிள்ஸ் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில் வெளியான ‘கெவி’ திரைப்படத்தில், கிராமி விருது வென்ற Ricky...

More like this

கதையின் நாயகனாக விக்கல்ஸ் விக்ரம் நடிக்கும் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் அறிமுக விழா! 

விக்கல்ஸ் விக்ரம் ஸ்டாண்ட் அப் காமெடியன் - பிக் பாஸ் பிரபலம் - டிஜிட்டல் திரை நட்சத்திரம் என...

திட்டக்குடியில் திருவிழா கொண்டாட்டம் – TN 2026′ மூலம் மீண்டும் வெற்றி கண்ட கண்ணன் ரவி & தீபக் ரவி!

KRG Kannan Ravi Group தயாரிப்பில் தொடர்ந்து வெற்றிப்படங்களை வழங்கி வரும் தயாரிப்பாளர்கள் கண்ணன் ரவி மற்றும் தீபக்...

இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்ட ‘லெனின் பாண்டியன்’ படத்தின் டிரெய்லர்!

https://www.youtube.com/watch?v=iFv3N9mX5gU நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும்...