HomeCinemaபிரபு தேவா _ வடிவேலு நடிக்கும் 'பேங் பேங்' படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!

பிரபு தேவா _ வடிவேலு நடிக்கும் ‘பேங் பேங்’ படத்தின் டைட்டில் டீஸர் வெளியானது!

Published on

தமிழ் திரையுலகின் மறக்க முடியாத கூட்டணியான நடனப்புயல் பிரபுதேவா, வைகைப்புயல் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மூவரும் 25 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணையும் ‘பேங் பேங்’ படத்தின் டைட்டில் டீஸர் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அந்த டீஸரில் ஜாம்பியாக மாறி ஓடுகிறார்கள். பிரபு தேவாவும், வடிவேலுவும் துப்பாக்கியுடன் கெத்தாக வருகிறார்கள். வடிவேலு ஜாம்பி என்று கூறுகிறார். பிரபு வேலு, வடி தேவா என்று பெயரோடு டீஸரை பார்க்கும் போது படத்தை பார்க்கும் ஆவலை தூண்டுகிறது.

இப்படத்தினை இயக்குநர் சாம் ரோட்ரிகஸ் எழுதி இயக்குகிறார். பிரபுதேவா – வடிவேலு கூட்டணியின் டிரேட்மார்க் அம்சங்களுடன், ஒரு கலக்கலான ஹாரர் அட்வென்சர் படமாக உருவாகி வருகிறது. பப்லு பிரித்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் முதல் படப்பிடிப்பு இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் ப்ரோமோ என்ற இடத்தில் செயலில் இருக்கும் எரிமலை பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது.

படத்திற்கு H C வேணு ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். ஆண்டனி எடிட்டிங் பணிகளை கையாளுகிறார். சவுண்டு டிசைனை ‘அனிமல்’ படத்திற்காக தேசிய விருது பெற்ற Sync சினிமா செய்திருக்கிறார்கள். சவுண்டு மிக்ஸிங்-ஐ தெலுங்கனா மாநில விருது பெற்ற அரவிந்த் மேனேன் செய்திருக்கிறார்.

KRG நிறுவனத்தின் 4வது படைப்பாக உருவாகும் “பேங் பேங்” படத்தை தயாரிப்பாளர் கண்ணன் ரவி மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கிறார். தீபக் ரவி இணைத் தயாரிப்பாளராக பணியாற்றுகிறார்.

Latest articles

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

ஐ’ம் கேம் சினிமா விமர்சனம்

அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை, சூதாட்டத்தில் ஈடுபாடு என்றிருக்கிற நாயகன் துல்கர் பல கோடி கடனில் சிக்குகிறார். ஒரு கையும் பறிபோகிறது....

ஏன் என்னை ஏதோ செய்தாய் சினிமா விமர்சனம்

கடந்த கால வாழ்க்கை தந்த வலிகளால் குடி, பாலியல் தொழிலாளிகளுடன் உறவு என கண்டபடி வாழ்கிற நாயகன். ஒரு...

More like this