HomeCinemaஹாட் ஸ்பாட் 2' படத்தின் பிரிவியூ காட்சிகளுக்கு பிறகு கிடைத்துவரும் வரவேற்பு... உற்சாகத்தில் நடிகை பவானி...

ஹாட் ஸ்பாட் 2′ படத்தின் பிரிவியூ காட்சிகளுக்கு பிறகு கிடைத்துவரும் வரவேற்பு… உற்சாகத்தில் நடிகை பவானி ஸ்ரீ

Published on

நடிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார்.

விடுதலை படத்தில் அவர் வெளிப்படுத்திய வலுவான நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றதோடு, ஆழமும் தீவிரமும் கொண்ட கதாபாத்திரங்களில் முழுமையாக ஒன்றி நடிக்கும் அவரது திறமைக்கு விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருமனதாக பாராட்டியுள்ளனர்.

அவரது பயணத்தில் புதிய மற்றும் உற்சாகமான கட்டமாக, ஹாட்ஸ்பாட் 2 மூலம் light hearted சினிமாவுக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கிறார். நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம், இந்த வாரம் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படத்தின் preview காட்சிகளும் மற்றும் பத்திரிகையாளர் காட்சிக்கான திரையிடல்களும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அவரது புத்துணர்ச்சியான திரைத் தோற்றமும் சிறப்பான நடிப்பும் பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

அவர் தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டபோது,

“தீவிரமான மற்றும் சீரியஸ் ஆன படங்களில் நடித்த பிறகு, ஹாட்ஸ்பாட் 2 எனக்கு ஒரு இனிய மாற்றமாக இருந்தது. இது வேடிக்கையான light hearted படமாக, Gen Z தலைமுறையின் நவீன உறவுகளை சிறு ஃபேண்டசி கலந்த அணுகுமுறையுடன் ஆராய்கிறது. இதுவே கதையை மிகவும் புத்துணர்ச்சியாக மாற்றுகிறது. இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கின் படைப்புகளை நான் நீண்ட காலமாக ரசித்து வருகிறேன் — திட்டம் இரண்டு, பிளான் B முதல்.. துணிச்சலான மற்றும் வித்தியாசமான கதையாக்கத்தால் தனித்துவமாகத் திகழ்ந்த ஹாட்ஸ்பாட் முதல் பாகம் வரை…

ஹாட்ஸ்பாட் 2-வில் நடிக்க அவர் அழைத்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அஷ்வினுடன் இணைந்து பணியாற்றிய அனுபவமும் மிகவும் திருப்திகரமாக இருந்தது. உலகளாவிய வெளியீட்டை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். இனிமேலும் புதுமையான, கதைகளில் நடிக்க விரும்புகிறேன்.”

ஹாட்ஸ்பாட் 2 மூலம், அர்த்தமுள்ள சினிமாவுக்கான தனது அர்ப்பணிப்பை பவானி ஸ்ரீ மீண்டும் உறுதிப்படுத்துவதோடு, நடிகையாக தனது பலதிறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதனால், இந்த வாரத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் வெளியீடுகளில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.

Latest articles

இந்தக் குழுவுடன் மீண்டும் ஒரு திரைப்படத்தில் பணியாற்ற வேண்டும்! -இதயம் முரளி படத்தின் வெற்றி விழாவில் விருப்பம் தெரிவித்த நடிகை கயாது லோகர் 

அதர்வா நடிக்க, ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்து இயக்கிய 'இதயம் முரளி' திரைப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் ஒட்டுமொத்த படக்குழுவினரும் கலந்துகொள்ள...

‘நெக்ஸா இந்தியன் ஸ்ட்ரீமிங் அகாடமி விருதுகள்’ விழாவில் சிறந்த இசையமைப்பாளராக கௌரவிக்கப்பட்ட சாம் சி எஸ்!

இந்தியாவின் முன்னணி OTT படைப்புகளை கௌரவிக்கும் NEXA Indian Streaming Academy Awards விருதுகள் விழாவில், இசையமைப்பாளர் சாம்...

மூன்றாம் முறை தேசிய விருது… ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு பாடகர் வேல்முருகன் காசு மாலையுடன் பாராட்டு!

நேற்று (19 ஜூலை 2026) அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளில்  ஜி.வி. பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு...

46 ஆண்டுகால திரைப்பயணத்தில் மேலும் ஒரு மகுடம் சூட்டிய ‘அமரன்’ – 72-வது தேசிய திரைப்பட விருதுகளில் மூன்று விருதுகளை வென்றது!

இந்திய திரையுலகில் நடிகர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் தனது தனித்துவமான கலைப் பார்வையால் அழியாத...

More like this