HomeCinemaதேவதைக்கும் அரக்கனுக்கும் இடையிலான போரை பற்றிய விறுவிறுப்பான த்ரில்லர் கதையில் உருவான படம் இது! -’BP...

தேவதைக்கும் அரக்கனுக்கும் இடையிலான போரை பற்றிய விறுவிறுப்பான த்ரில்லர் கதையில் உருவான படம் இது! -’BP 180’ படம் பற்றி விவரிக்கிறார் இயக்குநர் ஜெபி

Published on

இயக்குநர் மிஷ்கினிடம் உதவியாளராக பணியாற்றிய ஜெபி சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ’BP 180’ மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் (மறைந்த) நடிகர் டேனியல் பாலாஜி வில்லன் கதாபாத்திரத்திலும், நடிகை தான்யா ரவிச்சந்திரன் முதன்மை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். படத்தின் முதல் பார்வை போஸ்டர் மற்றும் புரோமோஷனல் அறிவிப்புகள் படம் குறித்த எதிர்பார்ப்பை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் டேனியல் பாலாஜியின் கடைசி திரைப்படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் டேனியல் பாலாஜியை திரையில் காண உணர்ச்சி பெருக்குடன் காத்திருக்கின்றனர்.

விறுவிறுப்பான திரைக்கதை, உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் நவம்பர் 28-ம் தேதி ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையனுபவத்தை தரவிருக்கிற இந்தப் படம் குறித்து இயக்குநர் ஜெபியிடம் கேட்டபோது, “’BP 180’ என்பது ஆபத்தான மருத்துவ மற்றும் உளவியல் நிலையைக் குறிக்கிறது. இதில் போதைப்பொருட்கள் புழக்கத்தால் தனிநபர்கள் இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இந்த கட்டத்தில் அவர்களின் ஆறாவது அறிவு தடுமாறி விலங்குகளைப் போல நடந்து கொள்கிறார்கள். ஆண்கள் கும்பலாக சேர்ந்து மற்றவர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்துவதையோ அல்லது தனிநபர் பெண்கள் மீது கொடூரமான தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களை எதிர்கொள்ளும் காலக்கட்டத்தில் வாழ்கிறோம். இவர்கள் மருத்துவரீதியாக ’BP 180’ ஆக உருவகப்படுத்துவார்கள். இந்தக் கதையில், டேனியல் பாலாஜியின் கதாபாத்திரம் இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஒருவர். அவரிடம் சிக்கிக் கொண்ட மருத்துவராக தான்யா ரவிச்சந்திரன் நடித்திருக்கிறார்.

டேனியல் பாலாஜிக்குள் இருக்கும் அரக்கத்தன்மையை மாற்ற இடைவிடாமல் போராடுகிறார். இந்த ‘தேவதை’ அந்த ‘பிசாசை’ காப்பாற்றுவதில் வெற்றி பெற்றாரா அல்லது இறுதியில் அழிப்பாரா என்பது படத்தின் கதை. என் கதையின் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் ரேடியன்ட் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் மற்றும் அதுல் இந்தியா மூவீஸின் பிரதிக் டி. சத்பர் மற்றும் அதுல் எம். போசாமியா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி. சமூகத் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தொடர்ந்து இயக்குவதே என் நோக்கம்” என்றார்.

Latest articles

துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு

https://www.youtube.com/watch?v=_Fy4eK09pWM துல்கர் சல்மானின் பிறந்தநாளை முன்னிட்டு ஏ ஒ டி - AOT திரைப்படக் குழுவினர் - அப்படத்தில் இடம்பெறும்...

வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகிறது!

சில திருமணங்கள் இனிய நினைவுகளை உருவாக்கும். சில திருமணங்கள் மறக்க முடியாத கலகலப்பையும் குழப்பத்தையும் உருவாக்கும். அப்படிப்பட்ட ஒரு...

SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub

Integrated business destination within SPR City supports the Tamil Nadu Government's 'Perambur 2.0' initiative,...

ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்கிய அல்லு அர்ஜுன்… ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு உற்சாகம்!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், இந்தியாவின் ஏழு மாநிலங்களில் இருந்து, குறிப்பாக தமிழகத்தில் இருந்து அதிக ரசிகர்கள் கலந்து...

More like this