HomeMovie Reviewஅங்கம்மாள் சினிமா விமர்சனம்

அங்கம்மாள் சினிமா விமர்சனம்

Published on

‘தான்’ என்ற அகம்பாவத்தில் வாழ்ந்து மடிந்த, வாழ்ந்து கொண்டிருக்கிற எத்தனையோ பெண்களை இந்த உலகம் பார்த்திருக்கிறது. அப்படியொருவரின் பிம்பமாக ‘அங்கம்மாள்.’

அந்த இளைஞன் படித்து முன்னேறி டாக்டராகியிருக்கிறான். பணக்கார குடும்பத்துப் பெண்ணைக் காதலிக்கிறான். அவனது அம்மா ஜாக்கெட் அணியும் பழக்கமில்லாதவள். அந்த தோற்றம் அவனைக் காதலிக்கும் பெண்ணுக்கும் அவளது வீட்டாருக்கும் அருவருப்பாக இருக்கும் என அவன் நினைக்கிறான்; அவனும் சற்று அருவருப்பாகவே உணர்கிறான். அதற்காக தன் அம்மாவை ஜாக்கெட் அணியச் சொல்கிறான்.

அவள் ஒரு விதத்தில் அடங்காப் பிடாரி; தான் நினைப்பதை மட்டுமே செய்பவள். மகனுக்காக பிளவுஸ் அணிந்துகொள்ள அவள் தயாராக இல்லை. அதனால் அம்மாவுக்கும் மகனுக்கும் மோதல் உருவாகிறது.

அந்த மோதல் அவனது காதலுக்கு ஆப்பு வைத்ததா? ஹேப்பி என்டிங்கில் முடிந்ததா? என்பது மீதிக் கதை…

ஜாக்கெட் அணியாத தேகம், செருப்பணியாத கால்கள், முகத்தில் எந்த நேரமும் ஒருவித இறுமாப்பு, யாருக்கும் எதற்காகவும் பணிந்துபோகாத குணம், பாசத்தை அதன் தன்மையோடு வெளிப்படுத்த தெரியாத இயல்பு, அடிக்கடி சுருட்டையும் பீடியையும் புகைக்கும் பழக்கம், மற்றவர்களை வார்த்தைகளாலும் மருமகளை கைகளாலும் அடித்து துவைக்கிற வழக்கம் என பலரையும் எரிச்சலூட்டும் பெண்மணி அங்கம்மாள். அந்த தாறுமாறான கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் கீதா கைலாசத்தின் நடிப்பு அத்தனை தரம். 

அம்மாவுக்கு பயந்து பயந்தே நாட்களைக் கடத்தினாலும் ஒரு கட்டத்தில் அவரிடம் தனக்காக மாறும்படி இதமாக கேட்டு, கேட்டதை பெற்றுக்கொள்ளும் மகனாக வடசென்னை சரண், அவரது காதலியாக பேச்சிலும் நடவடிக்கைகளிலும் கனிவு காட்டும் முல்லையரசி,

அம்மாவுக்கு பயந்த மூத்த பிள்ளையாக, அம்மா மீது பல வருடங்களாக தனக்கிருக்கும் கோபத்தை ஒரு கட்டத்தில் கலங்கிய மனதுடன் காண்பிக்கிற நாடோடிகள் பரணி, அவரது மனைவியாக தன் மாமியாரின் கன்னாபின்னா பேச்சுக்கும் காட்டுத்தனமான அடிதடிக்கும் ஆளாகித் தவிப்பவராக தென்றல் ரகுநாதன்… இப்படி ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். அத்தனைப் பேரின் நடிப்பும் நிறைவு.

கதை நிகழ்விட நிலப்பரப்பின் வறட்சியை அஞ்சாய் சாமுவேலின் ஒளிப்பதிவில் பார்க்கும்போது பிரமாண்டமாகவும் அழகாகவும் தெரிகிறது. கதையின் உணர்வோட்டத்துக்கு முகமது முக்பூல் மன்சூரின் பின்னணி இசை உயிரோட்டம் தந்திருக்கிறது. பாடல்கள் இதம்.

பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகனின் ஆழமான கதைகளின் ஒன்றான ‘கோடித்துணி’க்கு திரைக்கதை அமைத்து அங்கம்மாளாக திரையில் உலவ விட்டிருக்கும் இயக்குநர் விபின் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட படக்குழுவினர் பாராட்டு மழையில் நனையவும், விருதுகளைக் குவிக்கவும் தயாராகலாம்.

Rating 4.5 / 5

Latest articles

தமிழ் தூதர் தனிநாயகம் அடிகளார் ஆவணப்படம் வெளியீடு 

சென்ற ஆண்டு கவிக்கோ ஆவணப்படத்தை இயக்கிய இயக்குனர் கவிஞர் பிருந்தா சாரதி  இவ்வாண்டு தமிழ்த் தூதர் தனிநாயகம் அடிகளார்...

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் (Unformula Films) தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரவீந்திரா புல்லே இயக்கத்தில், 'நேஷனல் கிரஷ்' ராஷ்மிகா மந்தானா...

தேசிய விருது வென்ற தயாரிப்பாளர்கள் குமார் மங்கத் பதக், அபிஷேக் பதக் இருவரும் ‘மார்கோ’ புகழ் உன்னி முகுந்தனுடன் இணையும் பிரம்மாண்ட மலையாள திரைப்படம்!

குமார் மங்கத் பதக் மற்றும் அபிஷேக் பதக் தலைமையிலான பனோரமா ஸ்டுடியோஸ், ‘மார்கோ’ படத்தின் மூலம் பிரபலமான நடிகர்...

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் தனது இடத்தை நிலைநிறுத்தும் முனைப்பில் நடிகை நிதி அகர்வால்!

நடிகை நிதி அகர்வால் தனது திரைப்பயணத்தின் முக்கியமான கட்டத்தில் நுழைந்துள்ளார். இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல...

More like this