HomeCinemaஅமரம் சினிமா விமர்சனம்

அமரம் சினிமா விமர்சனம்

Published on

கொலை செய்வதை தொழிலாக கொண்டவன் அருகன். அவன் ஒரு எழுத்தாளரைக் கொலை செய்துவிட, எழுத்தாளரின் மகள் அவனை கொல்ல வேண்டும் என முடிவெடுக்கிறாள். அவளுக்கு அரசியல் பிரபலம் ஒருவர் உதவ முன்வருகிறார். கிராமம் ஒன்றில் இருக்கும் கொலைகாரன் அருகனை கண்டுபிடித்து, அவனை கொலை செய்ய திட்டம் போட்டுக் கொடுக்கிறார்.

அருகனை நேரில் சந்திக்கும் அந்த பெண் அவனிடம், தன் அப்பாவை கொலை செய்யச் சொன்னது யார் என்று கேட்கிறாள். அவன் சொல்ல மறுக்கிறான்.

அந்த நேரமாகப் பார்த்து அவளை அந்த இடத்துக்கு கூட்டிச் சென்ற அரசியல்வாதி அவளைத் தாக்குகிறார். இன்னொரு இளைஞனால் கற்பழிப்பு முயற்சியும் நடக்கிறது.

இப்படி அதிரடியான சம்பவங்களுடன் ஒரு பாதியைக் கடக்கும் கதையின் மறுபாதி அந்த பெண்ணுக்கு என்னவாகிறது? அருகனின் பின்னணி என்ன? எழுத்தாளரைக் கொல்லச் சொன்னது யார்? ஏன்? கொலைகாரன் அருகனுக்கு என்ன தண்டனை? என்பதையெல்லாம் காண்பித்து நிறைவுக்கு வருகிறது… இயக்கம் திருஅருள் கிருஷ்ணன்

இரக்கமின்றி கொலைகளைச் செய்யும் கேரக்டருக்கு பொருத்தமான டெரர் லுக்கில் இருக்கிறார் அருகனாக வருகிற ராஜன் தேஜஸ்வர். வசனங்களை குறைவாகப் பேசி, முரட்டுத்தனமாக முகபாவங்களுடன் அவர் செய்யும் கொலைகள் மிரட்டல் ரகம்.

அப்பாவைக் கொன்றவனை கொலை செய்ய வேண்டும் என சீற்றத்துடன் புறப்படுவது, கொலைகாரன் மீது கருணைப் பார்வை வீசுவது என மாறுபட்ட மனநிலையைப் பிரதிபலிக்கும் கதாபாத்திரத்திற்கு இயல்பான நடிப்பால் நியாயம் செய்திருக்கிறார்.

நாகிநீடு, ஹரிஷ் பெராடி, சாய் தீனா உள்ளிட்டோர் வில்லன்களாக வலம் வருகிறார்கள். கொலைகார கூலிப்படையை வழிநடத்துபவராக வித்தியாசமான கெட்டப்பில் அசத்துகிறார் ஜார்ஜ் மரியான்.

சண்டைக் காட்சிகளுக்கு ஆர்ப்பாட்டமாகவும் உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு மென்மையாகவும் பயணிக்கிறது மிக்கி ஜெ .மேயரின் பின்னணி இசை. ஆக்ஷன் திரில்லர் படத்திற்குத் தேவையான சண்டைக் காட்சிகளை ஆக்ரோஷத்தின் சதவிகிதம் அதிகமிருக்கும்படி அமைத்திருக்கிறார் மிராக்கிள் மைக்கேல். கிராமம், நகரம், மலைப் பகுதி என கதை நகரும் வெவ்வேறு நிலப்பரப்புக்கு ஏற்றபடி கேமரா கோணங்களை அமைத்து காட்சிகளை மெருகேற்றியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் பரத் குமார்.

படம் முழுக்க வன்முறை, கொலைகள் என ரத்தம் தெறிக்கிற கதையில் மெல்லிய காதலும் இருக்கிறது. படத்தின் மேக்கிங் தரமாகவும் இருக்கிறது.

கரடுமுரடான கதைகளில் உருவாகும் படங்கள் உங்களுக்குப் பிடிக்குமென்றால் அமரம் ஓடும் தியேட்டரில் அமரலாம்.

Rating 3 / 5

 

 

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...