HomeMovie Reviewஆலகாலம் சினிமா விமர்சனம்

ஆலகாலம் சினிமா விமர்சனம்

Published on

கணவன் குடிகாரனாக வாய்த்ததால் வாழ்வில் நிம்மதியைத் தொலைத்த ஒரு தாய், தன் மகனை ஊர் உலகம் மதிக்கிற குடிமகனாக உருவாக்க நினைக்கிறாள். அந்த நினைப்பில் சமூகம் மண்ணள்ளிப் போட, அவளிடமிருந்து வெளிப்படும் ஆவேசத் ‘தீ‘ என்ன செய்கிறது என்பதே கதையோட்டம்… படிக்கும் காலத்தில் பணக்கார வீடடுப் பெண், ஏழை மாணவனை காதலிக்கிற வழக்கமான சினிமா மசாலா சங்கதிகளையும் காட்சிகளில் கலந்திருக்கிறது திரைக்கதை.

படத்தை தயாரித்து இயக்கிருக்கிற ஜெயகிருஷ்ணா, கதைநாயகனாக நடித்து குடிப் பழக்கத்துக்கு அடிமையான மனிதன் என்னவெல்லாம் அநியாய அக்கிரமங்களைச் செய்வானோ அதையெல்லாம் மிகச்சரியாக செய்திருக்கிறார். அந்த வேடத்துக்கு அவரது கரடு முரடான தோற்றமும் ஒத்துப் போயிருக்கிறது. அவரே கல்லூரி மாணவனாக வரும்போது மனது ஏற்க மறுக்கிறது.

குடி நோயாளிக்கு வாழ்க்கைப்பட்ட பெண்கள் எப்படியான துன்பங்களை அனுபவிப்பார்களோ அவற்றில் எதையும் மிச்சம் வைக்காமல் அனுபவித்திருக்கிறார் சாந்தினி.

மகனை குடிகாரனாக, கால் இழந்தவனாக, குப்பையோடு குப்பையாக பார்த்த நொடியில் மனம் உடைகிறபோது கலங்க வைக்கிறது ஈஸ்வரி ராவின் தேர்ந்த நடிப்பு.

தீபா சங்கர், தங்கதுரை, சிசர் மனோகர் என மற்றவர்களும் கதையின் தேவைக்கேற்ப நடித்திருக்க, என்.ஆர். ரகுந்தந்தனின் பின்னணி இசை காட்சிகளை பலமாக்கியிருக்கிறது. பாடல்கள் பொருத்தமான சூழலில் கலந்து நுழைந்து கடந்தோடுகின்றன. ஒளிப்பதிவு நேர்த்தி.

குடிப்பழக்கம் அழிவின் தொடக்கம் என்பதை எடுத்துச் சொல்ல பல படங்கள் வந்தாயிற்று. ஆனாலும் அவற்றிலிருந்து பாடம் கற்றுக் கொள்ளாத சமூகத்துக்கு ஆலகாலம் மாதிரியான படைப்புகளின் தேவை அவசியமாகிறது.

ஆலகாலம் – சமூகத்தை நல்ல திசைக்கு அழைத்துப்போகும் பாலம்!

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...
கணவன் குடிகாரனாக வாய்த்ததால் வாழ்வில் நிம்மதியைத் தொலைத்த ஒரு தாய், தன் மகனை ஊர் உலகம் மதிக்கிற குடிமகனாக உருவாக்க நினைக்கிறாள். அந்த நினைப்பில் சமூகம் மண்ணள்ளிப் போட, அவளிடமிருந்து வெளிப்படும் ஆவேசத் 'தீ' என்ன செய்கிறது என்பதே கதையோட்டம்... படிக்கும் காலத்தில் பணக்கார வீடடுப் பெண், ஏழை மாணவனை காதலிக்கிற வழக்கமான சினிமா மசாலா சங்கதிகளையும் காட்சிகளில் கலந்திருக்கிறது திரைக்கதை. படத்தை...ஆலகாலம் சினிமா விமர்சனம்