HomeCinemaசட்டத்துக்கு புறம்பாக செயல்படும் காதலனை, காதலி கண்டித்தாளா? தண்டித்தாளா? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கதைக்களத்தில், 'அங்காடித் தெரு'...

சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் காதலனை, காதலி கண்டித்தாளா? தண்டித்தாளா? எதிர்பார்ப்பை எகிறவைக்கும் கதைக்களத்தில், ‘அங்காடித் தெரு’ மகேஷ் நடிக்கும் ‘திமில்’ ஜூலை 19-ல் ரிலீஸ்!

Published on

‘அங்காடித்தெரு’ மகேஷ் கதாநாயகனாக நடிக்க, மனிஷாஜித் கதாநாயகியாக நடித்திருக்கும் படம் ‘திமில்.’ ‘தமிழன் சினிமாஸ்’சார்பில் ‘களபம்’
எம்.சகுபர் அலி தயாரிக்க, எஸ்.காதர் இயக்கியிருக்கும் இந்த படத்தில், அருண்மொழிவர்மன், சேரன் ராஜ், கனி, ராஜா, சுமி,விநாயகமூர்த்தி, சேவியர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

தேனி மாவட்டம் மலைப்பகுதியில் இருக்கும் ஒரு கிராமத்தில் தன் பெற்றோர்களுடன்
வசித்து வருகிறான் பாண்டி. அதே ஊரில் இருக்கும் மலரை காதலித்து வருகிறான். அதே ஊரில் சட்டத்துக்கு புறம்பான தொழிலில் ஈடுபட்டிருக்கும் சிலரிடம் அவர்களை போன்று தவறான பாதையில் பயணிக்கிறான். அந்த விவரம் அறியாமல் மலர் அவனை தொடர்ந்து காதலித்து வருகிறாள். தவறின் உச்சத்துக்கு சென்ற பாண்டி, தன் காதலியின் வீட்டிற்கே சென்று தவறான செயல்களைசெய்கிறான். இது மலருக்கு தெரிய வருகிறது. முடிவில் அவள் பாண்டியை கண்டித்தாளா? தண்டித்தாளா? என்பதை சுவாரசியமாக சொல்லியிருக்கிறது இந்த படம்.

படத்தில் நான்கு பாடல்களும் இரண்டு சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. கதையம்சத்தால் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்த படம் வரும் ஜூலை 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

படைப்பில் பங்களிப்பு:-
தயாரிப்பு: களபம் எம்.சகுபர் அலி
கதை திரைக்கதை வசனம் இயக்கம்: எஸ்.காதர்
ஒளிப்பதிவு: வெங்கடேஷ் அர்ஜுன்
இசை: ஏ.கே ஆல்ட்ரின்
பாடல்கள்: கவின்பா, சிவக்குமார், திருப்பத்தூரான் சேவியர்
எடிட்டிங்: சுரேஷ் அர்ஸ்
நடனம்: தம்பி சிவா
சண்டைப் பயிற்சி: ஆர்.சக்தி சரவணன்
மக்கள் தொடர்பு: வெங்கட்

Latest articles

மகுடம் சினிமா விமர்சனம்

விஷால் இயக்குநராகியிருக்கும் படம். ஏற்ற பாத்திரங்கள் அப்பா மகன் என இரண்டு. அப்பா பெரிய கேங்ஸ்டர். அப்படியிருப்பவருக்கு எதிரிகள்...

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

‘காட்டாளன்’ திரைப்படத்தின் மூலம் மலையாளம் மட்டுமல்லாது, மொழித் தடைகளைத் தாண்டி தென்னிந்திய அளவில் தனது பிராந்திய ஸ்ட்ரீமிங் திட்டத்தை...

குட்வில் எண்டர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனத்தின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஹோ’ சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாகியுள்ளது!

https://www.youtube.com/watch?v=nHZxWWcUltk குட்வில் எண்டர்டெயின்மென்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் பான் இந்தியன் இன்வஸ்டிகேட் திரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தின்...

’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரம்மாண்ட திரைப்படமான ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் சிறப்பு புரோமோவை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது....

More like this