Monday, December 8, 2025
spot_img
HomeCinemaமருத்துவத்தில் புதிய மாற்றத்தை மக்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை இந்த படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார்கள்! -அஞ்சாமை'...

மருத்துவத்தில் புதிய மாற்றத்தை மக்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை இந்த படத்தில் அழகாக சொல்லியிருக்கிறார்கள்! -அஞ்சாமை’ பட நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேச்சு

Published on

விதார்த், வாணி போஜன், ரகுமான், கிருத்திக் மோகன், பாலசந்திரன் ஐஏஎஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘அஞ்சாமை.’ மோகன் ராஜா, லிங்குசாமி உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த எஸ்.பி.சுப்புராமன் இயக்கியுள்ளார். பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம், முதன் முறையாக இந்த படத்தை வாங்கி வெளியிடுகிறது. iஇந்த படம் வரும் ஜூன் 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் நிலையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

இயக்குநர் சுப்புராமன் பேசியபோது, ”இந்த படம் நீட்டுக்கு ஆதரவா எதிர்ப்பா என்பதெல்லாம் விஷயம் இல்லை. மக்கள் படும் வலியை இந்த படத்தில் கூறி இருக்கிறோம். படம் பார்த்துவிட்டு ஆதரவா, இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்யுங்கள். நீட் குறித்த படம் என்பதால் சென்சாரில் நாங்கள் இந்த படத்தை எடுத்ததற்கான புள்ளி விவரங்கள், தரவுகளை கேட்டார்கள். அதை பக்காவாக நாங்கள் கொடுத்தோம். அவையெல்லாம் சரியாக இருந்ததால் சென்சாரில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இதுவரை அரசியல்வாதிகள், பெற்றோர்களின் பார்வையில் தான் நீட் பற்றி பேசப்பட்டு வரும் நிலையில் ஒரு பள்ளி மாணவனின் மூலமாக அந்த வலியை சொல்ல வைத்திருக்கிறோம்.

இந்தப் படம் நடந்ததே காலத்தின் கட்டாயம் என்றுதான் நினைக்கிறேன். படத்தின் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு ஒரு டாக்டர் மட்டுமல்ல.. மன நல மருத்துவர், பேராசிரியர், எழுத்தாளர், பேச்சாளர், சமூக சிந்தனையாளர், தமிழ் ஆர்வலர் என பல பரிமாணங்களில் இருப்பவர். அவரை எல்லாம் எளிதாக திருப்திப்படுத்தவே முடியாது. அப்படிப்பட்டவரிடம் இருந்து நான் பாஸ்மார்க் வாங்கி இருக்கிறேன் என்றால் அதை பெரிய சந்தோஷமாக நினைக்கிறேன். அவருடைய சிந்தனையும் என்னுடைய சிந்தனையும் ஏதோ ஒரு இடத்தில் இணைந்ததால் தான் இந்த படம் நடந்திருக்கிறது.

ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தில் படம் இயக்க வேண்டும் என்பது பல பேருக்கு ஒரு ட்ரீம் ஆகவே இருக்கிறது. அவர்கள் எந்த விஷயத்தையும் சாதாரணமாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் இந்த படத்தை கையில் எடுத்ததே அஞ்சாமைக்கு கிடைத்த முதல் வெற்றி என நினைக்கிறேன். சட்டம் போடும் அதிகாரத்தில் இருக்கும் ஒருவர், அதனால் ஒரு சாதாரண மனிதன் எந்த விதத்தில் பாதிக்கப்படுவான் என்று தான் பார்க்க வேண்டும். அப்படி பாதிக்கப்படும் ஒரு சாமானியனின் கதை தான் இது. எல்லா பெற்றோரும் தனது குழந்தை ஒரு சான்றோனாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். அப்படி சான்றோன் ஆக்குவதற்கு கல்வி ரொம்ப முக்கியம். அந்த கல்வி தற்போது எந்த நிலையில் இருக்கிறது, அதற்காக பெற்றோர் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் என்பதைத்தான் வாழ்வியலுடன் கலந்து ரத்தமும் சதையுமாக இந்த படம் பேசி இருக்கிறது.

விதார்த் சிறந்த நடிகர் என்பது தெரியும். அவரிடம் இருந்து இன்னும் ஆழமாக தோண்டி கொஞ்சம் தங்கத்தை எடுத்துள்ளோம். வாணி போஜன் ஒரு பொம்மை போல அல்லாமல் இந்த படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் நடித்துள்ளார். அதற்கு உண்மையிலேயே தைரியம் வேண்டும். இது பெரும்பாலும் மலையாளம், வங்காளத்தில் உள்ள நாடகக் கலைஞர்கள் தான் செய்வார்கள். அந்த அளவிற்கு அவருக்குள் இருக்கும் தாகம் இந்தப் படத்தின் மூலம் அவரை வேற லெவலுக்கு எடுத்துச் செல்லும். இந்த சமயத்தில் மம்முட்டி சாரிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.. அவரை ஹைதராபாத்தில் சந்தித்து இந்த கதையை சொன்னபோது அவரும் நடிக்க சம்மதித்தார். அதே சமயம் அவருடைய தேதிகள் கிடைக்க இரண்டு மாதம் தாமதமாகும் என்பதாலும் நாங்கள் உடனடியாக படப்பிடிப்பு நடத்த கிளம்பி விட்டதாலும் அவரை இந்த படத்தில் மிஸ் பண்ணி விட்டோம்.

அவருக்கு அடுத்ததாக தான் ரகுமான் சார் அந்த இடத்திற்கு வந்தார். அவருக்கு தமிழ் டியூசன் எல்லாம் வைத்து மிகச்சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்.
இந்தப் படத்தில் கிருத்திக் நடித்த கதாபாத்திரத்திற்காக பல பேரை ஆடிஷன் செய்தோம். ஆனால் மிகக் குறைந்த நேரத்திலேயே வசனங்களை மனப்பாடம் செய்து சிறப்பாக நடித்து எங்களை வியக்க வைத்தார் கிருத்திக். அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. தயாரிப்பாளரின் நண்பர் என்றாலும் கூட பாலச்சந்திரன் சாரை ஆடிசன் வைத்து தான் தேர்வு செய்தோம். தமிழ் சினிமாவுக்கு அடுத்த திலகன் ரெடி ஆகிவிட்டார் என மிரண்டு போனோம்.

எடிட்டர் ராம் சுதர்சன் கமல் சாரிடமிருந்து சுமார் தயாராகி 18 படங்களில் பணியாற்றி இருந்தாலும் இதுதான் முதல் படம் போலவே வேலை பார்த்தார். கார்த்திக் நேத்தா, அறிவுமதி ஆகியோருடன் நானும் இந்த படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ளேன். மணி சர்மாவுடன் கிட்டத்தட்ட 300 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ள அவரது சகோதரர் மகன் ராகவ் பிரசாத் இந்த படத்தில் இசையமைத்திருக்கிறார். இந்த படத்திற்கு முதல் பாதியில் எந்த இடத்திலும் வெஸ்டர்ன் இசை வந்துவிடக் கூடாது என உறுதியாக இருந்தோம். வலியை சொல்லும் அழகான மெலடி பாடல் ஒன்றை வழக்கமான பார்மெட்டில் இருந்து உடைத்து புதுவிதமாக கொடுத்திருக்கிறார். இந்தப் படம் பெற்றோருக்கான, மாணவருக்கான, நமக்கான படம்.. யாருக்கும் எதிரான படம் அல்ல,, மக்களுடைய வலியை சொல்லி இருக்கிறோம்” என்றார்.

நாயகன் விதாத் பேசும்போது, “நடிப்புத்துறைக்கு வந்ததில் இந்த படத்தை பண்ணியதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்த கதையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அழ ஆரம்பித்து விட்டேன். இந்த படத்தில் நான்கு விதமான காலகட்டங்களில் நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதனால் திண்டுக்கல்லில் இதன் படப்படிப்பையும் இடைவெளி விட்டுவிட்டு நடத்தினோம். படத்தின் புரொடக்ஷனிலும் உதவியாக இறங்கினேன். இதில் மம்முட்டியை நடிக்க வைப்பதற்காக அவரை பேரில் சென்று பார்த்து கதை சொல்லி அவருக்கும் பிடித்து போனது. ஆனால் தேதிகள் ஒத்து வராததால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்குப் அதற்கு பதிலாக அடுத்ததாக ரகுமான் சார் வந்தார். ரொம்பவே பிரமாதமாக பண்ணி உள்ளார். நான் நடித்ததிலேயே கொஞ்சம் அதிக பொருட்செலவு ஆன படம் இது. அதன் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் இந்த படத்தை பார்த்த அன்றே இதை தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள்.

இது இந்தியாவில் உள்ள அத்தனை மனிதர்களுக்குமான படம். அப்படி ஒரு பிரச்சனையை என் படம் மூலமாக சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதுவரை நடித்த படங்களில் இந்த படத்தில் நடித்ததற்காக நான் ரொம்பவே பெருமைப்படுகிறேன். இந்த படத்தில் எனக்கு ஒரு அற்புதமான பாடல் கிடைத்திருக்கிறது.

பணம் வாங்கிக்கொண்டு தான் நடித்தேன் என்றாலும் இந்த படத்தில் அனைத்து வேலைகளையும் இறங்கி பார்த்தேன். பல படங்களை இதற்காக நான் விட்டிருக்கிறேன். நான் நடிக்க வந்ததற்கான அர்த்தம் இந்த படம் நடித்தபோது கிடைத்தது. பயணிகள் கவனிக்கவும், இறுகப்பற்று படங்களை எந்த அளவிற்கு நீங்கள் பாராட்டுகிறீர்களோ அதே போன்ற ஒரு படத்தை இப்போது கொடுத்திருக்கிறோம்” என்றார்.

நாயகி வாணி போஜன் “இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறீர்களே என்று பலரும் கேட்டார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் பண்ணவேண்டாம் என நினைத்தால் நான் நடிகையாக இருப்பதற்கு அர்த்தமே இல்லை என நினைக்கிறேன். எனக்கு இப்படி ஒரு படம் கிடைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசமான விஷயம். ஒரு நடிகையாக, ஒரு சமூக பொறுப்புணர்வு உள்ள ஒரு மனிதராக, இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்ல மாட்டார்கள். 100% என்னுடைய உழைப்பை கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன்” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு பேசும்போது, “அருவி, ஜோக்கர் போன்ற படங்களை வெளியிட்ட போது நல்ல படங்களாக தேர்வு செய்து வாங்குகிறீர்களே என பலரும் கூறினார்கள். நாம் படங்களை தயாரித்து வெளியிட்டு நமக்கான ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம். அதனால் வேறு நல்ல படங்கள் வரும்போது அந்த ஆதரவை நாம் அந்த படங்களுக்கு பகிர்ந்து கொடுக்கலாம் என நினைத்தோம். அதன் மூலமாக நமக்கு வருமானம் வருகிறது என்பது மட்டுமில்லாமல் ஒரு நல்ல படம் சரியான இடத்திற்கு சென்று சேர வேண்டும் என்கிற எண்ணம் தான் முக்கிய காரணம். படம் எப்படி தயாரிக்க வேண்டும் என என்னிடம் கேட்கும் பலரிடமும் மக்களுக்கு பிடிக்கும் விதமாக படம் எடுங்கள், அது எப்படியாவது அவர்களை சென்று அடைந்து விடும் என்பேன்.

நம் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்காகவே வாழ ஆரம்பிப்போம். அவர்களது பள்ளிப்படிப்பு முடிந்து கல்லூரி படிப்பு ஆரம்பிக்கும்போது பல பெற்றோர்கள் நினைப்பது என்னுடைய பையன் டாக்டராக வேண்டும் என்பதுதான். அப்படிப்பட்ட மருத்துவத்தில் இப்போது ஒரு புதிய முறை மாறும் போது. மக்கள் அந்த மாற்றத்தை எப்படி அணுகுகிறார்கள் என்பதை இந்த படத்தில் அழகாக சொல்லி இருக்கிறார்கள். படத்தின் இயக்குனர் சுப்புராமன் ரியாலிட்டி, ஃபேண்டஸி இரண்டையும் அழகாக கலந்து இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். இந்த படத்தில் விதார்த் நடித்துள்ள கதாபாத்திரத்தை எடுத்து நடிக்கவே பல பேர் யோசிப்பார்கள். ஆனால் விதார்த் தைரியமாக பண்ணியிருக்கிறார். சினிமா பற்றிய அனுபவம் இல்லாமல் ஒரு புதிய டீமை வைத்து ஒரு படத்தை தயாரித்து, அதை நல்லபடியாக வெளியிடுங்கள் என தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு என்னிடம் பொறுப்பை ஒப்படைத்ததை பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.

நிகழ்வில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, படத்தொகுப்பாளர் ராம் சுதர்சன், ஒளிப்பதிவாளர் கார்த்திக், நடிகர் கிருத்திக் மோகன், பாலச்சந்திரன் ஐஏஎஸ், தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

Latest articles

சூர்யா, நஸ்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! 

சூர்யா, நஸ்ரியா நசீம் நடிக்கும் ‘சூர்யா 47’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது....

பிரமாண்ட பிளாக்பஸ்டர் ‘படையப்பா’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம்...

’த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளன!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் - இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன்...

 ‘மூன்வாக்’ படத்திற்காக ஐந்து பாடல்களை பாடிய இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்! 

இந்தியாவின் இரண்டு ஐகானிக் நாயகர்களான ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் பிரபுதேவா 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் திரைப்படம்...

More like this

சூர்யா, நஸ்ரியா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! 

சூர்யா, நஸ்ரியா நசீம் நடிக்கும் ‘சூர்யா 47’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது....

பிரமாண்ட பிளாக்பஸ்டர் ‘படையப்பா’ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளில் ரீ ரிலீஸ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம்...

’த்ரிஷ்யம் 3’ திரைப்படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளன!

இந்த ஆண்டின் மிகப்பெரிய பான் - இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன்...
error: Content is protected !!