HomeGeneralகுடும்ப ரசிகர்களின் பேராதரவுடன், இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 300+ திரையரங்குகளில் வெற்றிகரமாகத் தொடரும் ‘அப்பா...

குடும்ப ரசிகர்களின் பேராதரவுடன், இரண்டாவது வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 300+ திரையரங்குகளில் வெற்றிகரமாகத் தொடரும் ‘அப்பா குட்டி.’

Published on

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில், இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஃபாத்திமா விஜய் ஆண்டனி வழங்கியுள்ள திரைப்படம் ‘அப்பா குட்டி’. நவம்பர் 20 அன்று வெளியான இப்படம், ரசிகர்கள் மற்றும் குடும்பப் பார்வையாளர்களின் அமோக வரவேற்புடன் இரண்டாவது வாரத்தில் வெற்றிகரமாகத் தொடர்கிறது.
தமிழ்நாடு முழுவதும் முதல் வாரத்தில் 243 திரையரங்குகளில் வெளியான இப்படம், இரண்டாவது வாரத்தில் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளாக அதிகரித்துள்ளது. பல திரையரங்குகளில் தொடர்ந்து Full House காட்சிகளுடன் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது.
‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தைப் போலவே குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை, குடும்ப ரசிகர்கள் என அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் ‘அப்பா குட்டி’ அமைந்துள்ளது. குறிப்பாக, அப்பா – மகள் பாசம், குடும்ப உறவுகளின் உணர்வுகள், சுவாரஸ்யமான திரைக்கதை என அனைத்து அம்சங்களும் இணைந்து அனைத்து வயதினரும் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய ஒரு முழுமையான பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் வரவேற்பைப் பெற்று வருகிறது.
தொடர்ந்து திரையரங்குகளுக்கு வருகை தந்து படத்திற்கு ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், குடும்பப் பார்வையாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் படக்குழுவினர் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.
‘அப்பா குட்டி’ – குடும்பத்துடன் திரையரங்கில் கொண்டாடுவோம்!

Latest articles

பிரபல இயக்குனர்கள் வெளியிட்ட THE RAW படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்!

GVKM Elephant Pictures பட நிறுவனம் சார்பில் டத்தோ கணேஷ் மோகனசுந்தரம், 2M சினிமாஸ் பட நிறுவனம் சார்பில்...

கார்த்திகேயன் சந்தானம், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் கூட்டணியில் உருவாகும் ‘மேயாத மான் 2’ படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது!

வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் கூட்டணியில் இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'மேயாத மான்'....

பசில் ஜோசப்- எல் கே அக்ஷய்குமார் இணைந்து மிரட்டும் ‘ராவடி’ படத்தின் குஜிலி மஸ்து இரண்டாம் பாடல் வெளியீடு!

https://www.youtube.com/watch?v=5Je6-r92hNg தென்னிந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரான பேசில் ஜோசப் - 'சிறை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட்...

IFFI விழாவில் திரையிடப்பட்ட ‘கூடு’  திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு

கோவா : சில திரைப்படங்கள் பாராட்டுகளைப் பெறுகின்றன. ஆனால் சில திரைப்படங்கள் ஒரு உணர்வுப்பூர்வமான அனுபவமாகவே மாறுகின்றன. அறிமுக...

More like this