HomeGeneralகிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது; பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன! -அப்பா குட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில்...

கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது; பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன! -அப்பா குட்டி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் விஜய் ஆண்டனி  

Published on

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்வில் இயக்குநர் மு மாறன் பேசியதாவது,
“‘அப்பா குட்டி’ என்னுடைய நான்காவது படம். இதற்கு முன்பு நான் இயக்கிய மூன்று படங்களும் கிரைம் த்ரில்லர் ஜானரில் அமைந்திருந்தன. தொடர்ந்து அதே ஜானரில் ஏன் படங்கள் இயக்குகிறீர்கள் என்று பலரும் கேட்டதால், இந்த முறை வித்தியாசமான கதைக்களத்தில் முயற்சி செய்திருக்கிறேன். இந்தக் கதையைப் பல தயாரிப்பாளர்களிடம் சொன்னபோது அனைவருக்கும் பிடித்திருந்தது. சில காரணங்களால் உடனடியாகப் படமாக்க முடியாமல் இருந்தது. பின்னர் ஒரு பெரிய தயாரிப்பு நிறுவனத்திடம் கதையைச் சொன்னபோது அவர்களுக்கும் பிடித்துப்போனது. அப்போது இந்தக் கதையில் விஜய் ஆண்டனி சார் நடித்தால் நன்றாக இருக்கும் என்று பரிந்துரைத்தேன்.
விஜய் ஆண்டனி சாரைச் சந்தித்து கதையின் முதல் பாதியைச் சொன்னதுமே இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார். நல்ல கதைகளுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம். ‘கன்டென்ட்தான் கிங்’ என்று பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கூறிவருகிறீர்கள். அப்படிப்பட்ட நல்ல கதையுடன் நாங்கள் வருகிறோம்.
இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வைஜெயந்தி மேமுக்கு நன்றி. படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய செந்தில் சார், தனஞ்செயன் சார், சசி சார் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நவம்பர் 28-ம் தேதி வெளியாகும் இப்படத்திற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும்.”
நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது,
‘அப்பா குட்டி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்தக் கதையைக் கேட்டபோது முதல் பாதியே மிகவும் பிடித்திருந்தது. இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன. ‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்த ஆல்பத்தை நானே வைத்துக்கொண்டேன். அதேபோல், ‘அப்பா குட்டி’ படத்தின் அப்பா பாடலைக் கேட்டபோது, இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
இயக்குநர் மு. மாறன் மிகவும் திறமையானவர். குறுகிய காலத்திலேயே திட்டமிட்டு, வேகமாகவும் சிறப்பாகவும் படத்தை முடித்திருக்கிறார். அவருடைய அடுத்தடுத்த படங்கள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.
ப்ரீத்தி அஸ்ராணி எந்தக் கோணத்தில் கேமரா வைத்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர். தமிழ் மொழி அவருக்குத் தாய்மொழி இல்லையென்றாலும், வசனங்களைப் பேசி நடித்த விதம் பாராட்டுக்குரியது. பேபி லிதன்யாவின் நடிப்பும் வியக்க வைக்கிறது. இந்த வயதிலேயே ஒரு அனுபவம் வாய்ந்த நடிகையைப் போலத் தொழில்முறையுடன் நடித்திருக்கிறார். ஹரிப்ரியா பாடிய பாடலும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர் செந்தில், தனஞ்செயன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் எனக்கு அளித்த அன்பையும் வரவேற்பையும் தொடர்ந்து வழங்கி வரும் ரசிகர்களுக்கு நன்றி. இந்த நிகழ்வில் ‘பிச்சைக்காரன் 3’ குறித்த அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தப் படமும் விரைவில் வெளியாகும் என நம்புகிறேன். ‘அப்பா குட்டி’ படத்தையும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”
கலை இயக்குநர்  ராஜா பேசியதாவது.. ,
“இந்தப் படத்தைத் திட்டமிடும்போதே இயக்குநர் சார் பல சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டார். அதற்கேற்ப படத்தில் பல புதிய முயற்சிகளை மேற்கொண்டோம். என்னுடைய பணியிலும் மூன்று, நான்கு விதமான மாற்றங்களைச் செய்திருக்கிறோம். குறிப்பாக, இரண்டு காலகட்டங்களில் காட்சிகளின் தோற்றம், வண்ணங்கள் மற்றும் அதற்கான அம்சங்களில் நிறைய புதுமைகளைச் சேர்த்திருக்கிறோம். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் மிக்க நன்றி.”
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ராஜேந்திரன்  பேசியதாவது.. ,
“இந்தப் படத்தின் விஷுவல் டிபார்ட்மென்ட் எனக்கு அளித்ததற்கு நன்றி. எடிட்டர், மியூசிக் டைரக்டர் என அனைவருடனும் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவமாக இருந்தது. இயக்குநர் எனக்கு மிகவும் இனிமையான மனிதராகத் தெரிந்தார். ஒரு அழகான, மனதுக்கு நெருக்கமான கதையை அவர் உருவாக்கியிருக்கிறார். எங்களுக்குள் இருந்த நல்ல புரிதலும், ஒத்துழைப்பும் பணியை மிகவும் சுவாரஸ்யமாக்கியது.
காஸ்ட்யூம் டிசைனிங் உள்ளிட்ட ஒவ்வொரு விஷயத்திலும் ஆரம்பத்திலிருந்தே எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. இந்தக் கதையின் முக்கியமான பகுதி ஊட்டியில் நடைபெறுகிறது. ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுவதற்கு ஊட்டி போன்ற இடம் பல்வேறு விஷுவல் வாய்ப்புகளை வழங்கக்கூடியது. அந்த இடத்தை மனதில் வைத்து நாங்கள் திட்டமிட்ட விஷுவல்களைத் திரையில் பார்க்கும்போது நிச்சயம் ரசிப்பீர்கள். நன்றி.”
பாடலாசிரியர் ஏகாதசி பேசியதாவது..,
“இயக்குநர் சாருடன் நான் முதன்முதலில் ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் பணியாற்றினேன். அந்தப் படத்தில் ஐந்து, ஆறு பாடல்கள் எழுதினேன். அப்போது நண்பர் தமிழரசன் மூலம் மீரா கதிரவன் சாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் எழுதிய ஒரு பாடல் விஜய் ஆண்டனி சாருக்கும் தனஞ்செயன் சாருக்கும் பிடித்துப்போனதால், அந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் அவர்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இந்தப் படத்தில் அப்பாவைப் பற்றியும், மகளைப் பற்றியும் இரண்டு உணர்வுபூர்வமான பாடல்களை எழுதியிருக்கிறேன். குறிப்பாக, ‘திருவிழா தேர்த்திண்ணையில் உறங்கும்… அது உறக்கத்தில்கூட என் பேரை உளறும்’ என்ற வரிகள் பலரையும் நெகிழ வைத்திருக்கின்றன. இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு பலரும் எனக்குத் தொலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
இந்தப் படத்தில் அப்பாவைப் பற்றியும், மகளைப் பற்றியும் இரண்டு உணர்வுபூர்வமான பாடல்களை எழுதியிருக்கிறேன். குறிப்பாக, ‘திருவிழா தேர்த்திண்ணையில் உறங்கும்… அது உறக்கத்தில்கூட என் பேரை உளறும்’ என்ற வரிகள் பலரையும் நெகிழ வைத்திருக்கின்றன. இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு பலரும் எனக்குத் தொலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
என்னுடைய பாடல்களில் ஏற்கெனவே அம்மாவைப் பற்றிய பாடல் மிகவும் பிரபலமானது. அதேபோல் அப்பாவைப் பற்றிய ஒரு பாடலும் இந்தப் படத்தில் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. குறிப்பாக, அப்பாவைப் பற்றிய பாடலை எழுதும்போது என்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களும் அதில் கலந்திருந்தன. சிறு வயதிலேயே அப்பா வேறொரு திருமணம் செய்துகொண்டதால், அப்பாவின் அன்பையும் அரவணைப்பையும் நான் அனுபவித்ததில்லை. அப்பா என்ற உறவு எனக்கு எப்படி இருக்கும் என்பதுகூடத் தெரியாது. ஆனால், ஒரு எழுத்தாளராக இந்தப் படத்தின் அப்பா கதாபாத்திரத்தின் வலியை உணர்ந்து எழுத முடிந்தது.
அந்த உணர்வுகளைப் பாடல் வரிகளாக வெளிப்படுத்த வாய்ப்பளித்த விஜய் ஆண்டனி சார் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
பாடலாசிரியர் அருண் பாரதி பேசியதாவது..,
‘என்னை அறிமுகப்படுத்தியவர் விஜய் ஆண்டனி சார். அதன்பிறகு பல பாடல்களில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். இந்தப் படத்திலும் எனக்கு ஓர் அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, அந்தப் பாடலின் வரிகளும் அதன் உணர்வும் எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றன. ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் பார்த்து’ பாடலைப் போல, இந்தப் படத்திலும் அப்பா – மகள் உறவைப் பேசும் பாடல்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை.
ஏகாதசி எழுதியுள்ள அப்பாவைப் பற்றிய பாடல் என்னை மிகவும் நெகிழ வைத்தது. எனக்கு அப்பாவின் அன்பையும் அரவணைப்பையும் முழுமையாக அனுபவிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், நான் பிளஸ் டூ படிக்கும்போது மண் சரிந்து விழுந்த விபத்தில் என் அப்பா உயிரிழந்தார். அப்போது அவரைப் பற்றிக் கவிதை ஒன்றை எழுதினேன். அந்த நினைவுகள் இன்றும் என் மனதில் இருக்கின்றன. அப்பா – மகள் உறவு எவ்வளவு ஆழமானது என்பதை இந்தப் படத்தின் டிரைலரிலேயே உணர முடிகிறது. குழந்தை சொல்லும், ‘நீ சாமியைப் பார்த்ததில்லை, ஆனாலும் சாமியை நம்புகிறாய்’ என்ற கருத்தைப் போலவே, பார்க்காமலேயே அன்பையும் உறவையும் உணர முடியும் என்பதை இந்தப் படம் அழகாகச் சொல்லும் என நம்புகிறேன்.
இயக்குநர் மு. மாறன் சாருக்கு இந்த அழகான வாய்ப்பை வழங்கியதற்காக நன்றி. விஜய் ஆண்டனி சார் பாடல் வரிகளை மிகவும் அக்கறையுடன் அணுகி, தேவையான திருத்தங்களையும் கவனமாகச் செய்தார். பாடலைப் பாடிய குஷ்யா, கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி மற்றும் படத்தில் நடித்த சிறுமி உள்ளிட்ட அனைவருக்கும் என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். படம் அனைவரையும் சென்றடையும் என நம்புகிறேன்.”
நடிகை ஹரிப்ரியா பேசியதாவது,
“‘அப்பா குட்டி’ திரைப்படம் என்னுடைய முதல் படம். என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய விஜய் ஆண்டனி சாருக்கும், அழகான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் மு. மாறன் சாருக்கும் மனமார்ந்த நன்றி. அனுபவம் வாய்ந்த பல கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார், இயக்குநர் குழு, ஒளிப்பதிவுக் குழு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. அனைவரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
நடிகை ஹரிதா  பேசியதாவது,
“‘அப்பா குட்டி’ படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் ஆண்டனி சார் மிகவும் அன்பான மனிதர். தயாரிப்பாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் எனப் பல பொறுப்புகளில் இருக்கும் அவர், கலைஞர்கள் அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வது மிகவும் சிறப்பானது. அந்த அன்பான அணுகுமுறைக்கு அவருக்கு மனமார்ந்த நன்றி. இயக்குநர் மு. மாறன் சார், ஒளிப்பதிவாளர் ராஜீவ் சார், கலை இயக்குநர் ராஜா சார் மற்றும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி.
என்னுடன் நடித்த சக கலைஞர்கள் அனைவருடனும் பணியாற்றியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் தந்தையின் அன்பு, குழந்தைப் பருவ உணர்வுகள் எனப் பல ஆழமான உணர்வுகளையும் உறவுகளையும் அழகாகப் பேசியிருக்கிறோம். இந்தப் படத்தை அனைவரும் மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரிக்க வேண்டும். திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”
நடிகர் மூணாறு ரமேஷ் பேசியதாவது,
“‘அப்பா குட்டி’ திரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் மு. மாறன் சார் அனைவரின் மனதையும் தொடும் வகையில் ஆழமான உணர்வுகளைக் கொண்ட கதையை உருவாக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி சார் எப்போதுமே வித்தியாசமான கதைகளையும் முயற்சிகளையும் தேர்ந்தெடுப்பவர். இந்தப் படத்தின் தலைப்பு முதல் பத்திரிகையாளர் சந்திப்பின் மேடை அமைப்பு வரை அனைத்திலும் அவரது தனித்துவம் தெரிகிறது.
படத்தின் இரண்டு பாடல்களும் மிகவும் அருமையாக இருக்கின்றன. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். ‘அப்பா குட்டி’ திரைப்படம் நிச்சயம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்து வெற்றிபெறும் என்று நம்புகிறேன். நன்றி.”
நடிகை லிஸ்ஸி ஆண்டனி பேசியதாவது,
“விஜய் ஆண்டனி சாரின் இசைக்கும், அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கும் நான் மிகப்பெரிய ரசிகை. அவருடைய ஒவ்வொரு படத்திலும் கதை தேர்வு வித்தியாசமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதையில் எனக்கும் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர் மு. மாறன் சாருக்கு நன்றி. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
அம்மாவைப் பற்றிப் பல பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பாவுக்காகவும் ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அப்பாவைப் பற்றிய பாடல் என்னை மிகவும் நெகிழ வைத்தது. நானும் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன். அனைவரும் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும். நன்றி.”
நடிகை ஹரிப்ரியா விஸ்வநாதன் பேசியதாவது,
“இயக்குநர் மு. மாறன் சாருடன் எனக்கு இது இரண்டாவது படம். இதற்கு முன்பு அவர் இயக்கிய படத்திலும், இந்தப் படத்திலும் எனக்கு வித்தியாசமான, சவாலான கதாபாத்திரங்களைக் கொடுத்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் முழுக் கதையையும் கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. குறிப்பாக, இதில் எனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பல்வேறு பரிமாணங்கள் இருப்பதால் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி.
விஜய் ஆண்டனி சார் மிகவும் எளிமையான மனிதர். அவருடன் இணைந்து பணியாற்றியது நல்ல அனுபவம். ப்ரீத்தி அஸ்ராணி மிகவும் அழகாகத் தமிழ் பேசுவார் என்பது எனக்கு ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒட்டுமொத்த படக்குழுவினரும் மிகவும் நட்பாகவும் ஜாலியாகவும் இருந்தார்கள். அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள். நவம்பர் 20-ம் தேதி படத்தைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.”
விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது,
“அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான அழகான பாசத்தை இயக்குநர் மு. மாறன் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் அப்பா குட்டியாக நடித்த சிறுமியும் தனது கதாபாத்திரத்தை அருமையாகச் செய்திருக்கிறார். மற்ற நடிகர்களும் சிறப்பாகப் பங்களித்துள்ளனர்.
நான் இந்தப் படத்தைப் பார்த்துவிட்டேன். படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. அனைவரும் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து வெற்றிபெறச் செய்ய வேண்டும். உங்கள் அன்பும் ஆதரவும் தேவை. நன்றி.”

Latest articles

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் உடல்நலத்தைப்...

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

'கிங் 100 - King 100' திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா  அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது...

‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் ‘வீராவி’ கதாபாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரசிகர்களின் உற்சாக வரவேற்போடு கடந்த இரு பாகங்களாக பெரும் வெற்றி பெற்ற 'பொலிமேரா' திரைப்பட வரிசையின் மூன்றாம் பாகமான...

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ‘பௌமா’, ‘டூக்ஸ்’ ஆகிய படங்களை தென்னிந்திய மாநிலங்களில் விநியோகம் செய்கிறது!

ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் பெத்லகேம் குடும்ப யூனிட்’ வெற்றியைத் தொடர்ந்து, ரெஜின் எஸ். பாபுவின் மிஸ்டரி-த்ரில்லர் 'பௌமா' மற்றும்...

More like this

தீபாவளித் திருநாளை முன்னிட்டு நடிகர் விஜய் சேதுபதியின் சமூகநல முன்னெடுப்பில் தென்காசியில் தீபாவளி நலவாழ்வு விழா!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு, சமூகத்தில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், பொதுமக்களின் உடல்நலத்தைப்...

நாகார்ஜுனாவின் ‘கிங் 100’ திரைப்படத்தில் நடிக்கும் அசோக் செல்வனின் ‘கர்ணா’ கதாபாத்திரத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

'கிங் 100 - King 100' திரைப்படம், நடிகர் நாகார்ஜுனா  அக்கினேனியின் திரைப்பயணத்தில் ஒரு மைல்கல்லாகவும், அவரது நூறாவது...

‘பொலிமேரா 3’ படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்கும் ‘வீராவி’ கதாபாத்திரத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

ரசிகர்களின் உற்சாக வரவேற்போடு கடந்த இரு பாகங்களாக பெரும் வெற்றி பெற்ற 'பொலிமேரா' திரைப்பட வரிசையின் மூன்றாம் பாகமான...