HomeMovie Reviewஅன்பில் அவன் சினிமா விமர்சனம்

அன்பில் அவன் சினிமா விமர்சனம்

Published on

காதல் பரவசம் ஆக்சன் அதகளம் கலந்து செய்த ‘அன்பில் அவன்.’

காதலித்து திருமணம் செய்து கொண்ட சூர்யா – இயல் ஜோடி ஒரு மலைப்பிரதேசத்தில் சொந்தமாக ‘ஹோம் ஸ்டே’ ஹோட்டல் தொடங்குவதற்கான முயற்சிகளில் இறங்குகிறார்கள். அதற்கு உள்ளூர் எம்.எல்.ஏ. மூலம் எதிர்ப்பு வருகிறது. எதிர்ப்புக்கான காரணமும், அதை காதல் ஜோடி எப்படி சமாளிக்கிறார்கள் என்பதும் கதை. இயக்கம் ஆர். கார்த்திகேயன்

காதல் மனைவியின் விருப்பத்தை நிறைவேற்ற எந்த ரிஸ்க்கும் எடுக்கத் தயாராகிறவராக அசோக் செல்வன். மனைவி மீது அன்பு, ஆக்சன் காட்சிகளில் ஆக்ரோஷம் என தன் பங்களிப்பை சரியாகச் செய்திருக்கிறார்.

ஹோம் ஸ்டே தொடங்குவதற்கான திட்டமிடலில் காட்டும் பரபரப்பு, எதிரிகளை வேட்டையாடும்போது பிளாஸ்ட்’டில் காட்டிய அதே சிங்கப் பெண் சீற்றம். பிரீத்தி முகுந்தன் கவனம் ஈர்க்கிற காட்சிகள் அதிகம் உண்டு.

போலீஸாக வருகிற மகா டெல்லிகணேஷ் காமவெறியொடு நடமாட, எம் எல் ஏ’வாக வருகிற கதிர்பாலுவும் வக்கீலாக வருகிற சாபுமோன் அப்துசமத் இருவரும் கொலைவெறியர்களாக களமாடியிருக்கிறார்கள்.

கோவிந்த் வசந்தா இசையில் ஆசை வரமே’, கல்லா நிக்கிறீயே’ பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன. பாடலுக்கான காட்சிகள் படத்துக்கு அழகு சேர்க்கின்றன. பின்னணி இசை அதிரடியான சம்பவங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுகிறது.

காதலில் தொடங்கி மலைப் பிரதேச பின்னணியில் சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் த்ரில்லராக மாறுகிற கதைக்களத்தை தரமாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன்.

ஒரு குறிப்பிட்ட இடத்தை வாங்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கும் எம் எல் ஏ’வுடன் ஹீரோவும் ஹீரோயினும் மோதுகிறார்கள் என்கிற விவகாரத்துக்கு அத்தனை வன்முறை, அத்தனை கொடூர கொலைகள் ரொம்பவே டூ மச்.

Rating 2.5 / 5

Latest articles

டோண்ட் டிரபிள் தி டிரபிள் சினிமா விமர்சனம்

கதைநாயகன் சூரிக்கு ஒரு பிரச்சனையிலிருந்து மீண்டு வர 25 லட்சம் தேவை. அந்த தேவையை தன்னுடன் தொடர்பிலிருக்கிற சிறுமியின்...

1000 பேருக்கு ‘அரிசி தானம்’ வழங்கி தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடிய டி ராஜேந்தர்!

திரைக்கலைஞர் டி.ராஜேந்தர் தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு 1000 பேருக்கு 'அரிசி தானம்' வழங்கினார். நிகழ்வு அகில இந்திய டி.ராஜேந்தர்...

‘டோரதி என் மனதுக்கு நெருக்கமான திரைப்படம்! -நடிகை கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷின் திரைப்பயணத்தில் ‘மகாநதி’ திரைப்படம் இன்றளவும் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. அந்த வரிசையில், அவர்...

‘சிக்மா’ தமிழ் திரையுலகில் மீண்டும் புதிய தொடக்கத்தை கொடுத்துள்ளது! -நடிகர் ஷிவ் பண்டிட்

வசீகரமான தோற்றம் மற்றும் திறமையான நடிப்பு என ’லீலை’ திரைப்படத்தின் கதாநாயகனாக அனைவரையும் கவர்ந்தவர் நடிகர் ஷிவ் பண்டிட்....

More like this