HomeGeneralஇளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் அழகிய லைலா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! 

இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கும் அழகிய லைலா படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது! 

Published on

ஏ.ஆர்.எம்.ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோ சார்பில் ஏ.ஆர்.மதியழகன், ஆரத்தி இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் ‘அழகிய லைலா.’

இளைய திலகம் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க, கதாநாயகியாக அப்சரா ராணி நடிக்கும்

இந்த படத்தில் யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ்,கிங்ஸ்லி, சரத், பூவையார் உட்பட பலர் நடிக்கிறார்கள்.
முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் தொடக்க விழா சென்னை அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள நாச்சியார் ஹவுஸ் படப்பிடிப்பு தளத்தில்  இன்று படப்பிடிப்புடன் தொடங்கியது.
இளைய திலகம் பிரபு  பேசுகையில், “இந்தப் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் எல்லோரும் கேரளாவில் இருந்து வந்திருக்கிறார்கள். மலையாளத்தில் படங்களை தயாரித்திருக்கிறார்கள். இயக்குனர் ரெஜித் மலையாளத்தில் முதல் படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் தமிழில் அவருக்கு முதல் படம். இந்த படத்தின் கதையை நான் கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கேட்டுக்கொண்டார். ஏற்கனவே, இயக்குனர் தயாரிப்பாளரிடம் கதையை சொல்லி…. கதை அவருக்கு பிடித்துப் போனது. அதன் பிறகு என்னை அணுகினார்கள்.
ஒன்றரை மணி நேரம் சிரித்துக்கொண்டே கதையை கேட்டேன். அதன் பிறகு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இந்தப் படம் நகைச்சுவை திரைப்படமாக உருவாகிறது.  சின்ன மாப்ளே, தேடினேன் வந்தது என்று பல நகைச்சுவை படங்களில் நடித்திருக்கின்றேன். அந்த வரிசையில் இந்த படமும் மிகப்பெரிய நகைச்சுவை படமாக இருக்கும்.
என்னுடைய தந்தைக்கு எப்படி ஆதரவு அளித்தீர்களோ… அதுபோல எனக்கும் நீங்கள் ஆதரவளித்தீர்கள். அதுபோல் என் மகன் விக்ரம் பிரபுவுக்கும் ஆதரவு அளித்து வருகிறீர்கள். அந்த வரிசையில் இந்த படக்குழுவுக்கும் நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு நல்ல கலைஞர்களை எப்போதும் வரவேற்று அவர்களை கொண்டாடி இருக்கிறார்கள். அதுபோல இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் நடிகர்களை கொண்டாட வேண்டும்.
இந்த படம் தமிழில் மட்டும் தான் தயாராகிறது. கேரளாவிலும் இந்த படம் தமிழில் தான் வெளியாகும். கேரளாவில் உள்ள மக்கள் தமிழ் நன்கு அறிவார்கள். நான் நடித்த சின்னத்தம்பி படம் 100 நாட்களுக்கு மேல் அங்கு ஓடியது.
அதேபோல தமிழ் நன்றாக பேசக் கூடியவர்களாக இருக்கிறார்கள். தமிழ் படங்கள் நேரடியாகவே அங்கு வெளியாகிறது. அங்கு மக்களிடம் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதுபோல இந்த படமும் கேரளாவிலும் வெளியாகும்” என்று நடிகர் பிரபு கூறினார்.
தயாரிப்பாளர் ஏ.ஆர்.மதியழகன் கூறும்போது, “இந்த படம் நகைச்சுவை படம். எனக்கு ரொம்ப பிடித்த கதை. பிரபு சார் நடித்தால் நல்லா இருக்கும் என்று பேசினோம். அதன்படி பிரபு சார் அவர்களை அணுகி கதையைச் சொல்லி அவரை நடிக்க வைக்கிறோம்.
சினிமா உலகில் அவர் மிகப்பெரிய லெஜன்ட். நல்ல கலாச்சாரம், நல்ல பண்பாடு கொண்டவர்.  இந்த மாதிரி கதையில் அவர் நடிப்பது எங்களுக்கு பெரிய பெருமை. அவர் நடிப்பது எங்களுக்கு கிடைத்த வரம்” என்றார்.

Latest articles

’ஐகான் ஸ்டார்’ அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இந்தியா முழுவதும் 3 லட்சம் மாணவிகளிடம் HPV விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்!

சினிமா மற்றும் கொண்டாட்டங்களைத் தாண்டி ரசிகர்கள் இயக்கத்தை சமூக நலனுக்கான முயற்சியாக மாற்றும் வகையில், ’ஐகான் ஸ்டார்’ அல்லு...

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது!

ஸ்மார்ட்டான உள்ளடக்கத் தேடலுடன், மேலும் வளமான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில், Zee 5 தனது மறுவடிவமைக்கப்பட்ட தயாரிப்பு...

விநோத உலகத்தை  அறிமுகப்படுத்தும் ‘ட்ரோன்ஸ்’ படத்தின் மிரட்டலான 3 ஃபர்ஸ்ட் லுக், குவியும் வரவேற்பு!

GM Morgan Films நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ஆர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் உருவாகி வரும் வித்தியாசமான சர்ரியலிஸ்ட்...

சந்தீப் கிஷன் நடிக்க ஜேசன் சஞ்சய் இயக்கிய’சிக்மா’ திரைப்படத்தின் ப்ரீ – ரிலீஸ் நிகழ்வு உற்சாகமாக நடந்தது!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா...

More like this