HomeGeneralஎன் ஹீரோ எந்த விதத்திலும் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காக நானும், என் குழுவினரும் மிகவும் கடினமாக...

என் ஹீரோ எந்த விதத்திலும் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காக நானும், என் குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்தோம்; அது படத்தில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது! -‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் இயக்குநர் தென்பாதியான் பேச்சு

Published on

கே ஜெ ஆர் கதாநாயகனாக நடித்து கடந்த வாரம் வெளியான ‘அங்கீகாரம்’ திரைப்படத்தின் வெற்றி விழா 1.7.2026 அன்று சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் இயக்குநர் தென்பாதியான் பேசியதாவது…, “இந்தப் படத்திற்கு நாங்கள் எதிர்பார்த்ததைவிட நீங்கள் கொடுத்த ஆதரவு மிகவும் முக்கியமானது. அதற்காக பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தக் கதையை முதலில் கேஜிஆர் ஸ்டுடியோவிடம் கொண்டு சென்றேன். அப்போது வேறு ஒரு பெரிய ஹீரோவிடம் இந்தக் கதையைச் சொன்னோம். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் வேறு ஒரு கதை செய்யச் சென்றுவிட்டேன். பிறகு, இந்தக் கதையை நம்மைத் தவிர வேறு யாராலும் சரியாக செய்ய முடியாது என்று தோன்றியதால், மீண்டும் இந்தக் கதையை கையில் எடுத்தேன். அப்போது கேஜிஆர், ‘இந்தப் படத்தில் நானே நடிக்கிறேன்’ என்று கூறினார். அதன்பிறகு அவரை வைத்து இந்தப் படத்தை மீண்டும் தொடங்கினோம். இந்தக் கதைக்காக அவர் மிகப்பெரிய உழைப்பைக் கொடுத்தார். என் ஹீரோ எந்த விதத்திலும் தவறாகத் தெரியக்கூடாது என்பதற்காக நானும், என் குழுவினரும் மிகவும் கடினமாக உழைத்தோம். அது படத்தில் நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது. நீங்கள் கொடுத்த விமர்சனங்களிலும் அது பிரதிபலித்திருக்கிறது.

இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் அமைந்தார்கள். ஜிப்ரான் சார் அற்புதமான இசையைக் கொடுத்தார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், இந்தக் கதையைக் கேட்டுவிட்டு, ‘இந்த ஹீரோவுக்கா?’ என்று முதலில் கேட்டார். ஆனால் கதையை முழுமையாகக் கேட்ட பிறகு மிகவும் பிடித்துப்போய், இந்தப் படத்தில் இணைந்தார். அவர் இணைந்த பிறகு, இந்தப் படம் இன்னும் பெரிய உயரத்தை அடைந்தது. என் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் இந்தப் படத்திற்காக அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். நாங்கள் நினைத்தது அனைத்தும் இந்தப் படத்தில் நடந்திருக்கிறது. இந்தப் படம் அடுத்த வாரங்களிலும் இன்னும் சிறப்பாக ஓட வேண்டும். அதற்கு உங்கள் அனைவரின் தொடர்ந்த ஆதரவு வேண்டும். நன்றி.”

கே ஜெ ஆர் பேசியதாவது.., முதலில், மக்கள் டிக்கெட் வாங்கி படம் பார்த்து ஆதரவு அளித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதற்கு காரணம் பத்திரிகையாளர்கள் மட்டுமல்ல, யூடியூப் சேனல்கள், ஆன்லைன் ஊடகங்கள் என அனைவரும் இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். ஒரு நடிகராக இந்த வரவேற்பு எனக்கு 100 சதவீதம் அல்ல, 1000 சதவீதம் மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த விழாவில் ஒரு நடிகராக நிற்பதில் பெருமையாக இருக்கிறது.

இந்தப்படம் பெரிய வெற்றி இல்லை மீடியம் தான். எனக்கு தெரிந்தவர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் என் காதுபடவே வேறு கதை எடுத்திருக்கலாம் வேறு ஹீரோ நடித்திருக்கலாம் என்றார்கள். ஆனால் இப்போது மக்கள் வரவேற்பு தர ஆரம்பித்து இருக்கிறார்கள். இதற்கு முழு காரணம் என இயக்குநர் தென்பாதியான் தான் அவர் சொன்னதை நான் செய்தேன். தொழில்நுட்பக் குழு அத்தனை பேரும் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். இந்தப்படம் ஜெயித்தால் தான் இவர்களுக்கு வாழ்க்கை அதனால் இந்தப்படத்திற்கு உங்கள் ஆதரவை தாருங்கள்.

இன்னும் 10 வருடத்தில் நான் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகனாக ஜெயிப்பேன் நான் இந்த தயாரிப்பாளர்களை ஜெயிக்க வைப்பேன். கைவிட மாட்டேன். இந்தப்படத்தில் உழைத்த அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களும் எனக்காக காசு பணம் பார்க்காமல் வேலை செய்தார்கள். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், ஜிப்ரான் உட்பட அனைவருக்கும் நன்றி உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.”

நடிகர் ஆண்டனி, நடிகை இசபெல்லா, நடிகை வசுந்தரா, இசையமைப்பாளர் ஜிப்ரான், சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன், ஒளிப்பதிவாளர் ஏ.விஸ்வநாத், எடிட்டர் தினேஷ்குமார், தயாரிப்பாளர் அருள் முருகன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

 

Latest articles

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...

உலகநாயகன் கமல்ஹாசனுடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உலகநாயகன் கமல்ஹாசனை சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள ராஜ்கமல்...

More like this

வதந்தி சீசன் 2 – எனக்கான அடையாளத்தை அளித்தது – நடிகர் அர்ஜுன் சக்கரவர்த்தி

வால்வாட்சர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இயக்குநர்கள் புஷ்கர்- காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்...

தொடர் வெற்றி படைப்புகளோடு தென்னிந்திய சினிமாவின் முக்கிய தயாரிப்பு நிறுவனமாக உருவெடுத்துள்ள ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'பிளாஸ்ட்' பிளாக்பஸ்டர்...

மைத்ரி சினிமா விமர்சனம்

காதலும் காதலர்களைப் பிரிக்கிற சாதிவெறியும் என சமூக அவலத்தை மையப்படுத்தி மீண்டும் ஒரு படம். நாயகன் ஹாக்கி பிளேயர். அவரைவிட...