HomeGeneralஅல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

Published on

பான் இந்தியா என்ற டெர்ம் உருவாவதற்கு முன்பே, நடிகர் அல்லு அர்ஜுன் நாடு முழுவதும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியிருந்தார். அவரது திரைப்படங்கள், பாடல்கள், நடன அசைவுகள் மற்றும் தனித்துவமான திரையிருப்பு ஆகியவை மொழி மற்றும் எல்லைகளைத் தாண்டி ரசிகர்களை கவர்ந்துள்ளன.
இதற்கு சமீபத்திய உதாரணமாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சமூக வலைதள பதிவுகளில் ஒன்றில் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்தியுள்ளதை சொல்லலாம். இது வெறுமனே கிரியேட்டிவ் தேர்வாக மட்டுமல்லாமல், இன்று அல்லு அர்ஜுன் பெற்றிருக்கும் பிரபலத்தையும் கலாச்சார முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்துகிறது.
‘AA23’ திரைப்படம் இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் நிலையிலேயே அதன் தீம் இசை ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இன்னும் வெளியாகாத ஒரு படத்தின் இசையும் களமும் தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பது என்பது மிகச் சில நடிகர்களுக்கே நடக்கும். அல்லு அர்ஜுன் ஒரு வெற்றிகரமான நடிகர் என்ற அடையாளத்தைத் தாண்டி கடந்த சில ஆண்டுகளில் இந்திய சினிமாவின் கலாச்சார அடையாளங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளார். அவரது திரைப்படங்கள் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
’AA23’ திரைப்படம் பற்றி எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற தருணங்கள்தான் அல்லு அர்ஜுன் அசல் பான் இந்தியா நட்சத்திரம் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகின்றன.

Latest articles

யோகிபாபுவின் கெணத்த காணோம் கிராமப்புற காமெடி திரைப்படம் இப்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது!

மறைந்த இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கிய இந்த தமிழ் திரைப்படம், தண்ணீர் பற்றாக்குறை, வாழ்வாதாரப் போராட்டம் மற்றும் எதிர்பாராத...

பாக்ஸ் ஆபீஸ் வசூல் சாதனை: சரித்திரம் படைத்த தந்தை – மகன், சிரஞ்சீவி – ராம்சரண்

பல புகழ்பெற்ற குடும்பங்களையும் வெற்றிகரமான தலைமுறைகளையும் ஒரே குடும்பத்தில் இருந்து உருவான பல நட்சத்திரங்களையும் இந்திய திரையுலகம் சந்தித்துள்ளது....

இயக்குநர் பா. ரஞ்சித் உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் திரளாக பங்கேற்பில் உற்சாகமாக நடந்த டார்க் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

https://www.youtube.com/watch?v=fKUPkoYkhII அறிமுக இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் இயக்கத்தில் அஜய் கார்த்தி நடித்திருக்கும் 'டார்க்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா...

உற்சாகமாக நடந்த, பவிஷ் நாராயணன் நடித்துள்ள ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

பவிஷ் நாராயணன் நடிக்கும் ‘லவ் ஓ லவ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் 15.6.2026 அன்று சென்னையில் நடந்தது....

More like this