HomeCinemaஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.'

ஏப்ரலில் வெளியாகிறது 72 வயது மக்கள் கலைஞன் லக்ஷ்மணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஆஸ்ட்ரோ லேனா.’

Published on

தமிழ் சினிமாவில் வித்தியாசமான மற்றும் புதுமையான முயற்சிகளோடு வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு பெறுவதுண்டு. அப்படி ஒரு வித்தியாசமான கதைக்கருவுடன், விறுவிறுப்பான குற்ற விசாரணை திரைப்படமாக உருவாகி வருகிறது ‘ஆஸ்ட்ரோ லேனா.’
பல ஆண்டுகளாக கலை உலகில் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த மக்கள் கலைஞன் லக்‌ஷ்மண் நாயகனாக நடிக்கிறார். 72 வயதாகும் லக்‌ஷ்மண், வயதை பொருட்படுத்தாமல், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி நடிகர்களின் வரிசையில் கதையின் நாயகனாக முத்திரை பதிக்க களம் இறங்குகிறார்.
கதையின் நாயகனாக நடிப்பதோடு, கதை எழுதி இயக்கும் மக்கள் கலைஞன் லக்‌ஷ்மணின், அனுபவம் மற்றும் கலை மீதான ஆர்வம் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத மற்றும் முயற்சித்திராத புதுமையான கதைக்கருவுடன் உருவாகி வரும் இந்த படத்தில் ஜோதிடம் மற்றும் குற்ற விசாரணை என இரண்டு வெவ்வேறு உலகங்களை இணைக்கும் வித்தியாசமான திரைக்கதை கையாளப்பட்டுள்ளது.
படத்தில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிப்பில் பெயர் பெற்ற செந்தில், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, கஞ்சா கருப்பு, பவர் ஸ்டார் சீனிவாசன், ஷகிலா, அப்புக்குட்டி, குண்டு ஆர்த்தி, பிரியங்கா, பாவா லக்ஷ்மணன், ரேகா, ராதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் மையக் கருத்து ஜோதிடத்தின் மூலம் குற்றங்களை கண்டுபிடிப்பது. கிரக நிலைகள், ஜாதக ரகசியங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கம் போன்றவற்றின் அடிப்படையில் மர்மமான குற்றங்களை கண்டுபிடிக்கும் ஒரு சுவாரஸ்யமான கதைக்களம் இப்படத்தில் இடம்பெறுகிறது. இந்த புதிய அணுகுமுறை தமிழ் சினிமாவில் இதுவரை காணாத ஒரு வித்தியாசமான முயற்சியாக பார்க்கப்படுகிறது.
படத்திற்கு சங்கர் – கணேஷ் இசையமைக்கிறார். இயக்குநர் எஸ்.வினோத்குமார் பாடல்கள் எழுதியுள்ளார். படப்பிடிப்பு மலேசியா, சிங்கப்பூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் வேகமாக நடைபெற்று வருகிறது.
நகைச்சுவை, சஸ்பென்ஸ், திருப்பங்கள் மற்றும் வித்தியாசமான கதை சொல்லல் ஆகிய அனைத்தையும் இணைத்து, பார்வையாளர்களுக்கு புதுமையான திரை அனுபவத்தை வழங்கும் திரைப்படமாக உருவாகி வருவதோடு, தனித்துவமான கதைக்களம் மற்றும் நட்சத்திரங்கள் இணைந்திருப்பதால் இந்த படம் தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தை வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

Latest articles

நயன்தாரா – கவின் நடித்துள்ள ஹாய் ஆகஸ்ட் 28-ல் ரிலீஸ்!

அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா...

நகைச்சுவையும் ஃபேண்டஸியும் கலந்த ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்கிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு!

உத்ரா புரொடக்ஷன்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் மற்றும் தியா ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி,...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்திருக்கும் ‘தி பாரடைஸ்’ படத்தின் டீசர் வெளியீடு

https://www.youtube.com/watch?v=LMqE7OAewkg நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்!- நானி- ஸ்ரீகாந்த் ஒடேலா-...

இந்த படம் மருத்துவத் துறை செவிலியர்கள், முன்கள பணியாளர்களின் கஷ்டங்களைப் பேசுகிறது! -தான் முதலமைச்சராக நடித்துள்ள’செய் செய்யாதே’ பட விழாவில் அரசியல் ஆளுமை ஹெச் ராஜா பேச்சு

இளம் தலைமுறையினருக்கு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ளது ‘செய்! செய்யாதே!’ திரைப்படம். அரசியல்வாதி ஹெச். ராஜா தமிழ்நாடு...

More like this