HomeCinemaஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் இணையும் படம் பிரமாண்டமாக உருவாகிறது!

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் இணையும் படம் பிரமாண்டமாக உருவாகிறது!

Published on

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இந்திய சினிமாவில் சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிரமாண்ட திரைப்படம் துவங்கியுள்ளது.

இந்த கனவு கூட்டணி, ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான திரையனுபவத்தை வழங்கும் என பெரும் நம்பிக்கையை உருவாக்கியுள்ளது. பவர்ஃபுல் வீடியோவுடன் அறிவிப்பு வெளியான தருணத்திலேயே ரசிகர்களின் எதிர்பார்ப்பை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, இப்படம்  இந்திய சினிமாவில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

அறிவிப்பு வீடியோ வெளியானதிலிருந்து, படத்தின் பிரம்மாண்டம் மற்றும் கதையின் தன்மை குறித்து ரசிகர்கள் மத்தியில் தீவிரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

தனித்துவமான ஸ்டைல், மின்னல் வேக நடனங்கள், மாஸ் ஆக்ஷன் மற்றும் வலுவான திரை நடிப்பு என பான்-இந்தியா ஸ்டார்டம் கொண்ட அல்லு அர்ஜுன், தனித்துவமான  கதை சொல்லல் மற்றும் மாறுபட்ட மாடர்ன் மேக்கிங் மூலம் கமெர்ஷியல் சினிமாவை மறுவரையறை செய்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் — இந்த கூட்டணி தான் இப்படத்தின் மிகப்பெரிய பலம். மேலும், ராக் ஸ்டார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் என்பதும் எதிர்பார்ப்பை பலமடங்கு உயர்த்தியுள்ளது.

AA23 (தற்காலிக தலைப்பு) என அழைக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 2026ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. லோகேஷ் கனகராஜின் வேகமான, மாறுபட்ட இயக்கத்தில், அல்லு அர்ஜுன் இந்தப் படத்தில் இதுவரை ரசிகர்கள் காணாத ஒரு முற்றிலும் புதிய, அதிரடி தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுவதால், இது சமீப காலத்தில்  மிக அதிகம் எதிர்பார்க்கப்படும் திரைப்பட நிகழ்வாக உருவெடுத்துள்ளது.

இந்தப் பிரம்மாண்ட முயற்சிக்கு தலைமையேற்கும் முன்னணி தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ரவி சங்கர் ஆகியோருடன் இணைந்து, பன்னி வாஸ் இணைத் தயாரிப்பாளராகவும், நட்டி, சாண்டி, ஸ்வாதி ஆகியோரும் தயாரிப்பு குழுவில் இணைந்துள்ளனர்.

Latest articles

இந்தியாவின் முதல் ஏ.ஐ. ஒருங்கிணைந்த செங்குத்து பல்கலைக்கழகமான வேல்ஸ் திருவான்மியூர் வளாகத்தை ஸ்ரீதர் வேம்பு திறந்து வைத்தார்!

சென்னை, ஜூலை 11, 2026: வேல்ஸ் பல்கலைக்கழகம், திருவான்மியூரில் இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைந்த செங்குத்து...

மணிரத்னம் சார் பள்ளியில் கற்ற அனுபவங்கள் இந்தப் படத்தை உருவாக்க மிகவும் உதவியாக இருந்தது! -‘அன்பே டயானா’ பட விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் 

ஜமா பட இயக்குநர் பாரி இளவழகன் நடித்துள்ள ‘அன்பே டயானா’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் மற்றும்...

I, Nobody சினிமா விமர்சனம்

'கெட்டியோலானு என்டே மாலாக்கா', 'ரோஷாக்' ஆகிய படங்களை இயக்கிய நிசாம் பஷீர் இயக்கியுள்ள படம். வங்கி கொள்ளை என்ற...

புத்துணர்ச்சியும் பாஸிடிவ் உணர்வுகளும் நிரம்பிய துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கும் பான் இந்தியா திரைப்படத்திற்கு ‘ஸ்ரீ ஸ்ரீ’ என பெயரிடப்பட்டுள்ளது…...

More like this